Published:Updated:

கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!
கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!

முகவரிகள்துரை.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்க, மாவட்டந்தோறும் மையங்கள் செயல்படுவதுபோல... கால்நடை வளர்ப்பாளர்களுக்காகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர்.

கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!

“நாங்கள் கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பல உதவிகளை விவசாயிகளுக்குச் செய்து வருகிறோம். பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகளின் வசதிக்காகக் கால்நடை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் விவசாயத்துக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்போது புதிய பண்ணைக் கருவிகளும், மருத்துவ முறைகளும் விவசாயிகளுடைய கருத்துக்களின் அடிப்படையில் தரப்படுகின்றன. இவை அனைத்தையும் விவசாயிகள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். தவிர, எளிதில் வாங்கக்கூடிய விலையிலும் கருவிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. எங்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இயந்திரங்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாகவும், ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்த கூடியவையாகவும் இருக்கின்றன. கால்நடை வளர்ப்பில் என்னென்ன வெற்றிடங்கள் ஏற்பட்டனவோ... அவை அனைத்தையும் நிறைவு செய்யும் வகையில் புதிய பண்ணைக்கருவிகளும், மருத்துவத் தொழில்நுட்பங்களும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கால்வடை வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்திச் செய்யவும், கால்நடைகளைப் பராமரிக்கவும் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை விவசாயிகள் அணுகலாம்” என்றதோடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டார்.

கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!



கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்:


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,

மாதவரம் பால் காலனி, சென்னை -51.
தொலைபேசி: 044 25551571

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
வேப்பேரி,
சென்னை – 600 007
தொலைபேசி: 044 25381506

கால்நடை மருத்துவ அறிவியலுக்கான முதுகலைப்பட்ட ஆராய்ச்சி நிலையம்,

காட்டுப்பாக்கம்- 603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044 27529548  

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
திருப்பரங்குன்றம்,
மதுரை- 625 005.
தொலைபேசி- 0452 2483903

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 63, காலப்பட்டி பிரிவு,
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர்- 641 035.
தொலைபேசி: 0422 2669965

கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம், கடலூர் - 607 001.
தொலைபேசி: 04142 290249.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டலாப்பட்டி சாலை,
தர்மபுரி-636 703
தொலைபேசி: 04342-288 420

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624 005.
தொலைபேசி: 0451 2423147

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
எண். 306, சத்தி சாலை,
வீரப்பன் சத்திரம்,
ஈரோடு-638 004.
தொலைபேசி: 0424 2291482

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 4/221, பாண்டுதாகரன்புதூர்,
மண்மங்களம் (தபால்),
கரூர்-639 006.
தொலைபேசி: 04324 294335.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண்: 1/893, ராயகோட்டை சாலை, கிருஷ்ணகிரி-635 001.
தொலைபேசி: 04343 225105

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
ஜீ.பீ. வளாகம்,
மேல்மருவத்தூர்-603 319.
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044 27529548

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
எண்: 2,  கொட்டுப்பாளையம் கிணத்தடி சந்து,
வெளிப்பாளையம்,
நாகப்பட்டினம்-611 001.
தொலைபேசி: 04365 224123

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
எண். 4-114, பராகை (அஞ்சல்)
கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவில்-629 601.
தொலைபேசி: 04652 286843

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
16-A , அன்னமராஜா நகர்,
புதிய பஸ்நிலையம் எதிரில், ராஜபாளையம்-626 117.
தொலைபேசி: 04563 220244

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
எண்: 1 / 1943, முதல்தளம்,
சையது இப்ராகிம் நகர்,
தெற்கு பாரதி நகர்,
மாவட்ட ஆட்சியர் வளாக அஞ்சல்,
ராமநாதபுரம்–623 503.
தொலைபேசி: 04567 231807

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
இந்திரா நகர், எலம்பலூர் (அஞ்சல்),
பெரம்பலூர் - 621 220.
தொலைபேசி: 04328 291459
 
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

கால்நடை மருத்துவமனை வளாகம்,
ப்ரெட்ஸ் சாலை,
கலெக்டர் அலுவலகம் அருகில்,
சேலம்-636 001.
தொலைபேசி: 0427 2410408

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பிள்ளையார்பட்டி,
தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை
வல்லம் அஞ்சல்,
ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில்,
தஞ்சாவூர்-613 403
தொலைபேசி: 04362 204009

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
எண்:  7/2 கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு, அகதிகள் முகாம் அருகில்,
திருச்சி-620003.
தொலைபேசி: 0431 2331715

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம்(பழைய பேருந்துநிலையம் எதிரில்),
காமராஜர் சாலை,
திருப்பூர்-648 604.
தொலைபேசி: 0421 2248524.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பைபாஸ் ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி அருகில்,
வட ஆண்டபட்டு, திருவண்ணாமலை-606604.
தொலைபேசி: 04175 206577

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவச்சாரி,
வேலூர்-632009.
தொலைபேசி: 0416 2253022.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையங்கள்:

வேளாண் அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி: 044 27452371

வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி,
சிவகங்கை மாவட்டம்–630206.
தொலைபேசி: 04577 264288

வேளாண் அறிவியல் நிலையம்,
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம்,
நாமக்கல்-637001.
தொலைபேசி: 04286 266345

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு