அனைவருக்கும் பசுமை வணக்கம்!

காவிரி என்றாலே காலம், காலமாக பிரச்னைதான். இன்று சித்தராமையா சிறைப்பிடிக்கிறார்... அவருக்குத் துணைபோகிறார் நரேந்திர மோடி. உரிமையை நிலைநாட்ட துடிக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், அது அத்தனை எளிது அல்ல போலிருக்கிறது.

காவிரிக்காக தமிழகமே ஒன்று திரண்டு ரயில் மறியல் போராட்டத்தைப் பெரும் எழுச்சியுடன் நடத்தி முடித்திருப்பது, கர்நாடக மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசையேகூட கொஞ்சம் அதிர வைத்திருப்பது என்னவோ உண்மைதான்.

கர்நாடகாவில் ஹாசன், மண்டியா, மைசூரு, பெங்களூரு வரையில் மட்டுமேதான் காவிரிக்காகப் போராட்டங்கள் நடப்பது வழக்கம். ஏன் தமிழகத்திலும்கூட காவிரி நதி பாயும் பதினொரு மாவட்டங்களில் நான்கைந்து மாவட்டங்களில் மட்டுமே இப்போராட்டங்கள் படபடப்பது வழக்கம். ஆனால், இந்தத் தடவை ஒட்டுமொத்த தமிழ்நாடும் திரண்டெழுந்தது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தங்களுக்குப் பலவித சிரமங்கள் ஏற்பட்டபோதும், தமிழக மக்கள் அனைவரும் இப்போராட்டங்களுக்குத் துணை நின்றிருக்கின்றனர்.

ஆம், முதல்முறையாக அனைத்து எதிர்க்கட்சிகளுமே கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரையிலும் கரம்கோத்தன... தமிழக விவசாயிகளின் வலியை உலகுக்கே உணர்த்தியிருப்பதோடு, தமிழகத்தின் வலிமையையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

கடைந்தெடுத்த சுயநலத்தோடு செயல்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் மத்திய ஆளும்கட்சியான பி.ஜே.பி-க்கும், கர்நாடக மாநில ஆளும்கட்சியான காங்கிரஸுக்கும் அறவழியில் சூடு கொடுத்திருக்கிறது!

மத்திய அரசின் போக்கில் இனியாவது மாற்றம் வரும் என்று நம்புவோம்.

- ஆசிரியர்