Published:Updated:

டி.ஏ.பி. 2,000...நெல் 1,180...

எகிறும் உர விலை... பதறும் விவசாயிகள்... காசி.வேம்பையன் படம்: என். விவேக்

டி.ஏ.பி. 2,000...நெல் 1,180...

எகிறும் உர விலை... பதறும் விவசாயிகள்... காசி.வேம்பையன் படம்: என். விவேக்

Published:Updated:

பிரச்னை

##~##

ரசாயன உரங்களுக்கான விலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து கிடக்க... உடைந்து போய் கிடக்கிறார்கள், அந்த உரங்களை நம்பியே சாகுபடியில் இருக்கும் விவசாயிகள். 'உர விலையைக் கட்டுப்படுத்து... தேவையான உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்து' என்று அரசாங்கத்தை நோக்கி குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதொடர்பாக, சமீபத்தில் திருச்சியில் கூடிப் பேசிய காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர், மத்திய-மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதோடு... அடுத்தக் கட்டமாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடவும் தீர்மானித்துள்ளனர்.

டி.ஏ.பி.  2,000...நெல்  1,180...

இதைப் பற்றி சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதனிடம் கேட்டபோது, ''உரத்தின் விலையை, உர நிறுவனங்களே நிர்ணயம் செய்வதற்கு அனுமதி கொடுத்திருப்பதால்தான் இந்தப் பிரச்னையே! இதைப் பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல் விலை போல, திடீர் திடீர் என்று உரவிலையையும் ஏற்றிவிடுகின்றன உர நிறுவனங்கள். இதன் எதிரொலியாக, சில்லரை விற்பனையிலும் இஷ்டம்போல விலை உயர்த்தப்பட்டு, விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

'ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,500 ரூபாய் விலை வேண்டும்' என்று போராடிக் கொண்டிருந்தாலும், ஐந்து ஆண்டு காலமாக நெல் உற்பத்தி குறைந்துவிடாமல், விவசாயிகள் பார்த்து கொண்டதற்கு காரணமே... உரத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுதான். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உர விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, அக்டோபர் 11-ம் தேதிக்குப் பிறகு தாறுமாறாக விலை உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கவலையோடு சொன்ன ரெங்கநாதன், நெல் விலை மற்றும் உரவிலையை ஒப்பிட்டுச் சொன்ன விஷயம், அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

''மத்திய அரசு, கடந்த ஆண்டைவிட குவிண்டால் நெல்லுக்கு

80 ரூபாயை அதிகப்படுத்தி கொடுத்திருக்கிறது. மாநில அரசின் ஊக்கத் தொகையையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,180 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், 500 ரூபாய்க்கு விற்பனையான டி.ஏ.பி. 950 ரூபாய், 1,000 ரூபாய் என்று விற்பனையாகிறது.

480 ரூபாய்க்கு விற்பனையான 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம்...

750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை உரத்துக்கான விலையை நான்கு முறை  உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒரு டன் டி.ஏ.பி. உரத்துக்கு, கிட்டதட்ட 20 ஆயிரம் ரூபாயை உர நிறுவனங்களுக்கு மானியமாகக் கொடுக்கிறார்கள். 50 கிலோ உர மூட்டையின் விலை, கிட்டதட்ட 1,000 ரூபாய். மானியத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்... 2,000 ரூபாய்க்கு வந்துவிடுகிறது (விவசாயி 1,000 ரூபாய் கொடுக்கிறார்... அரசாங்கம் 1,000 ரூபாய் கொடுக்கிறது). இந்த விலை கொடுத்து உரத்தை வாங்கிப் போட்டு உற்பத்தி செய்தால், எங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும்?'' என்று கேட்ட ரெங்கநாதன்,

டி.ஏ.பி.  2,000...நெல்  1,180...

''இப்படிப்பட்ட சூழலில், இந்த உரத்தையெல்லாம் போட்டுத்தான் விவசாயம் பார்க்க வேண்டுமா? என்கிற கேள்வி விவசாயிகளுக்கு எழுந்திருக்கிறது.

இதற்கு மாற்றுவழி... மாட்டுச்சாணம் மாதிரியான தொழுவுரங்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்வதாகத்தான் இருக்கும். ஆம்... இயற்கை பாதி, செயற்கை பாதியுமாக செய்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் மாடுகளில், 1,25,000 மாடுகள் மாதம்தோறும் கேரளாவுக்கு கறிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் மாட்டுச் சாணத்துக்கு எங்கே போவது?'' என்று வருத்தக் கேள்வியை எழுப்பி முடித்தார்.

இது தொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் தாமோதரனிடம் கேட்டபோது, ''நான் இப்போதுதான் இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுள்ளேன். உடனடியாக அதிகாரிகளிடம் பேசி, விஷயத்தை முதல்வர் அம்மாவின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறேன்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism