விவசாயிகளின் நலனுக்காகத் தொடங்கப்பட்டவைதான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள். கிராமப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடியவை இவ்வங்கிகள். தமிழ்நாட்டில் ஆரம்பக் காலங்களில் இதன் செயல்பாடுகள் மிகச் சிறப்பானதாகவே இருந்திருக்கின்றன. நாளடைவில் நிர்வாகச் சீர்கேடு, லஞ்சம், ஊழல், காலதாமதம், அடிப்படை வசதிகள் இல்லாமை எனப் பல வகைகளில் சீரழிவுகள் தலைதூக்கின. இதனால், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி என்ற சொல்லை உச்சரித்தாலே விவசாயிகளுக்குப் பெரும்பாலும் கசப்பான அனுபவங்கள்தான் கண்முன் வந்து நிற்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.

தனியார் வணிக வங்கிகளுக்கு நிகராகக் குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்குச் செய்யப்பட்டுள்ளன. அன்றாடம் வந்து செல்லும் விவசாயிகளுக்கு அன்பான அக்கறையான உபசரிப்புகள், பொறுப்பான சேவை, பாரபட்சம் இல்லாத சேவைகள் எனக் கடமையாற்றி வருகிறது, இவ்வங்கி.

இந்த வங்கி பற்றிக் கேள்விப்பட்டவுடன் மாத்தூர் கிராமத்துக்குச் சென்று, சில விவசாயிகளிடம் பேசினோம். முதலில் நம்மிடம் பேசியவர், ராஜாராமன்.

“25 வருஷமா, தமிழ்நாடளவுல எங்க ஊர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பல விருதுகளை வாங்கியிருக்கு. தமிழ்நாட்டிலேயே மிகச் சிறப்பான தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கின்னு, இது பெயர் வாங்கி இருக்கு. மத்திய அரசோட பண மதிப்பு நீக்க உத்தரவுக்குப் பிறகு இந்தியா முழுக்கவே பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முடங்கிதான் கிடந்துச்சு. ஆனா, எங்க ஊர் வங்கி எப்பவும் போலச் செயல்பட்டுச்சு.

தகுதியுள்ள விவசாயிகள் எல்லோருக்குமே உரிய நேரத்துல பயிர்க்கடன் கிடைச்சுடும். இங்க வேலை பார்க்கக்கூடிய ஊழியர்கள், தானாகவே விவசாயிகளைத் தேடி வந்து, உரிய காலத்துக்குள்ள பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி ஞாபகப் படுத்துவாங்க. விண்ணப்பிச்ச, சில வாரங்கள்லயே எல்லாருக்குமே கடன் கிடைச்சுடும். வழக்கம்போல, இந்த வருஷமும் எல்லா விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் கிடைச்சிடுச்சு.

எங்க ஊர் மக்கள் பெரும்பாலானவங்க தங்களோட சேமிப்புக் கணக்குகளை இந்த வங்கியில்தான் வெச்சிருக்காங்க. நினைச்ச நேரத்துல ஈசியா பணம் எடுத்துக்கலாம். அரசாங்கம் அறிவிக்கக்கூடிய விவசாயக் கடன் தள்ளுபடியும்கூட, எல்லா விவசாயிகளுக்கும் முறையா கிடைச்சிடுது” என்றார்.

அடுத்து பேசிய ராஜசேகரன் என்கிற விவசாயி, “பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள்ல நெல், கரும்புக்கு மட்டும்தான் பயிர்க்கடன் கொடுப்பாங்க. காய்கறி, மலர்களுக்கெல்லாம் கொடுக்கமாட்டாங்க. ஆனா இங்க எல்லா பயிர்களுக்குமே கடன் கிடைக்குது. அதேமாதிரி நகையை அடமானம் வைக்கவேண்டிய அவசியமும் இல்லை. சட்டப்படி கொடுக்கவேண்டிய ஆவணங்களைக் கொடுத்தாலே போதுமானது.

மாட்டுவண்டி, கறவை மாடுகள் வாங்கவும்கூட கடன் கிடைக்குது. இங்க வேலை பார்க்கிற ஊழியர்கள், எப்பவுமே விவசாயிகள்கிட்ட ரொம்ப மரியாதையா நடந்துக்குவாங்க.

தஞ்சாவூர் மாவட்டத்திலேயே, எங்களோட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில மட்டும்தான் குளிர்சாதன வசதி இருக்கு. அதேபோல எப்பவும் சுத்தமா இருக்கும். இந்த வங்கி, எல்.ஐ.சி முகவராகவும் செயல்படுது. தமிழ்நாட்டிலேயே எல்.ஐ.சி முகவராகச் செயல்படக்கூடிய ஒரே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இதுதான். அதனால கமிஷன் மூலமா லட்சக்கணக்கான ரூபாய், வங்கிக்கு வருமானமாகக் கிடைச்சிட்டு இருக்கு” என்றார்.

இப்படி விவசாயிகளிடம் பல பாராட்டுகளை இ்ந்த வங்கி பெற்று வருவதற்குக் காரணகர்த்தா, இவ்வங்கியில் 25 ஆண்டுகளாகச் செயலாளராகப் பணியாற்றி வரும் விஜயகுமார்தான். அவரிடம் பேசினோம்.

“இந்த ஊர் மக்கள், நியாயமான தேவைகளுக்குக் கடன் வாங்கி, அதை உரிய காலத்துல முறையா திருப்பிச் செலுத்திடுறாங்க. அப்படிப்பட்ட விவசாயிகளோட ஒத்துழைப்பு கிடைச்சதாலதான் நாங்க சிறப்பாகச் செயல்பட முடியுது. கிராமப்புற மக்களின் தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய அதிகாரமும் வாய்ப்பும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்குத்தான் உண்டு. அதை நாங்க சரியா செய்றோம்.

தாட்கோ, நபார்டு மூலமா போன அஞ்சு வருஷத்துல 60 லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாய உபகரணங்களுக்கான கடன் கொடுத்திருக்கோம். அதனால நிறைய விவசாயிகள் பலன் அடைஞ்சிருக்காங்க. அதேமாதிரி, நபார்டு வங்கியின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலமா, போன மூணு வருஷத்துல 60 லட்சம் ரூபாய் அளவுக்கு, கறவை மாடுகள் வாங்க கடன் கொடுத்திருக்கோம். இதுல முக்கியமான விஷயம் என்னான்னா, அந்தக் கடன்கள் எல்லாத்தையும் விவசாயிகள் கட்டி முடிச்சுட்டாங்க. தஞ்சாவூர் மாவட்டத்துல நபார்டு திட்டத்தைப் பயன்படுத்தின ஒரே கூட்டுறவு வங்கி இதுதான்.

வங்கி மூலமாவே ஆறரை லட்சம் ரூபாய்க்கு ஒரு சரக்கு வாகனம் வாங்கி, குறைந்த வாடகைக்கு விட்டிருக்கோம். இந்த வாகனம் காய்கறி சாகுபடி செய்ற விவசாயிகளுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. அந்தக் கடனையும் அடைச்சாச்சு. இப்போ நபார்டு வங்கி நிதி உதவியில், ஒரு கிராமப்புற சந்தை அமைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருக்கோம். இது உள்ளூர் விவசாயிகளுக்குப் பல வகைகள்லயும் உதவியா இருக்கும். தமிழ்நாட்டிலேயே எங்க வங்கிதான் முதன்முதல்ல கணினி மயமாக்கப்பட்ட வேளாண் கூட்டுறவு வங்கி. 17 வருஷமா நாங்க கம்ப்யூட்டர் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். அதனால, முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை.

2016-ம் ஆண்டுத் தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி மூலமாக, எங்க வங்கியில் கணக்கு வெச்சுருக்குற 597 விவசாயிகளுக்கு 1 கோடியே 88 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி ஆகியிருக்கு. உள்ளூர் மக்கள் இங்க ஒரு கோடி ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட் பண்ணியிருக்காங்க. 40 லட்சம் ரூபாய் அளவுல சேமிப்புக் கணக்கு இருக்கு” என்ற விஜயகுமார் நிறைவாக,

“இந்த ஊர் மக்கள் எந்தவொரு தேவைக்காகவும் மற்ற வங்கிகளைத் தேடிப் போக கூடாதுங்கறதுல நாங்க உறுதியா இருக்கோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளோட சிறப்பான செயல்பாடுகளுக்கு கேரளாவைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனா, தமிழ்நாட்டிலேயே எங்களை உதாரணமாக காட்டமுடியும்னு நாங்க நிரூபிச்சிருக்கோம்” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு, மாத்தூர் கூட்டுறவு வங்கி, தஞ்சாவூர் மாவட்டம். தொலைபேசி: 04374 241071