நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

கேழ்வரகு சாகுபடி1

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 15-ம் தேதி, ‘கம்பு மற்றும் கேழ்வரகில் உயர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 20-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த மண் மேலாண்மை முறைகள்’, 21-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘கம்பு மற்றும் கேழ்வரகில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04577 264288.

ஒருங்கிணைந்தப் பண்ணை!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், டிசம்பர் 20-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘பால் காளான் வளார்ப்பு’, 23-ம் தேதி, ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி, ‘ஒருங்கிணைந்தப் பண்ணையம்’, 29-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘மூலிகைப் பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு: செல்போன்: 77088 20505, 94885 75716.

தேனீ வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், டிசம்பர்
14-ம் தேதி, ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம்’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 27-ம் தேதி, ‘இயற்கை வழி விவசாயத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04285 241626.

பெல்லாரி வெங்காயம்1

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், டிசம்பர் 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘வாழை மற்றும் பெல்லாரி வெங்காயத்தில் நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘இறால் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘மா, பாக்கு, மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04286 266345.

கறவை மாடு வளர்ப்பு!

தேனி, உழவர் பயிற்சி மையத்தில், டிசம்பர் 20-21 தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 27-28 தேதிகளில் ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி:04546 260047.

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

சிப்பிக் காளான் வளர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், டிசம்பர் 14,15 தேதிகளில் ‘கால்நடை வளர்ப்புக்கு வங்கி உதவி பெறுதல் பயிற்சி’, 16-ம் தேதி, ‘பயிர்க் காப்பீடு மற்றும் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’
,
17,18 தேதிகளில் ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘கால்நடைகளுக்கான எளிய மூலிகை வைத்தியப் பயிற்சி’, 22-ம் தேதி, ‘கொய்யா மற்றும் மா சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 23-ம் தேதி, ‘முருங்கைச் சாகுபடி’, 28-ம் தேதி, ‘சொட்டுநீர்ப் பாசன முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

14-15, 17-18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சிகளுக்கு மட்டும் `150 கட்டணம். மற்ற பயிற்சிகளுக்கு `100 கட்டணம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
தொலைபேசி: 0461 2269306.

அசோலா வளர்ப்பு!

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், டிசம்பர் 24-ம் தேதி, ‘அசோலா கால்நடைத் தீவனம்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.
 
தொடர்புக்கு,
தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோராப் பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த
3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.