Published:Updated:

1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்!

1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும்  மணக்கும் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும்  மணக்கும் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்!
1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும்  மணக்கும் லாபம்!

‘நாழி நாழி நெல்லுக்குத்தி
நடுக்களத்துல பொங்க வெச்சு
கொத்து மஞ்சள் சுத்திக்கட்டி
குலவைப் போட்டு பொங்க வைப்போம்..!’


- தமிழ்நாட்டில் உள்ள கொங்கு மண்டல கிராமங்களில் மக்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல் இது. இந்தப் பாடல் வரிகளில் இருந்து பொங்கல் பண்டிகையில் மஞ்சளுக்கான முக்கியத்துவம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும். பொங்கல் பண்டிகையின்போது இனிப்பான கரும்போடு, மங்கலகரமான மஞ்சள் கொத்தையும் வைத்து வழிபடுவது பாரம்பர்யப் பழக்கம். மஞ்சள் ஓர் அருமையான கிருமி நாசினியும்கூட. அதனால்தான், உணவுப்பொருட்களில் இருந்து அழகுக்கான பொருட்கள் வரை மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இதோடு விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் பயிராகவும் இருக்கிறது மஞ்சள். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டாலும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வரும் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ மகேந்திரனைப் பொங்கல் சிறப்பிதழுக்காகச் சந்தித்துப் பேசினோம். “எனக்குச் சொந்த ஊர் இதுதான். இங்கே 6 ஏக்கர் நஞ்சை நெலம் இருக்கு. வருஷம் தவறாம 6 ஏக்கர் நிலத்திலேயும் மஞ்சள் நடுவோம். இந்த வருஷம் கடுமையான வறட்சி. தண்ணீர் பற்றாக்குறையால, 1 ஏக்கர் நிலத்துலதான் மஞ்சள் நட்டிருக்கேன். மீதி 5 ஏக்கர் நிலம் சும்மா கிடக்கு. பருவமழை ஏமாத்தினாலும், சொட்டுநீர்ப் பாசனமும் இயற்கை முறை விவசாயமும் என் மஞ்சளைக் காப்பாத்திடுச்சு. முன்னாடி நானும் பூச்சிக்கொல்லியையும் ரசாயன உரங்களையும் அதிகளவு பயன்படுத்திதான் மஞ்சள் வெள்ளாமை செஞ்சுட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்தது. சுந்தரம்ங்கிற இயற்கை விவசாயி, சில நண்பர்களோட சேர்ந்து, அன்னூர்ல ‘பசுமைப் பேராயம்’ங்கிற அமைப்பை நடத்திட்டு இருக்கார். அந்த அமைப்பு மூலம், இயற்கை விவசாயத் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் மாதிரியான பயிற்சிகள விவசாயிகளுக்குக் கத்துக்கொடுக்கிறாங்க. அந்த அமைப்பு நடத்தின கருத்தரங்கு சம்பந்தமான அறிவிப்பு பசுமை விகடன்ல வந்திருந்துச்சு. அதை பார்த்து கருத்தரங்கத்துல கலந்துக்கிட்டேன். அந்த கருத்தரங்குல ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளால வர்ற பாதிப்புகள் குறித்துச் சொல்லிட்டு இயற்கை விவசாயம் செய்றதை பத்தியும் சொல்லிக் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகுதான் நான் அந்த அமைப்புல இணைஞ்சு தீவிரமா இயற்கை விவசாயத்தைச் செய்ய ஆரம்பிச்சேன். பல இயற்கை விவசாயப் பண்ணைகளைப் போய் பார்த்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு வந்து நாலு வருஷமா முழு இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையில சான்றிதழ் கேட்டு விண்ணப்பிச்சிருந்தேன். மூணு வருஷம், என்னோட சாகுபடி முறைகளைக் கண்காணிச்சுட்டு இப்போதான் அங்ககச் சான்றிதழ் கொடுத்திருக்காங்க” என்று முன்கதை சொன்ன மகேந்திரன் தொடர்ந்தார்.

1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும்  மணக்கும் லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மஞ்சள் சாகுபடியில ஒரு முக்கியமான விஷயம் என்னான்னா அறுவடை செஞ்ச மஞ்சளை 5 வருஷம் வரைக்கும் கூட இருப்பு வெச்சு விற்பனை செய்யலாம். அறுவடை செஞ்ச மஞ்சள் கிழங்கை வேக வெச்சு 15 நாள் காய வெக்கணும். பிறகு எடுத்து கல், தூசுகளைப் பொறுக்கி சுத்தப்படுத்தி பாலீஷ் பண்ணி வெச்சுட்டா 5 வருஷம் வரை தாங்கும். சந்தையில் கட்டுபடியாகுற விலை கிடைக்கிறப்போ விற்பனை செய்துக்கலாம்.

ஒரு ஏக்கர் நிலத்துல 30 குவிண்டால்ல இருந்து 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். இப்போதைக்கு ஒரு கிலோ மஞ்சள் 85 ரூபாய் வரை விலை போகுது. 30 குவிண்டால் மஞ்சளை இந்த விலைக்கு விற்பனை செய்தாலே 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல ஒரு லட்ச ரூபாய் செலவு போக, 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். இயற்கை முறை விவசாயத்துல இடுபொருள் செலவு பாதியா குறையுது. ரசாயனம் பயன்படுத்துனப்போ கிடைச்ச அதே மகசூலும் குறையாமக் கிடைக்குது. அதனாலதான் தொடர்ந்து இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிச்சுட்டு இருக்கேன். இயற்கை முறையில பயிர் நல்ல முறையில் விளையுது, இடுபொருட்கள் செலவும் குறையுது” என்ற மகேந்திரன், செழித்து வளர்ந்திருந்த ஒரு மஞ்சள் செடியைப் பிடுங்கிக் காட்டியபடி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும்  மணக்கும் லாபம்!

ஆனியில் நடவு... அரையடி இடைவெளி!

ரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்வது குறித்து மகேந்திரன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...

மஞ்சளுக்கு ஆனிப்பட்டம் ஏற்றது. செம்மண், செம்மண் சரளை நிலங்கள் ஏற்றவை. ஒரு ஏக்கர் நிலத்தில் கோடை உழவு செய்து, சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றை விதைத்து 45 நாட்கள் கழித்து மடக்கி உழுது நிலத்தை ஆறப்போட வேண்டும். 45 நாட்கள் கழித்து நிலத்தை நன்கு உழுது, பொலபொலப்பாக்கி, 10 டன் தொழு உரத்தைக் கொட்டி இறைத்து, 3 அடி இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைக்கிழங்குகளைப் பாரில் அரையடி இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். தொடர்ந்து வாரம் இருமுறை பாசனம் செய்துவர வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து சொட்டு நீர் மூலம் கலந்துவிட வேண்டும்.

விதைத்த 60-ம் நாளில் இலைகள் செழிப்பாக வளர்ந்திருக்கும். அந்தச் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளைகளில் இலைகள் மீது தெளிக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் செய்யும்போது களைகள் வராது. அப்படியே களைகள் வந்தாலும் அவற்றை அகற்றிவிட வேண்டும். 70-ம் நாளுக்கு மேல் மஞ்சள் செடிகள் கிளைத்து நிழல் படர்ந்துவிடும். அதற்குப் பிறகு களைகள் முளைக்காது. 100-ம் நாளில் செடிகளின் தூரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். பிறகு, தலா 75 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து செடிகளின் தூரில் பகிர்ந்து வைக்க வேண்டும்.

மஞ்சள் பயிரை இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்கள் தாக்க வாய்ப்பு உண்டு. இதனால் அதிகப் பாதிப்பு ஏற்படும். தலா 1 கிலோ அளவில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து 7 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 7 நாட்கள் ஊற வைத்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் எனக் கலந்து பயிர்கள் நனையும்படி மாதம் ஒருமுறை தெளித்து வந்தால், இந்நோய்கள் தாக்காது. விதைத்த 8 மாதங்களில் மஞ்சள் செடிகள் 6 அடி உயரம் வளர்ந்து 14 குருத்துக்கள் வரை விளைந்திருக்கும். இதுதான் அறுவடைக்கான தருணம். ஒரு செடியைப் பிடுங்கிப்பார்த்து விளைச்சலை சோதித்தப் பிறகு, ஒவ்வொரு செடியாகக் கொத்தி பிடுங்கி எடுக்க வேண்டும். வேரிலிருக்கும் மண்ணை உதறி, தோகைகளை அறுத்துச் சேமிக்க வேண்டும்.