Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்


நெல் சாகுபடியில் புதிய நுட்பங்கள்!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 9-ம் தேதி, ‘நெற்பயிர் பூச்சி மேலாண்மை’ 10-ம் தேதி, ‘கொடிவகைக் காய்கறிகள் சாகுபடி’ 16-ம் தேதி, ‘வெண்பன்றி வளர்ப்பு’, 17-ம் தேதி, ‘நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்’ 21-ம் தேதி, ‘கால்நடைகளுடன் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘தென்னை, நெல் மற்றும் பயறு வகை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

தண்டோரா

கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 8-ம் தேதி, ‘நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, 11-ம் தேதி, ‘கம்பு மற்றும் கேழ்வரகில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்’ 17-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டைமீன் வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 29-ம் தேதி, ‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

ஜப்பானிய காடை!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 9-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பும் அதன் விற்பனை வாய்ப்புகளும்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம்  ரூ100. தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 96292 46586.

தண்டோரா

இயற்கைப் பூச்சிவிரட்டி!
 
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், நவம்பர் 5-ம் தேதி, ‘இயற்கை பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம்  ரூ100. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism