Published:Updated:

பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலை பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. இந்த இதழில் இடம் பெறுபவர், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள பட்டக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பி.ஆர்.சுப்பிரமணியம்.

பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

10.03.2011-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளி வந்திருந்த ‘மானாவாரியில் மகத்தான துவரை’ என்ற கட்டுரை மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் தான், இந்தக் கிராமத்து விஞ்ஞானி சுப்பிரமணியம்.

பட்டக்காரன்புதூர் கிராமத்துக்குச் சென்று இவர் பெயரைச் சொன்னால், சின்னக்குழந்தைகள்கூட வழி காட்டுகிறார்கள். அந்தளவுக்கு ஊருக்குள் பிரபலமாக இருக்கிறார். நாம் இவரைச் சந்திக்க தோட்டத்துக்குச் சென்றபோது, வணக்கம் சொல்லி வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

“இந்த ஊர்தான் பூர்விகம். மொத்தம் ஆறு ஏக்கர் இருக்கு. ரெண்டு ஏக்கர் நிலத்துக்குக் கிணறு இருக்கு. மீதி நாலு ஏக்கர் நிலம் மானாவாரி பூமி. ஆறு, குளம், வாய்க்கால்னு எந்தப் பாசன வசதியும் எங்களுக்குக் கிடையாது. முழுக்க முழுக்க மழையை நம்பித்தான் விவசாயம். கிணத்துல தண்ணீர் கிடைச்சா வாழை, மஞ்சள், கரும்புனு இறவை சாகுபடி செய்வோம். இல்லாட்டி, துவரை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்துனு மானாவாரி விவசாயம்தான். எங்க தாத்தா காலத்துல இருந்து மானாவாரி பயறுகளைப் பாரம்பர்ய முறையிலதான் சாகுபடி செய்றோம்.

மானாவாரி காட்டுல மாசி, பங்குனி மாசங்கள்ல ஆட்டுக்கிடை போடுவோம். ஆடுங்க போடுற புழுக்கை நெலத்துக்கு நல்ல அடியுரமா மாறிடும். ஆட்டுக்கிடை போட்ட நெலத்துல எதை விதைச்சாலும் வெள்ளாமை ஜம்முனு இருக்கும். சித்திரை மாசம் வாக்குல ரெண்டு, மூணு வாட்டி கோடை உழவு செஞ்சி மண்ணைப் பொலபொலன்னு புழுதி ஆக்கி வெச்சிடுவோம். இதனால களைகள், பூச்சிகள் எல்லாம் அழிஞ்சுடும். ஒன்றரை மாசம் ஆறப்போட்டு ஒரு உழவு ஓட்டி மண்ணைக் கலைச்சு விடுவோம். அடுத்து ஆடி மாசம் மழை வர்ற சூழ்நிலை பாத்து விதைச்சு விடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சகவ்யா! - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா! மானாவாரியிலும் மகத்தான மகசூல்!

இதுதான் எங்க வெள்ளாமை” என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார். “பஞ்சகவ்யா பயன்படுத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி... இலைவழி ஊட்டமா சாணிப்பால் தெளிப்போம். எங்க தாத்தா சொல்லிக் கொடுத்த பாரம்பர்ய முறை அது. 20 லிட்டர் தண்ணீர்ல 5 கிலோ பச்சை சாணத்தைக் கரைச்சு, அதுல 2 கிலோ கொழுஞ்சி செடிகளைப் போட்டு ஊற வெச்சிடுவோம். 12 மணிநேரம் கழிச்சு அதை நல்லா வடிகட்டி... வேப்பிலைக்கொத்தை முக்கி எடுத்து வாசல் தெளிக்கிற மாதிரி செடிகள் மேல தெளிப்போம். பிஞ்சு பிடிக்கிறதுக்கு முன்னாடி இதைச் செய்வோம். மழை குறைவா இருந்தாலும்கூட சாணிப்பால் தெளிச்சதும், பயிர் தளதளனு வந்துடும். பஞ்சகவ்யா குறித்துத் தெரிஞ்சுக்கிட்டதும், சாணிப்பாலை விட்டாச்சு. 12 வருஷமா பஞ்சகவ்யாவைத் தான் பயன்படுத்திட்டு இருக்கேன்.

2003-ம் வருஷம், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல பாரம்பர்ய விவசாயம் குறித்த கருத்தரங்கு நடந்துச்சு. அதுக்கு நானும் போயிருந்தேன். அதுல சிறப்பு அழைப்பாளரா ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜன் வந்திருந்து பஞ்சகவ்யா குறித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் டாக்டரைச் சந்திச்சு சாணிப்பால் தெளிக்கிற விவரத்தைச் சொன்னேன். ‘அது தப்பில்லை’னு சொன்னவர், ‘சாணிப்பாலோட, மாட்டுல இருந்து கிடைக்கிற இன்னும் நாலு பொருள்களையும் சேர்த்துக்கிட்டா அதுதான் பஞ்சகவ்யா. இது ஒண்ணும் கம்பசூத்திரம் கிடையாது. சாணிப்பால் தெளிக்கிறப்போ கிடைக்கிற பலனைவிட பஞ்சகவ்யாவுல பல நூறு மடங்கு அதிகப் பலன் கிடைக்கும். பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னார்.

அவர் சொன்ன விஷயங்கள் எனக்குப் பஞ்சகவ்யா மேல நம்பிக்கை ஏற்படுத்துச்சு. அதனால, பஞ்சகவ்யாவை இனிமே பயன்படுத்தலாம்னு முடிவெடுத்தேன். அப்பவே எனக்குக் கொழுஞ்சி இலையைப் பயன்படுத்தலாமானு சந்தேகம் வந்துச்சு. அதை, டாக்டர்கிட்ட கேட்டப்போ, ‘அதனால ஒண்ணும் தப்பில்லை. சோதனை செஞ்சு பாருங்க. நல்லா இருந்தா கொழுஞ்சியைச் சேர்த்துக்கங்க. இல்லாட்டி கொழுஞ்சியை விட்டுடுங்க’னு சொன்னார்.

அந்தச் சமயத்துல பாசிப்பயறு நிலத்துல இருந்துச்சு. டாக்டர் சொல்லிக்கொடுத்த மாதிரி பஞ்சகவ்யா தயாரிச்சு அதோட கொழுஞ்சியையும் சேர்த்துக்கிட்டேன். அந்தக் கரைசலை பாசிப்பயறுக்குத் தெளிச்சதுல, நல்ல பலன் தெரிஞ்சது. மழை சரியா கிடைக்காத சூழ்நிலையிலும் பயிர் நல்லா வளர்ந்து, ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் கிடைச்சது. அதுல இருந்து இப்போ வரைக்கும் மஞ்சள், வாழைனு எல்லாத்துக்கும் பஞ்கவ்யாவைக் கொடுத்துட்டு இருக்கேன். மகசூலும் சிறப்பா இருக்கு” என்றார் சுப்பிரமணியம்.

நிறைவாகப் பேசிய சுப்பிரமணியம், “எல்லா விதைகளையும் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செஞ்சுதான் விதைக்கிறேன். அதனால 100% முளைப்புத்திறன் இருக்கு. 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யானு கலந்து... கைத்தெளிப்பான் வெச்சு இலை வழி ஊட்டமாகத் தெளிக்கிறப்போ நல்ல பலன் கிடைக்குது. பாரம்பர்ய பஞ்சகவ்யாவில் இவ்வளவு பலன் கிடைக்கிறப்போ, எதுக்குங்க காசு கொடுத்து விஷத்தை வாங்கி வயல்ல கொட்டணும்” என்று கேட்டபடியே புன்னகையுடன் விடைகொடுத்தார்.

-மணம் பரப்பும்


தொடர்புக்கு: பி.ஆர்.சுப்பிரமணியம், செல்போன்: 98945 05188

விதைநேர்த்திக்குப் பஞ்சகவ்யா!

“எந்தப் பயறு வகையாக இருந்தாலும் சரி, விதைக்கும் முன்பு... 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து அக்கரைசலில் 10 நிமிஷம் விதைகளை ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைத்தால், நல்ல மகசூல் எடுக்கலாம்” என்கிறார் சுப்பிரமணியம்.

பசுமை விஞ்ஞானி!

சுப்பிரமணியம், மானாவாரியில் நன்கு விளையக்கூடிய புதிய ரகத் துவரையை உருவாக்கியிருக்கிறார். இதற்குப் பல்கலைக்கழக அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அண்மையில் விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்... உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, சுப்பிரமணியம் உருவாக்கிய புதிய ரகத் துவரை விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, ‘பசுமை விஞ்ஞானி’ என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்.

ஐஸ் தண்ணீர்... அமோக விளைச்சல்!

ருவமழை பொய்க்கும் நேரங்களில் ஒரு யுக்தியைக் கையாண்டு பயிரைக் காப்பாற்றி வருகிறார், சுப்பிரமணியம். அதுகுறித்துப் பேசியவர் “பருவமழை கிடைக்காமல் பயிர்கள் வாடுற சமயத்தில்... பெரிய மண் மொடாக்களில் (பெரிய பானை போன்றது) தண்ணீரை நிரப்பி, அதை ஈர மணல் மீது வெச்சு, அதுல ஐஸ் கட்டிகளைப் போட்டுடுவேன். அந்தத் தண்ணியைக் கைத்தெளிப்பான் மூலமா செடிகள் மேல பனிமழை பெய்றது மாதிரி தெளிப்பேன். அடுத்தச் சில மணி நேரத்திலேயே செடிகள் தளதளனு நிமிர்ந்து நின்னுடும். செடி கருகல், பூ உதிர்வு மாதிரியான சேதாரங்கள் வராது. இது செலவில்லாத வைத்தியம். உயரம் குறைவான பயறு வகைச் செடிகளுக்கு இந்த ஐஸ் தண்ணீர் தெளிப்பு நல்ல பலன் கொடுக்கும்” என்றார்.