தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
 
- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

தீவனப் பயிர்கள் சாகுபடி!


சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 30-ம் தேதி ‘கம்பு மற்றும் கேழ்வரகில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்’, ஜனவரி 3-ம் தேதி, ‘தீவனப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 4-ம் தேதி ‘ஒருங்கிணைந்த மண் மேலாண்மை முறைகள்’, 10-ம் தேதி ‘பப்பாளியில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்’, 12-ம் தேதி, ‘மழைக்கால வெள்ளாடு பராமரிப்பு முறைகள்’, 20-ம் தேதி மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மர மேலாண்மை பயிற்சி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 5-ம் தேதி, ‘உயர்ரக மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி’ நடைபெற உள்ளது. வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் என்கிற மத்திய அரசு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு, ஈட்டி போன்ற நீண்ட நாட்கள் பலன் கொடுக்கும் மரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு, செல்போன்: 94865 98647, 94421 43520

மூலிகை சாகுபடி!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 29-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 30-ம் தேதி ‘மூலிகைப் பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

மண்புழு உரம் தயாரிப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், ஜனவரி 5-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்பு’, 6-ம் தேதி ‘மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 9-ம் தேதி ‘செம்மறியாடு வளர்ப்பு’, 10-ம் தேதி ‘ஆமணக்கு, எள் மற்றும் பயறு வகைப் பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 23-ம் தேதி, ‘பருவநிலைக்கேற்ற பயிர் பாதுகாப்பு முறைகள்’, 24-ம் தேதி ‘விரால்மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

இயற்கை உரை வீச்சு!

தண்டோரா

காஞ்சிபுரம், காந்தி சாலை பெரியார் சுடரில் டிசம்பர் 30-ம் தேதி, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாரின் ‘நினைவேந்தல் மற்றும்  படத்திறப்பு’, ‘மரக்கன்று வழங்குதல் மற்றும் இயற்கை உணவு அளித்தல்’ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகள் பேரின்பன், அரியனூர் ஜெயச்சந்திரன், தாந்தோணி, ‘எழில்சோலை’ மாசிலாமணி, ‘திருக்கழுக்குன்றம்’ தெய்வசிகாமணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். கலை நிகழ்ச்சியும் உண்டு.

தொடர்புக்கு, செல்போன்: 94452 69610, 94436 38545.

நெல் தொழில்நுட்ப கருத்தரங்கு!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம் அருகே உள்ள கதிராமங்கலம், எஸ்.வி.ஆர் இயற்கை வேளாண் பண்ணையில் டிசம்பர் 29-ம் தேதி, ‘நம்மாழ்வார் நினைவுக் கருத்தரங்கம்’, ‘நெல் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்’ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இயற்கை உழவர் இயக்கத்தின் தலைவர் சிக்கல் அம்பலவாணன் தலைமை வகிக்கிறார். முன்னோடி இயற்கை விவசாயிகள் அனுபவ உரை வழங்க உள்ளனர்.

கட்டணப் பயிற்சி

இயற்கை பூச்சிவிரட்டி!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜனவரி 7-ம் தேதி, ‘இயற்கை பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம்  `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோராப் பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு