Published:Updated:

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

சுற்றுச்சூழல்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

ருவம் தவறிப் பெய்யும் மழை, வாட்டி எடுக்கும் வெயில், புரட்டி எடுக்கும் பெருவெள்ளம்... இவை அனைத்துக்கும் பருவநிலை மாற்றம்தான் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், அதன் அடிநாதமாய் இருப்பது காடுகள் அழிந்ததுதான். மனிதனின் சுயநலத்துக்காக வனத்தையெல்லாம் வாழிடமாகவும் வயலாகவும் மாற்றிக்கொண்டு, பல்லுயிர்ப் பெருக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு... ‘பருவநிலை மாற்றம்’ என்ற ஒற்றை வார்த்தையில் தப்பிக்க நினைக்கிறது, மனித இனம். ஆனால், ‘தன்னை மிஞ்சிய சக்தியில்லை’ என்பதை ஒவ்வொரு முறையும் இயற்கை நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, தற்போதுதான் ‘இயற்கையைக் காக்க வேண்டும்’ என்ற விழிப்பு உணர்வே எட்டிப் பார்த்திருக்கிறது. அதன் அடிப்படையில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் நாளைய சந்ததியினரின் நல்வாழ்வு ஒன்றை மட்டும் அடிப்படையாக் கொண்டு... காணும் இடமெல்லாம் கானகத்தை உருவாக்கும் இயற்கை ஆர்வலர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சற்று ஆறுதலான செய்தி. அந்த வரிசையில், திண்டுக்கல் நகரைப் பசுமை நகராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது, ‘திண்டி மா வனம்’ என்ற அமைப்பு.

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்களால் திண்டி மா வனம் திட்டத்தின் மூலம் மாநகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!இது தொடர்பாக நம்மிடம் பேசிய திண்டி மா வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், “திண்டுக்கல் மாவட்டம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாவட்டம். ஊரைச் சுற்றி மலைகளாக இருந்தாலும், போதுமான மழை இல்லாததால், நீர்நிலைகள் வற்றிப் போய்விட்டன. நிலத்தடி நீரும் குறைந்து விவசாயம் செய்வதே கேள்விக்குறியாகி விட்டது. பல பகுதிகளில் குடிநீருக்கும் பஞ்சம் வந்துவிட்டது. இந்த மாவட்டத்தில் பிறந்த என்னைப் போன்ற பலருக்கும் இது மிகவும் வேதனையைக் கொடுத்தது. நம்மால் முடிந்தவரை மழை வளம் பெருகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் பேசிக்கொண்டே இருந்தோம். அப்படி ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்கியதுதான் திண்டி மா வனம் அமைப்பு.

திருப்பூரைப் பசுமை மாவட்டமாக மாற்றும் திட்டமான ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டம்தான் எங்களுக்கான உந்துதல். எங்கள் அமைப்பின் மூலம், மரக்கன்றுகளை நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்த அமைப்பில் நகரில் உள்ள முக்கியப் பிரமுகர்கள், தொழி லதிபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்துள்ளனர்.  பல கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளும் எங்களோடு கை கோத்துள்ளன. இதுவரை 18 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். அடுத்து இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுவதுதான் எங்கள் இலக்கு” என்றார்.

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

திண்டி மா வனம் திட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டிவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மூன்றாயிரம் மரக்கன்றுகளை நடும் முயற்சியை முன்னெடுத்துள்ளார். முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து... தானே களத்தில் இறங்கிக் கன்றுகளை நடவு செய்துகொண்டிருந்தவரிடம் பேசினோம்.

“இன்றைய தேதிக்கு அனைவரும் செய்யவேண்டிய அதி முக்கியப் பணி மரக்கன்றுகள் நடுவது மட்டும்தான். காவல் துறையினர், சட்டம் ஒழுங்கைக் காப்பவர்கள் மட்டுமல்ல. இயற்கையையும் நேசிப்பவர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். இது ஏதோ ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செய்யும் வேலையல்ல. ஆத்மார்த்தமாக நீண்டகாலப் பயன்பாட்டு அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த மைதானம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், 100 நாவல் மரங்கள் நடவு செய்துள்ளோம். காம்பவுண்ட் சுவர் ஓரமாக அழகுத் தாவரங்கள், அதற்கு அடுத்தப்படியாக வணிக ரீதியிலான மரங்கள் என மிகவும் திட்டமிட்டு நடவு செய்கிறோம். ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளோம். அவர்கள் அந்த மரத்தைத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பார்கள். அதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். நானும் அவ்வப்போது வந்து மரக்கன்றுகள் வளர்வதைக் கண்காணிக்க இருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில், இந்தப் பகுதியே பசுமை நிறைந்ததாக மாறிவிடும்” என்றார், நம்பிக்கையுடன்.

காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!

திண்டி மா வனத்தின் ஆலோசகரான முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரன், “ஒவ்வொரு பகுதிக்கும் மண்வளம், சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான மரங்களைத் தேர்வு செய்து நடவு செய்கிறோம். தண்ணீர் ஊற்றுவதற்காக டிராக்டர், தன்னார்வலர்கள் எனச் சரியான திட்டமிடலுடன் மரங்களை நடுகிறோம். ‘காணும் இடமெல்லாம் கானகம், வாழும் இடமெல்லாம் வனம்’ என்பதுதான் எங்கள் நோக்கம். பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனியார் விவசாய நிலங்களிலும் மரங்களை நடவு செய்து கொடுக்கிறோம். இலவசமாகக் கொடுப்பதால் ஏனோதானோ என்று கொடுப்பதில்லை. பழமரங்கள், வணிகரீதியிலான மரங்கள், அழகுத் தாவரங்கள் எனப் பயன்பாடு மிக்கவற்றைத்தான் கொடுக்கிறோம். தரமான கன்றுகளாகத் தேர்வு செய்துதான் நடவு செய்கிறோம். விரைவில் எங்கள் இலக்கை எட்டிவிடுவோம்” என்றார்.