நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அமுதைத் தேடும் அமெரிக்கா!

அமுதைத் தேடும் அமெரிக்கா!
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதைத் தேடும் அமெரிக்கா!

அமுதைத் தேடும் அமெரிக்கா!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

நவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதிலும், அதைப் பின்பற்றுவதிலும் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு. ரசாயன விவசாயம் என்னும் தொழில்நுட்பத்தை உலகுக்கு முன்மொழிந்ததில் இந்த அமெரிக்க நாட்டின் விஞ்ஞானிகளின் பங்குதான் அதிகம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில்  ரசாயன விவசாயம் பரப்பப்பட்ட ‘துன்பியல் நிகழ்வு’க்கு முன்னிலை வகித்ததும் இதே அமெரிக்காதான்.

இத்தகைய பின்புலம் கொண்ட அமெரிக்கா, தற்போது இயற்கை விவசாயத்தில் அங்கே வேகம் காட்டி வருகிறது. தற்போதைய புள்ளிவிவரப்படி, அங்கே 41 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 11 சதவிகிதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் நல்ல விலை கிடைப்பதால், அங்குள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அங்குள்ள மாநில அரசுகளும் நன்றாக ஊக்கமளித்து வருகின்றன.

ஆக, உலகத்துக்கு ரசாயன விவசாயம் என்னும் நஞ்சை அறிமுகம் செய்த அமெரிக்காவே, ‘இயற்கை விவசாயம் எனும் அமுதம்தான் இனி எதிர்காலம்’ என நடைபோட தொடங்கிவிட்டது. ஆனால், பெரும்பாலான விஷயங்களில் அமெரிக்காவைப் பின்தொடரும் இந்தியாவோ... இன்னமும் இதைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்காமலே இருக்கிறது. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கென்று சொல்லிக் கொள்ளும்படியான பெரிய திட்டங்கள் எதுவும், இதுவரை நம் அரசுகளிடம் இல்லவே இல்லை.

மத்திய, மாநில அரசுகளே... இனியாவது, இயற்கை விவசாயத்தின் மீது அதிக அக்கறை காட்டுங்களேன்!

-ஆசிரியர்