Published:Updated:

லட்சுமி மரம், சொர்க்க மரம் மற்றும் சிமரூபா மரம் என அழைக்கப்படும் மரம் பற்றித் தெரியுமா?

மருத்துவத்துக்கு ஏற்ற மருந்தாக விதைக்கும் விதையிலிருந்து காய்ந்த இலை வரை பயன்படுத்தப்படுகிறது. சொர்க்க மரம் என்ற சிமரூபா தனக்கென ஓர் இடத்தை இயற்கை மருத்துவத்திலும் ஆங்கில மருத்துவத்திலும் பெற்றுள்ளது.

லட்சுமி மரம், சொர்க்க மரம் மற்றும் சிமரூபா மரம் என அழைக்கப்படும் மரம் பற்றித் தெரியுமா?
லட்சுமி மரம், சொர்க்க மரம் மற்றும் சிமரூபா மரம் என அழைக்கப்படும் மரம் பற்றித் தெரியுமா?

ரங்கள் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. சில மரங்கள் குளிர்ச்சியான சூழலில் வளரும். சில மரங்கள் வெப்பமான சூழலில் வளரும். இதில் சிமரூபா கொஞ்சம் வித்தியாசமான மரம். எல்லா வகையான மண் வகையிலும் (கரிசல்மண், செம்மண், வண்டல் மண், சரளை மண்) வளரக்கூடிய சிறப்பம்சம் கொண்டது, சிமரூபா மரம். இம்மரம் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் அறிவியல் பெயர் சிமருபு கிளாக்கா (simarouba glauca). இது சிருபேஸ் (simaroubaceae)   குடும்பத்தைச் சார்ந்தது.

பொதுவாக 15 மீட்டர் வரை வளரும் தன்மை உடையது. சிமரூபா விதைத்து மூன்றே ஆண்டுகளில் பூக்கும் பருவத்தை அடைகிறது. அடுத்த சில ஆண்டுகளில் காய்களையும் தருகிறது. அடுத்த சில நாள்களிலேயே நமக்கு சுவையான பழத்தையும் தருகிறது. இயற்கை வளங்களில் பெரிதான கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலும் அதிகமாக இப்போது வளர்க்கப்படுகிறது. முழுவதும் பசுமையாகக் காணப்படும் சிமரூபா பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

பயன்கள்:  

மனிதர்களுக்கு நல்ல காற்றைக் கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. வேப்பமரம் எப்படி வேரிலிருந்து உச்சி வரை பயனுள்ளதாக உள்ளதோ அதுபோலவே சிமரூபாவும் பயன் தருகிறது. சிமரூபா மரம் மண்ணை வளப்படுத்தி நிலத்தடிநீர் மட்டத்தைச் சீராக்கும். தான் மட்டும் வளராமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் வளப்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது. காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சி அதிக அளவில் பிராண வாயுவை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பூமி வெப்பமாவதைக் குறைத்து மனிதருக்கு நல்ல காற்றை
கொடுக்கிறது. இயற்கை மருத்துவத்துக்குப் பயனுள்ளதாக உள்ளது. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதற்கு முக்கியப் பங்கு வகுக்கிறது இதன் பட்டைகள் பூச்சிகள் அரிக்காது என்பதால் ஃபர்னிச்சர் பொருள்கள் தயாரிப்பிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

மரத்தின் நன்கு வளர்ந்த வேர் அமைப்பு மற்றும் ஒரு பசுமையான, அடர்த்தியான விதானம் உள்ளது. இது சிறந்த முறையில் மண் அரிப்பைத் தடுத்து, மண் நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதரவு தருகிறது. மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துகிறது. விதைகள் எடுக்கப்பட்ட கனிகளின் தோலினை காகித அட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பழங்களின் சதைகளை பழச்சாறு தயாரிக்கவும் ஆல்கஹால் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

மருத்துவப் பயன்கள்:

இம்மரத்தின் இலை, விதை, வேர், கனி, கனியின் தோல் ஆங்கில மருத்துவத்துக்கும் இயற்கை மருத்துவத்துக்கும் மிகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மனிதர்களுக்குப் பயன் தருவதாக உள்ளது. இதன் விதைகளிலிருந்து செயற்கை நெய் தயாரிக்கப்பட்டு அமெரிக்க நாடுகளில் மக்கள் வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். மருந்துப்பொருள்கள், இயற்கை சோப் தயாரிப்பு, மெழுகுச் சாயம் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் இந்த மரத்தின் விதைகள் பயன்படுகின்றன. இதன் விதைகள் கால்நடைகளுக்குத் தீவனமான புண்ணாக்கிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. இத்தனை நன்மைகள் கிடைத்தாலும், அவற்றை விடப் பெரிய நன்மையாக மனிதர்களின் புற்று நோயைப்  போக்கும் ஆற்றல் சிமரூபா மரத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகளுக்கும் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .

பயன்படுத்தும் முறை:

லட்சுமி மரம் எனும் சிமரூபா மரத்தில் உள்ள அரிய வகை தாதுவே புற்றுநோய்களின் பாதிப்பைத் தடுத்துக் குணமாக்குகிறது என்கிறார்கள். லட்சுமி மரத்தின் இலைகளைச் சேகரித்து, அவற்றை நன்கு அலசி சிறிது தண்ணீரில் இட்டு, நன்கு கொதித்துச் சுண்டி வரும் போது அந்தத் தண்ணீரை எடுத்து, தினமும் இரு வேளை பருகி வர விரைவில் உடலில் உள்ள பாதிப்புகள் மெள்ள விலகுவதை உணர முடியும். 

மாசைத் தடுக்கும் மரம்: 

உலகில் தினந்தோறும் வாகனங்களால் ஏற்படும் புகை மற்றும் தொழிற்சாலை நச்சுப் புகை போன்றவற்றால் ஏற்படும் நச்சு, காற்றில் கலந்து பூமியின் வெப்ப நிலையை அதிகமாகச் சூடாக்கி, காற்று மண்டலத்தை மாசுபடுத்துகின்றன. இதனால் மனிதர்களின் சுவாசத்தில் நச்சு மாசுகள் கலக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற நிலைகளைத் தடுக்கவே, மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க இம்மரம் இன்னும் பலரால் அறியப்படாமல் இருக்கின்றன. இம்மரத்தின் அனைத்துப் பாகங்களும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த உதவுகின்றன. மருத்துவத்துக்கு ஏற்ற மருந்தாக விதைக்கும் விதையிலிருந்து காய்ந்த இலை வரை பயன்படுத்தப்படுகிறது. சொர்க்க மரம் என்ற சிமரூபா தனக்கென ஓர் இடத்தை இயற்கை மருத்துவத்திலும், ஆங்கில மருத்துவத்திலும் பெற்றுள்ளது.

சிமரூவா வளர்ப்பு இப்போது தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.