அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘விவசாய வர்த்தகத்தை முன்னெடுக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 25-வது இடம்’ என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு.

விவசாய விளைபொருட்கள் சந்தையிடல், நிலக் குத்தகை, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களைப் புகுத்தி, விவசாய வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்களாகத் திகழ்கிற மாநிலங்களை அடையாளம் காணும் பணியில்தான் இது தெரியவந்துள்ளது. மிகவும் வறட்சியான மாநிலமான ராஜஸ்தான்கூட மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இத்தனைக்கும் கடந்த ஆண்டுகளில் சிலபல விவசாய சாதனைகளுக்காக மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற மாநிலம்தான் தமிழகம். குறிப்பாக, 2013-14 ஆண்டில் பயறு வகைப் பயிர்களில் சாதனை உற்பத்தியைத் தொட்டதற்காக ‘கிரிஷி கர்மான்’ விருது கிடைத்தது. ஆக, குறைந்த நீர்வளத்திலும்கூட விளைச்சலை அள்ளிக் குவிக்கும் விவசாயிகளைக் கொண்டமாநிலம்தான் தமிழ்நாடு என்பதற்கு மத்திய அரசு கொடுத்த விருதுகளே சாட்சி. ஆனால், சரியான வழிகாட்டல்கள் இல்லாத சூழலில், நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.

இப்போதேனும் விழித்துக்கொண்டு, தமிழக விவசாயத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழக வேளாண் துறை முயல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

-ஆசிரியர்