Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

 இலவசப் பயிற்சிகள்

மதிப்புக்கூட்டிய பழம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 18-ம் தேதி புல் வகைகளுக்கான  தெளிப்பு நீர்ப் பாசனம்; 22-23 தேதிகளில் மதிப்புக்கூட்டிய பழப் பொருட்கள் தயாரிப்பு  ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம்,

காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

முன்னேற வைக்கும் முயல்!

##~##

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 11-ம் தேதி செம்மறி ஆடுகளில் குடற்புழு நீக்கம்; 15-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு; 17-ம் தேதி கறவை மாடுகளில் நோய் தடுப்பு மேலாண்மை; 22-ம் தேதி முன்னேற வைக்கும் முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266650, 266484.

ஆதாயம் தரும் ஆடு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 16-ம் தேதி  நாட்டுக் கோழி வளர்ப்பில் நவீன உத்திகள்; 23-ம் தேதி ஆதாயம் ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.  முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி: 0427-2440408

மலைமாடு!

பாரம்பரிய மூலிகை மருத்துவம் மற்றும் மலை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி நவம்பர் 17-18 தேதிகளில் நடைபெற உள்ளது. இடம்: குமாபட்டி கிராமம், கிருஷ்ணன்கோயில் வழி, விருதுநகர் மாவட்டம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, இருப்பிட வசதி வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஏற்பாடு: சேவா, நபார்டு வங்கி.

தொடர்புக்கு: சேவா, 45, டி.பி.எம் நகர், விராட்டிபத்து, மதுரை-625 016. தொலைபேசி: 0452-2380082, 2380943.

அக்ரி மீட்-2011

வளம் குன்றா வேளாண்மை குறித்து, 'கர்நாடகா குளோபல் அக்ரி பிஸனஸ் அண்டு ஃபுட் பிராஸசிங் சம்மீட்-2011’ என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. நாள்: டிசம்பர் 1-2. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் எக்ஸிபிஷன் சென்டர், தும்கூர் ரோடு, பெங்களூரு. இயற்கை விவசாயம், தோட்டக்கலைப் பயிர்கள், பண்ணைக் கருவிகள், மதிப்புக்கூட்டியத் தொழில்நுட்பங்கள்... போன்றவை பற்றி வல்லுநர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். முன்பதிவு அவசியம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: கர்நாடக மாநில அரசு

மேலும் விவரங்களுக்கு:

The Managing Director
Karnataka State Agricultural Produce
Processing and Export Corporation Limited (A Government of Karnataka Enterprise)
No.17, Richmond Road, Bangalore-560025
INDIA.
Phone: +91 80 2227 1194 / 2224 3082 Fax: +91 80 2227 8974,
Email: kappec@dataone.in, Additional Information,
http://www.bounteouskarnataka.com.

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism