Published:Updated:

மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!

மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!
பிரீமியம் ஸ்டோரி
மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!

பிரச்னை எம்.திலீபன், படங்கள்: எஸ்.ராபர்ட்

“காவிரி நீருக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காவிரி ஆறே அழிந்துகொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை” என்று ஆதங்கப்படுகிறார்கள், அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம மக்கள். 

“இப்பகுதியில் அமைந்திருக்கும் மணல் குவாரியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!
மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய வாளைக்குறிச்சியைச் சேர்ந்த மதன், “தா.பழூர் அருகே மேலக்குடிகாடு பக்கத்தில் தென்கச்சிபெருமாள் நத்தம், வாளைக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் உள்ளன. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட முப்பது அடிக்கும் ஆழமாக மணலை அள்ளுகிறார்கள். அதேபோல காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைதான் மணல் அள்ள வேண்டும். ஆனால், இந்தக் குவாரிகளில் விடிய விடிய மணல் அள்ளப்படுகிறது. அதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. திருமானூர், தா.பழூர் கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கான மணல் லாரிகள், அதிவேகத்தில் செல்வதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன” என்றார், வருத்தத்துடன்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பி.ஜே.பி மாவட்ட விவசாய அணித்தலைவர் செல்வம், “தமிழகத்தில் இருநூறு கிலோமீட்டர் தூரம் ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே, எந்த அரசும் தடுப்பணைகள் கட்டுவதில்லை. தடுப்பணைகள் கட்டினால் மணல்குவாரியின் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியாது என்பதுதான் காரணம்” என்றார்.

குவாரி தரப்பில், குமார் என்பவரிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினோம். “நாங்கள் அரசின் விதிமுறைகளின்படிதான் மணல் அள்ளுகிறோம். இப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களை மிரட்டி பணம் கேட்டனர். நாங்கள் கொடுக்காததால், சில கட்சிக்காரர்களோடு சேர்ந்து எங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.

மணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்!

மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் இதுகுறித்துச் தெரிவித்தபோது, “அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்யச் சொல்கிறேன். குவாரிகாரர்கள் விதிகளை மீறியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism