Published:Updated:

தண்டோரா

தண்டோரா
தண்டோரா

பசுமைக்குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 12-ம் தேதி ‘மழைக்கால வெள்ளாடு பராமரிப்பு முறைகள்’, 20-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

பயிர் பாதுகாப்பு


நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், ஜனவரி 23-ம் தேதி ‘பருவநிலைக்கேற்ற பயிர் பாதுகாப்பு முறைகள்’, 24-ம் தேதி ‘விரால்மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

தண்டோரா

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜனவரி 17-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

பஞ்சகவ்யா தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜனவரி 19-ம் தேதி ‘பஞ்சகவ்யா தயாரித்தல்’, 24-ம் தேதி ‘வணிக ரீதியில் சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டத்தில் மூலிகைச் செடிகள் வளர்த்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

கட்டணப் பயிற்சிகள்

தண்டோரா

கொய்யா சாகுபடி

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 20-ம் தேதி ‘வருமானம் கொழிக்கும் கொய்யா சாகுபடி தொழில்நுட்பம்’ பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி கட்டணம் `100 மட்டும். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜனவரி 19-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம்’, 24-ம் தேதி ‘காளான் உற்பத்தி தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் `150 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

அறிவிப்பு

தண்டோராப் பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு