Published:Updated:

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

கண்காட்சிஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

டந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய வல்லுநர்களின் உரை வீச்சுகள் இங்கே இடம்பெறுகின்றன.

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

மண் நல்லது வேண்டும்!

செப்டம்பர் 10-ம் தேதி, இரண்டாம் நாள் அமர்வில் முதல் நபராக மேடையேறிய, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செந்தூர்குமரன், ‘தோட்டக்கலைப் பயிர்கள் பராமரிப்பு நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

“விவசாயத்தின் முதல் படி மண்தான். மண் சரியில்லை என்றால் விவசாயம் ஜெயிக்காது. பயிர்களுக்கு உயிர் ஆதாரம் மண்தான். ஒரே தொழில்நுட்பத்தையே கடைப்பிடித்தாலும் நிலத்துக்கு நிலம் மகசூல் அளவு மாறுபடுவதற்குக் காரணம், மண் வள மாறுபாடுகள்தான். அடிப்படை சரியில்லை என்றால் எதுவும் சரியாக இருக்காது. விதை உறங்கி உயிர் பெறும் இடம் மண்தான். அதனால், மண் வளம் மிகவும் அவசியம். மண்ணின் தன்மை அறிந்து செய்யாத விவசாயம், புண்ணின் தன்மை அறிந்து செய்யாத சிகிச்சைக்குச் சமம். மண்ணை வளப்படுத்த இயற்கை உரங்கள் இடுவது அவசியமானது. ஏக்கருக்கு 12 டன் இயற்கை உரங்களை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தையின் சுண்டு விரல்கூட மண்ணில் எளிதாகப் புகும் அளவுக்கு மண் பொலபொலப்பாக இருக்கவேண்டும். மண்ணை இளக்கி பொலபொலப்பாக்குவது, இயற்கை உரங்களால்தான் முடியும். பயிரின் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாகப் பரவக் காற்றோட்டம் உள்ள இடைவெளி மண்ணுக்குள் தேவை. அதேபோல கோடை உழவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மண்ணுக்கு அடியில் வாழ்ந்து வேர்களைத் தாக்கி சேதப்படுத்தக்கூடிய பூச்சி புழுக்களைக் கோடை உழவின் மூலம் அழிக்கலாம்.

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

உன்னதமான உயிர் உரங்கள்!

அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர் உரங்கள்... தண்டு அழுகல், வேர் அழுகல் நோய்த் தாக்குதல்களைத் தடுத்து செடிகளைக் காப்பாற்றுகின்றன. 1 கிராம் மண்ணில் 5 லட்சம் கோடி நுண்ணுயிரிகள் உள்ளன. அவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் இரண்டுமே உண்டு. நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், வேர்களைப் பலப்படுத்தி, மண்ணை வளப்படுத்தும். தீமை செய்யும் நுண்ணுயிரிகள் வேர்களை அழிக்கும். மண் வளத்தைக் கெடுக்கும். தீமை செய்யும் நுண்ணுயிரிகளை எதிர்த்து நின்று பயிர்களைக் காப்பாற்றுவதுதான் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வேலை.

இடைவெளி அவசியம்! 

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”அதேபோல, நடவின்போது, சரியான இடைவெளி இருக்க வேண்டும். நெருக்கி நடவு செய்தால், எந்தப் பயிரிலும் அதிக மகசூலைப் பெற முடியாது. குழித்தட்டு முறையில் நாற்றாங்கால் அமைத்து நடவு செய்யும்போது, சாகுபடி நாட்கள் குறைவதுடன் அதிக மகசூல் பெற முடியும். நடவு செய்த நாளில் இருந்து வளர்ச்சியடைபவை, குழித்தட்டு நாற்றுகள்தான். மேட்டுப்பாத்தியில் விடப்படும் நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஒரே சீரான வளர்ச்சி இருக்காது. மேட்டுப்பாத்தி நாற்றுகளின் வளரும் தன்மை, நடவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். குறிப்பாக, காய்கறிப் பயிர்களுக்குக் குழித்தட்டு நாற்றாங்கால் முறை மிகவும் ஏற்றது. இம்முறையில், வழக்கமான அளவில் மூன்றில் ஒரு பங்கு விதை இருந்தாலே போதுமானது.

வேம்பு... கவனம்!


எந்தச் செடியாக இருந்தாலும் நடவு செய்த 15 நாட்கள் வரை பூச்சி, நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. அதற்குப் பிறகுதான் ஆரம்பமாகும். ஆனால், இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பதுதான் சிறந்தது. தொடர்ச்சியாக மூலிகைப் பூச்சி விரட்டியை பயன்படுத்திச் செடிகளைக் காப்பாற்றலாம். ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுப்பது உகந்தது. வேப்பிலைச்சாறு, அதன் எண்ணெய் எல்லாம் அமிர்தம் போன்றது. ஆனால், அளவுக்கு மிஞ்சக்கூடாது. வேம்பு சார்ந்த பொருட்களில் இரண்டாம் நிலை வேதியியல் கூறுகள் உள்ளதால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால், செடிகள் கருகிவிடும்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள நேரம் மகரந்தச்சேர்க்கை நடக்கும் நேரம் என்பதால், அந்த நேரத்தில், செடிகள் மீது பூச்சிவிரட்டி போன்றவற்றைத் தெளிக்கக்கூடாது. அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பூச்சி விரட்டி தெளிக்க உகந்த நேரம். அதேபோலப் பூக்கள் இருக்கும் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. செடிகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியின் போதுதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். விசைத்தெளிப்பான் மூலம் தெளிப்பவர்கள், செடிகளுக்கு 7 அடி தூரத்துக்குப் பின்னால் இருந்துதான் தெளிக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தின் அறிவியலை ஆழமாகப் புரிந்துகொண்டால், ரசாயன விவசாயத்தின் ஆபத்தில் இருந்து மாற வழி கிடைக்கும். முன்பு, பல ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால்தான் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல்லாண்டுகள் வாழும் மரப்பயிர்களுக்கு 3 ஆண்டுகளும், நெல், காய்கறிகள் போன்ற குறுகிய காலப்பயிர்களுக்கு 2 ஆண்டுகளும் இயற்கை விவசாயம் செய்து வந்தால்    ‘அபிடா’ நிறுவனம், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் இயற்கை விவசாயச் சான்று கொடுக்கிறது” என்றார்.

கெண்டை மீனுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு!

அடுத்ததாகப் பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு குறித்து உரையாற்றினார், தூத்துக்குடி மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் கணேசன். “ஆடு, மாடு, கோழி... என ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து லாபகர விவசாயம் செய்து வருகிறார்கள் விவசாயிகள். தற்போது, மீன் வளர்ப்பும் ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்று வருகிறது. இன்றைய சூழலில், உள்நாட்டுப் பகுதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு எளிதான தொழிலாக விளங்குகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்க்க முடியும். வெள்ளிக்கெண்டை, ரோகு, மிர்கால், ஜிலேபி கெண்டை, சாதா கெண்டை, கட்லா, புல் கெண்டை, முரல்ஸ், கேட்பிஷ், விறால் போன்ற ரகங்கள் பண்ணைக்குட்டை மீன்வளர்ப்புக்கு ஏற்றவை. இவற்றில் கெண்டைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு இருக்கும்.

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

லாபம் தரும் கூட்டு மீன் வளர்ப்பு!

களிமண் பாங்கான நிலம், மீன்குட்டை அமைக்க மிகவும் ஏற்றது. மற்ற வகை மண் சார்ந்த இடங்களில் குட்டை அமைக்கும்போது, அடிப்பகுதியில் முக்கால் அடி உயரத்துக்குக் களிமண் நிரப்பினால், தண்ணீர் பூமிக்குள் செல்லாது.

மீன் வளர்க்க குறைந்த பட்சம் 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலாவது குளம் அமைக்க வேண்டும். கூட்டு மீன் வளர்ப்புதான் அதிக லாபம் தரக்கூடியது. வெவ்வேறான உணவுப் பழக்க வழக்கங்களையும் வெவ்வேறான வளர்ச்சி விகிதத்தையும் கொண்ட பல்வேறு வகையான கெண்டை மீன்களை ஒரே குளத்தில், ஒரே சமயத்தில் வளர்ப்பதுதான் கூட்டு மீன் வளர்ப்பு. ஒரே குளத்தில் வளரும் மீன்கள், மேல் அடுக்கு, நடு அடுக்கு, கீழ் அடுக்கு ஆகிய மூன்று அடுக்குகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. மேல்மட்டத்தில் வளரும் மீன்கள் தாவர உணவுகளையும், நடு மட்டத்தில் வளரும் மீன்கள் பிராணி மிதவைகளையும், அடிமட்டத்தில் இருக்கும் மீன்கள் மட்கிய கழிவுகளையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

கெண்டை மீன்கள், வேகமாக வளரக்கூடியவை. பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் தன்மை உள்ளவை. ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மீன் குஞ்சு என்கிற விகிதத்தில் 1,000 சதுர மீட்டர் குளத்தில் 1,000 மீன் குஞ்சுகளை விடலாம். சாதா கெண்டை மீன்கள் குளத்தின் கீழ் அடுக்கில் வளரக்கூடிய ரகம். புழு பூச்சிகள், தண்ணீருக்கடியில் உள்ள சிறுதாவரங்கள், படர் பாசிகள், மட்கிய பொருட்கள் ஆகியவற்றை உண்ணக்கூடியவை.

நம் நாட்டு மீன்களில் முக்கியமானது கட்லா. இதைத் தோப்பா மீன் என்றழைக்கிறோம். இதுவும் வேகமாக வளரக்கூடியது. ஒரே ஆண்டில் இரண்டு கிலோ எடை வரை வளரும். ரோகு மீன்களும் விரைவான வளர்ச்சி கொண்டவை. சுவையானவை. தண்ணீரின் நடுமட்டத்தில் வளரக்கூடியது. மிர்கால் ரகம், அடிமட்டத்தில் வளரக்கூடியது. படர் பாசிகள், மட்கும் பொருட்கள் ஆகியவற்றை உண்ணக்கூடியது. ஜிலேபி கெண்டை, அதிகமான குஞ்சுகளை உற்பத்தி செய்யக்கூடிய இனம். பல நூறு மீன்குஞ்சுகள் ஒன்று சேர்ந்து அடர்த்தியாக வசிக்கக் கூடியது. மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. இறால் பண்ணைகளில் இறால்களுக்கு உணவாக ஜிலேபி கெண்டை குஞ்சுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

அதிக விலை கிடைக்கும் விறால்!

அதிக விலை கிடைக்கக்கூடிய மீன் இனம், விறால். ஒரு கிலோ 600 ருபாய் வரைகூட விலை போகும். இவை, செதில்கள் மூலம் சுவாசிப்பவை. சுண்டுவிரல் அளவு மீன்குஞ்சுகளைத் தேர்வு செய்து குளத்தில் விட வேண்டும். அடர் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் விறால் குஞ்சுகள்தான் ஆரோக்கியமானவை. 2 சதுர மீட்டருக்கு 1 விறால் குஞ்சு வீதம் குளத்தில் விட வேண்டும். இவற்றுக்குக் குளிர்காலத்தில் நோய்த் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வேப்பிலையைப் பொடி செய்து, சம அளவு மஞ்சள் தூள் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பண்ணைக் குட்டைக்குள் தெளித்து நோய்களைத் தடுக்கலாம்.

சாணம்... கவனம்!


வாளியில் தண்ணீர் விட்டு தண்ணீரைக் கைகளால் சுற்றி விட்டு அதில் மீன் குஞ்சுகளை விட்டால்... தண்ணீரின் சுழற்சியின் எதிர்ப்பக்கத்தில் நீந்தும் மீன்குஞ்சுகள் தரமானவை. அந்தக் குஞ்சுகளைத்தான் வளர்ப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும். மீன் குளத்துக்குள் குறிப்பிட்ட இடைவெளியில் சாணக் கரைசலை ஊற்றி வந்தால், அதன் மூலம் தாவர நுண்ணுயிரிகள் உருவாகும். அவற்றை மீன்கள் சாப்பிடும். ஆனால், அளவுக்குஅதிகமாகச் சாணக்கரைசலை ஊற்றினால், மீன்களின் சுவாசம் தடைப்படும். தவிடு, பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் கலந்தும் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்” என்ற கணேசன் மானியங்கள் குறித்தும் விளக்கினார்.

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

மானியங்கள் உண்டு!

“மத்திய, மாநில அரசுகள் மீன் வளர்ப்புக்கு மானியங்கள் வழங்குகின்றன. குளம் வெட்ட இரண்டு லட்ச ரூபாய் வரை மானியம் உண்டு. மீன் குஞ்சுகள் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், மீன் வலை மற்றும் கட்டுமரம் வாங்க 50 சதவிகித மானியமும் உண்டு. 1,200 குவிண்டால் அளவுக்கு மதிப்புக்கூட்டிய மீன் உணவுத் தொழிற்சாலை அமைக்க 20 சதவிகித மானியம் உண்டு.
புதுக் குளம் வெட்ட மற்றும் பழைய குளத்தைப் பராமரிக்க... பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு 20 சதவிகித மானியமும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு 25 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க 10 சதவிகித மானியம் உண்டு. சொந்த நிலம் அல்லது 10 ஆண்டுக் காலத்துக்குப் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம் வைத்திருப்பவர்கள் மானியம் பெறத் தகுதியானவர்கள்.

தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையிலும் பண்ணைக்குட்டை அமைக்க மானியம் கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் நன்னீர் அதிகம் உள்ளதால், இங்கு அலங்கார மீன் குஞ்சுகள் நன்றாக வளரும். இவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது” என்றார்.

மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...

உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமல்ல... உண்பவர்களுக்கும் பலன்!

“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”

ண்காட்சிக்கு வந்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த தனலட்சுமி, “இயற்கை விவசாயம் செஞ்சிட்டு இருக்கேன். அது சம்பந்தமான நிறைய தகவல்களை இந்தக் கண்காட்சி வாயிலா தெரிஞ்சிட்டேன். இயற்கை விவசாயிகள் பலர் ஒண்ணாச் சேர்ந்து அமைப்பு தொடங்கி ‘உயிர் ஆர்கானிக்’ங்கிற பெயர்ல விற்பனை அங்காடி அமைச்சிருக்காங்க. நான் உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயக் காய்கறிகளை அதுமூலம் சிரமம் இல்லாமல் விற்பனை செய்றேன். கருத்தரங்கில், உழவர் உற்பத்தியாளர் கம்பெனி குறித்து விரிவா தெரிஞ்சுகிட்டேன். பசுமை விகடனின் இந்தக் கண்காட்சி உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமில்லாம உண்பவர்களும் பயனுள்ளதாக இருக்கு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு