பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 24-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 25-ம் தேதி, ‘காளான் உற்பத்தி தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.

தொலைபேசி: 04285 241626.

சுருள்பாசி வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், நவம்பர் 17-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப்பண்டங்கள் தயாரித்தல்’, 22-ம் தேதி, ‘வனமரங்கள் சாகுபடி’, 24-ம் தேதி, ‘காளான் வளர்ப்பு’, 25-ம் தேதி, ‘இயற்கை பூச்சிவிரட்டி தயாரித்தல்’ 29-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885-75716.

ஆடு வளர்ப்பு!

பெரம்பலூர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பர் 16-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04328 291459.

கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 17-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டைமீன் வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 29-ம் தேதி, ‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,தொலைபேசி: 04577 264288.

வெண்பன்றி வளர்ப்பு!

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 16-ம் தேதி, ‘வெண்பன்றி வளர்ப்பு’, 17-ம் தேதி, ‘நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்’ 21-ம் தேதி, ‘கால்நடைகளுடன் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘தென்னை நெல் மற்றும் பயறு சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறமை மாடு வளர்ப்பு

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 19-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04175 206577

கட்டணப் பயிற்சிகள்

மாடித் தோட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், நவம்பர் 26-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தீவன உற்பத்தி!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 23-ம் தேதி ‘தீவனப்புல் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம்: ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 96292 46586.

தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு