தண்ணீர் வளம் அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு மிகச்சிறந்த துணைத்தொழில், மீன் வளர்ப்பு. கட்டுபடியான விலை, நல்ல சந்தை வாய்ப்பு இரண்டுமே இருப்பதால், மீன் வளர்ப்பு தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலருக்கும் இதன்மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. அப்படி இத்தொழிலில் இறங்க நினைப்பவர்களுக்குத் தேவையான அத்தனை பயிற்சிகளையும் அளித்து வருகிறது, தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டையில் இயங்கிவரும் உள்நாட்டுச் சினை மீன் மேம்பாட்டு மையம்.

இந்த மையத்தின் தலைவர் முனைவர் செந்தில்குமாரிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினோம்.

“இந்த மையம் தஞ்சாவூரில் 1989-ம் ஆண்டு, தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் மீன்வளப் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, 2001-ம் ஆண்டு மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக உயர்ந்தது.

2012-ம் ஆண்டில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் மாற்றப்பட்டது இம்மையம். தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் ‘உள்நாட்டுச் சினை மீன் மேம்பாட்டு மையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இங்கு, நன்னீரில் கெண்டைமீன் வளர்ப்பு, கெண்டைமீன் குஞ்சு உற்பத்தி, அலங்கார மீன் வளர்ப்பு, குறைவான உவர்தன்மை கொண்ட நீரில் இறால் வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய மீன் உபபொருள்கள் தயாரிப்பு ஆகியவை குறித்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறோம். இதுவரை எங்கள் மையத்தில், 6 ஆயிரத்து 500 விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம் எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள். மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டால்தான் நீண்டகாலத்துக்கு இத்தொழிலில் நீடித்து நிறைவான லாபம் பார்க்க முடியும்” என்ற செந்தில்குமார் தொடர்ந்தார்...

“நன்னீரில் ரோகு, கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்களின் வளர்ப்புக்கென 3 நாட்கள் பயிற்சியளித்து வருகிறோம். இப்பயிற்சிக்கு அதிக விவசாயிகள் வருகிறார்கள். மீன் வளர்ப்புக் குளத்துக்கான இடத் தேர்வு, குளம் அமைக்கும் விதம், தரமான மீன்குஞ்சு தேர்வு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, நீர் மேலாண்மை, அறுவடை, சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் விரிவாகக் கற்றுத் தருகிறோம். அதோடு வங்கிக் கடன்கள், மானியங்கள் குறித்தும் ஆலோசனைகளைச் சொல்லி வருகிறோம்.

இது தொடர்பான 5 நாட்கள் பயிற்சியில் மீன் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, களப்பயிற்சி அளித்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் பயிற்சி உண்டு. பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், தொலைபேசியில் அல்லது நேரில் மையத்தைத் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 20 விவசாயிகள் பதிவு செய்தவுடன், பயிற்சிக்கான தேதியை அறிவிப்போம். நாளிதழ்கள், வானொலி, உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமும் பயிற்சி குறித்துத் தெரியப்படுத்தி வருகிறோம்.

மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகிறோம். அதற்கான, கட்டணம் இல்லா தொலைபேசி சேவையும் செயல்படுகிறது. அந்த எண்ணுக்கு அழைத்தால், சம்பந்தப்பட்ட நிபுணர்களோடு அந்த அழைப்பு இணைக்கப்படும். வாரத்தில் அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்” என்ற செந்தில்குமார் நிறைவாக...

“தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியுதவியில், எங்கள் மையத்திலேயே நீர் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மீன் வளர்ப்புக்கு தங்கள் நிலத்தின் தண்ணீர் ஏற்றதா என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும்.

மீன் வளர்ப்பவர்கள் அவ்வப்போது தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து கொள்ளலாம். தவிர, பண்ணையில் மீன்களை நோய் தாக்கினால், அவற்றில் ஒன்றை இங்கு கொண்டு வந்தால், பகுப்பாய்வு செய்து, சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனைகள் சொல்லி வருகிறோம். அதிக லாபம் தரும் மீன் வளர்ப்புத் தொழிலில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். அவர்களுக்காகப் பயிற்சி அளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு, உள்நாட்டு சினைமீன் மேம்பாட்டு மையம், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம். தொலைபேசி: 04362 291625 கட்டணம் இல்லா தொலைபேசி: 1800 419 8800

அரை ஏக்கர்... ஆண்டுக்கு `1,50,000 லாபம்!

தஞ்சாவூர் மாவட்டம், மேல உளூரைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு, இம்மையத்தில் பயிற்சி பெற்று, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பேசியபோது, “இந்த மையத்துல பயிற்சி எடுத்துட்டு 19 வருஷமா மீன் வளர்த்துட்டு இருக்கேன். அரை ஏக்கர் நிலத்துல அலங்கார மீன்கள், ரோகு, மிர்கால், கட்லானு வளர்த்து, ஒரு வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் எடுத்துட்டு இருக்கேன். அப்பப்போ இந்த மையத்துலதான் ஆலோசனைகள் கேட்டுக்குவேன்” என்றார்.

தொடர்புக்கு, திருநாவுக்கரசு, செல்போன்: 90425 24734

மூன்று மாதங்களில் வருமானம் கொடுக்கும் திலேப்பியா

“மூன்றே மாதங்களில் வருமானம் தரக்கூடிய திலேப்பியா மீன் வளர்ப்புக்கும் பயிற்சி அளிக்கிறோம். 5 கிராம் எடை கொண்ட திலேப்பியா குஞ்சுகளை வாங்கி, மூன்றே மாதங்களில் 200 கிராம் முதல் 250 கிராம் எடை வரும்படி வளர்த்து விற்பனை செய்ய முடியும். ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் திலேப்பியா மீன்களை வளர்க்கலாம்” என்றார், செந்தில்குமார்.

சினைமீன் வங்கி

இம்மையத்தில், நபார்டு வங்கியின் சார்பில் 18 லட்சம் ரூபாய் நிதியுதவியில், சினை மீன் வங்கி செயல்பட்டு வருகிறது. அதுகுறித்துப் பேசிய செந்தில்குமார்,

“ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள மத்திய அரசின் நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இதைச் செயல்படுத்தி வருகிறோம். மரபு வழியான வீரியம் மிக்க மீன் இனங்களுக்கான சேகரிப்பு மையம் இது. வட இந்திய நதிகளான சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில்தான் ரோகு, கட்லா, மிர்கால் போன்ற இந்திய பெருங்கெண்டைகள் உற்பத்தியாகின்றன. இதன் குஞ்சுகள் இன முதிர்ச்சி அடைய இரண்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் முதிர்ச்சி அடைந்த மீன்களைத்தான் குஞ்சு உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இனக் கலப்பு ஏற்படாமலும், வீரியமிக்கவையாகவும் இவற்றை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட சினைமீன்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகள்தான், அதிகப் பிழைப்புத்திறனையும் வேகமான வளர்ச்சியையும் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வீரியமான குஞ்சுகளைத்தான் மீன் வளர்ப்பவர்களுக்கு நாங்கள் வழங்கி வருகிறோம்.

புவனேஸ்வரில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் தேசிய சினை மீன் வங்கியில் இருந்து குஞ்சுகளை வாங்கி, இரண்டு ஆண்டுகள் வளர்த்து, வீரியம் மிக்க சினைமீன்களை உற்பத்தி செய்கிறோம்” என்றார்.

கடன் மற்றும் மானியம்

மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழ்நாடு மீன் வளத்துறை, ஒரு ஹெக்டேருக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. மீன் குளம் அமைத்து, செயல்படத் தொடங்கிய பிறகு, மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநரிடம் விண்ணப்பித்தால், மானியம் கிடைக்கும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது.