Published:Updated:

நியாயம் செய்யுங்கள்!

நியாயம் செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நியாயம் செய்யுங்கள்!

நியாயம் செய்யுங்கள்!

நியாயம் செய்யுங்கள்!

நியாயம் செய்யுங்கள்!

Published:Updated:
நியாயம் செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நியாயம் செய்யுங்கள்!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’

இந்தக் குறளின் மூலம், ‘உழவர்களுடைய கை, விவசாயம் செய்யாமல் மடங்கியிருக்குமானால், பற்றுகளை விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் பூமியில் வாழ்க்கை இல்லை’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயிகளின் அருமை பெருமைகளைச் சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.

காலநிலை மாற்றத்தால் பருவமழையும் குறைந்து போயின; கர்நாடகாவும், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை கொடுக்கவில்லை; கடன் வாங்கிச் சாகுபடி செய்த பயிர்கள், காய்ந்து கருகுவதைச் சகிக்க முடியாமல், மடியும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

சராசரியாக ஒரு விவசாயி, தன் வாழ்நாளில் பருவமழை தந்த ஏமாற்றம், பக்கத்து மாநிலத்தின் வஞ்சகம், பூச்சி, நோய்த் தாக்குதல் என்று குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பயிர்கள் பாதித்து, நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையைச் சந்தித்திருப்பார். அப்போதெல்லாம், ‘ஒரு பருவத்தில், இப்படி ஏற்பட்டால் மறு பருவத்தில் நல்ல விளைச்சல் எடுப்போம்’ என்கிற நம்பிக்கை அவர்களிடம் தழைத்தோங்கி இருக்கும்.

ஆனால், காலச்சூழலால் இந்த நம்பிக்கை தளர்ந்துகொண்டே இருக்கிறது. இதை மீண்டும் துளிர்க்க வைக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது. உரிய நிவாரணம் கொடுப்பதோடு, உருப்படியான திட்டங்களையும் தீட்டி, மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், காக்கை, குருவிகள்... என இந்த உலகுக்கே உணவு கொடுக்கும் உழவர்களின் வாழ்வை மீட்டெடுக்கப் போர்க்கால நடவடிக்கைகளில் அரசுகள் இறங்க வேண்டும். இதுதான், ‘உழவர் திருநாள்’ எனப்படும் ‘பொங்கல் திருநாளை’ கொண்டாடுவதற்கு நியாயம் செய்வதாக இருக்கும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism