பருவமழை பொய்த்துப் போனதால், பசுந்தீவனங்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் எல்லாம் காய்ந்து கருகிப்போயுள்ளன. மேய்ச்சல் நிலங்களும் காய்ந்துபோய்க் கிடப்பதால், கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடியும் நடக்காமல் போனதால், வைக்கோலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட, இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல், பெரும்பாலான விவசாயிகள், ஆடு மாடுகளை வந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறார்கள்.

‘கால்நடை வளர்ப்பவர்கள், இப்படிப்பட்ட வறட்சிக் காலங்களை எப்படிச் சமாளிப்பது’ என்ற கேள்வியுடன் நாகர்கோவில், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் ரவிமுருகனைச் சந்தித்தோம். அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...

அசைபோடாத பிராணிகளுக்குத்தான் மாவுச்சத்து

“மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளில் அசைபோடுபவை, அசைபோடாதவை என இரண்டு வகைகள் உண்டு. ஆடு மாடு போன்றவை அசைபோடுபவை. பன்றி, முயல் போன்றவை அசைபோடாதவை. அசைபோடும் பிராணிகளுக்குச் செரிமானத்துக்காக வயிற்றில் (இரைப்பை) நான்கு பாகங்கள் இருக்கும். அசைபோடாத பிராணிகளில் ஓர் இரைப்பை மட்டுமே செரிமானத்துக்கான உறுப்பு. அதனால், அசைபோடும் பிராணிகளுக்குப் பசுந்தீவனத்தை அதிகமாகவும் மாவுச்சத்துள்ள தீவனங்களைக் குறைவாகவும் கொடுக்க வேன்டும். அசைபோடாத பிராணிகளுக்கு மாவுச்சத்துள்ள தீவனத்தை அதிகமாகவும் பசுந்தீவனத்தைக் குறைவாகவும் கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை விதி.

அசைபோடும் பிராணிகளுக்குப் பழைய சோறு ஆகாது

அசைபோடும் பிராணிகள் சாப்பிடும் பசுந்தீவனம், முதலில் சிறு வயிற்றுப் பகுதிக்குச் செல்லும். சிறு வயிற்றில் அதிகமாக இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீவனத்தைச் செரிக்கச் செய்து உருண்டையாக்கி மீண்டும் வாய்ப்பகுதிக்கே அனுப்பிவிடும். அதைத்தான் ஆற, அமர பிராணிகள் மீண்டும் வாயில் மெல்லுகின்றன. இதுதான் அசைபோடுதல்.

இப்படி மென்று உணவுப்பொருளை நன்கு அரைத்து, மீண்டும் அவற்றை மாவுப்பொருளாக வயிற்றுக்குள் அனுப்பும்போது முழுமையாகச் செரித்துவிடும்.

பசுந்தீவனம் சாப்பிடும் போதுதான் இச்செயல் நடக்கும். ஆனால் ரேஷன் அரிசி, பழையசோறு ஆகிய மாவுப்பொருள்களைக் கொடுத்தால், வயிற்றின் முதல் பகுதிக்கு அவை சென்றதுமே அங்கு, ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து, வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதனால், செரிமானம் ஆகாது. வயிறு ஊதி பெருத்து, மாடுகள் இறந்து போகக்கூட வாய்ப்புகள் உண்டு. அதனால், பசுந்தீவனம் இல்லையே என்று கண்டதையும் தீவனமாகக் கொடுக்கக்கூடாது.

கைகொடுக்கும் மரப்பயிர்கள்

வறட்சிக் காலத்தில் சவுண்டல், அகத்தி, கிளரிசீடியா, கல்யாண முருங்கை, கொடுக்காப்புளி ஆகிய மரங்களின் இலைகள், காய்களைப் பசுந்தீவனமாகக் கொடுக்கலாம். இதனால், 30 சதவிகித அளவு புரதச்சத்து கிடைத்துவிடும். இந்த இலைகளைப் பறித்து அப்படியே கொடுக்காமல், 8 மணி நேரம் வெயிலில் காய வைத்து, 90 சதவிகித அளவு நீர்ச்சத்து குறைந்தவுடன் கொடுத்தால் எளிதில் செரிமானமாகும். காயவைத்துக் கொடுக்கும்போது புளிப்புச் சுவை கலந்த வாசனை வெளிப்படுவதால் ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். ஓர் ஆட்டுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை இலைகளைக் கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ வரை கொடுக்கலாம்” என்ற ரவிமுருகன், சில தீவனப்பயிர்கள் குறித்துச் சொன்னார்.

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்

“சவுண்டல், வேலிமசால், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கோ.எஃப்.எஸ்-29 ஆகிய தீவனப் பயிர்களுக்கு அதிகத் தண்ணீர் தேவைப்படாது. ஓரளவு தண்ணீர் வளம் இருக்கும்போதே இவற்றைச் சாகுபடி செய்துவந்தால், வறட்சிக் காலங்களில் சில மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும். இவை அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் பதப்படுத்தி ‘ஊறுகாய்ப் புல்’ தயாரித்து வைத்தால், வறட்சிக் காலங்களை எளிதாகச் சமாளிக்க முடியும். அதேபோல உலர் தீவனமான வைக்கோலையும் தரம் உயர்த்தி வைத்துகொள்ளலாம். வறட்சிக் காலத்தில் கைகொடுக்கும் இன்னொரு தீவனம் அசோலா. குறைவான தண்ணீரிலேயே வளரும் இதை, உற்பத்தி செய்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். பசுந்தீவன விதைக்கரணைகள், அசோலா விதைப்பாசி போன்றவை கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களில் பதிவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன” என்ற ரவிமுருகன் நிறைவாக,

தேங்கிய நீர் குடிக்கக்கூடாது

“கால்நடைகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டியது அவசியம். தேங்கிக்கிடக்கும் குட்டை நீரை ஒருபோதும் குடிக்க அனுமதிக்கக் கூடாது. குட்டைத் தண்ணீரில் நத்தைகள் உருவாக்கும் தட்டைப்புழுக்கள் இருக்கும். இந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது புழுக்கள் வயிற்றுக்குள் சென்று நோய்களை உருவாக்க வாய்ப்புண்டு. கிணற்றுத் தண்ணீரைக்கூட வடிகட்டிதான் கொடுக்க வேண்டும். சாதாரணக் காலத்தில் கால்நடைகளுக்கு, ஒருநாளைக்கு 3 வேளை தண்ணீர் வைக்க வேண்டும். கோடைக் காலங்களில் 6 வேளை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பழைய தண்ணீரைக் கொட்டி விட்டுத்தான் புதிய தண்ணீரை தொட்டியில் ஊற்ற வேண்டும்.

வறட்சிக் காலங்களில், கால்நடைகளுக்குத் தாது உப்புப் பற்றாக்குறை ஏற்படும். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தாது உப்புப் பொடியை தினமும் கொடுத்து வந்தால் பற்றாக்குறை நிவர்த்தியாகும். தினமும் ஒரு மாட்டுக்கு 30 கிராம்; ஓர் ஆட்டுக்கு 15 கிராம்; ஒரு பன்றிக்கு 20 கிராம் என்ற அளவில் தீவனத்தில் அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றினால் வறட்சிக் காலங்களில் கால்நடைகளைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் ரவிமுருகன், செல்போன்: 94881 07766

பல்லாண்டுத் தீவனம்

“சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும்.

கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6 ஆகிய தீவனப்பயிர்களில் தாதுக்கள் அதிகமுள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால், கால்நடைகளின் தாது உப்புத் தேவை பூர்த்தியாகும். கோ.எஃப்.எஸ்-29 ரகத் தீவனப்பயிரை மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். ஓரளவு மழைக் கிடைத்தாலே நன்கு வளர்ந்துவிடும். இதைப் பச்சையாகக் கொடுக்காமல், வெயிலில் காயவைத்து வைக்கோல் போல மாற்றி, உலர் தீவனமாகவும் கொடுக்க வேண்டும். இதில் சுண்ணாம்பும், கார்போஹைட்ரேட்டும் இருப்பதால், பாலில் கொழுப்புச்சத்து கூடும்” என்கிறார், ரவிமுருகன்.

மாற்றுத் தீவனம் அசோலா

நீர் பாசி வகையைச் சேர்ந்த அசோலா கால்நடைகளுக்கு முக்கியமான மாற்றுத் தீவனமாகும். 200-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருக்கின்றன. இதில் உணவாக பயன்படும் பாசிகளில் அசோலாவும் ஒன்று. 30 சதவிகிதம் புரதச்சத்தும், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளன. சிறிய பரப்பிலேயே குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி அசோலா வளர்க்கலாம்.

9 அடி நீளம், 3 அடி அகலத்தில், பாலி எத்திலீன் ஷீட் கொண்டு தொட்டி போல அமைக்க வேண்டும். இதில், 10 கிலோ மண், 5 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைப் பரப்பி, அரை அடி உயரத்துக்குச் சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். பிறகு, 30 கிராம் ராக் பாஸ்பேட்(பாறைத்தூள்) போட்டு நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு, அரைக்கிலோ அசோலா பாசியை இட வேண்டும். தண்ணீரின் அளவு குறையாமல் பராமரித்து வந்தால், பத்து நாட்கள் கழித்துத் தினமும் இரண்டு கிலோ அளவு அசோலா கிடைக்கும். இதை மரத்தடியில் வளர்ப்பது நல்லது.

ஓர் ஆட்டுக்கு தினமும் 150 கிராம் வரை அசோலா கொடுக்கலாம். 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு தினமும் அரைக்கிலோ அசோலா கொடுக்கலாம். ஆரம்பத்தில் மாடுகள் இதைச் சாப்பிடாமல் மறுத்தால், பாசியை நன்கு கழுவி உலர்த்திக் கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற தீவனங்களோடு சேர்த்துக் கொடுத்தும் மாடுகளை சாப்பிடப் பழக்கலாம்.

பால் கறப்பதற்கு முன், அடர்தீவனம்

கறவை மாடுகளுக்குத் தீவனம் கொடுப்பது குறித்துப் பேசிய ரவிமுருகன், “கறவை மாடுகளுக்கு அடர்தீவனம் அவசியமான ஒன்று. ஆனால், கறவை மாடுகளுக்குப் பால் கறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, அடர்தீவனத்தைக் கொடுத்துவிட வேண்டும். அடர்தீவனத்தைப் புட்டுப் பதத்தில் பிசைந்துதான் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி மதிப்புக்கூட்டப்பட்ட வைக்கோலில் ஒருவித நறுமணம் வீசும். அதனால் கால்நடைகள் மிச்சம் வைக்காமல் விரும்பி எடுத்துக்கொள்ளும்.

ஊறுகாய்ப் புல்

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல். தீவனச்சோளம்,கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம்.

6X6 அடி சதுரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் மீது கொஞ்சம் சுண்ணாம்பு பொடியைத் தூவ வேண்டும். அதில் ஓர் அடி உயரத்துக்குப் புல் வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும். அதன் மேல் பயறு வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும். அதுக்கும் மேல் உலர் வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும்.

பிறகு, 4 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பைக் கரைத்துத் தீவனப்பயிர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அது அடி வரை இஞ்சியவுடன், 4 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். பிறகு, ஒரு பாலித்தீன் ஷீட் கொண்டு குழியை மூடி, ஷீட் நகராத அளவுக்கு மண், சாணம் கொண்டு மெழுகிவிட வேண்டும். இப்படி வைத்தால் 60 நாட்களில் ஊறுகாய்ப் புல் தயாராகிவிடும்.

பசுந்தீவனம் கிடைக்கும் காலங்களில் இப்படி பல குழிகள் எடுத்து பதப்படுத்தி வைத்துவிட்டால், அவற்றை வறட்சிக் காலங்களில் பயன்படுத்திச் சமாளிக்கலாம். ஊறுகாய்ப் புல்லை வெளியே எடுத்துவிட்டால் அதிக நாட்கள் வைக்க முடியாது. அதனால், விரைவாகப் பயன்படுத்தி விட வேண்டும். முற்றிய, தடிமனான தீவனச்சோளத் தண்டுகளைக்கூட இம்முறையில் பதப்படுத்தலாம்.

“இப்படித்தான் வறட்சியைச் சமாளிக்கிறேன்!”

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலூகா, வடக்கு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் முகம்மது ஃபாரூக், “ஒரு ஏக்கர்ல கோ-4 புல், 25 சென்ட்டில் சூபாபுல், 25 சென்ட்டில் அகத்தி, 50 சென்ட்டில் வேலி மசால், வேலி ஓரங்களில் கிளரிசீடியானு நடவு செஞ்சிருக்கேன்.

தலச்சேரி, போயர், ஜமுனாபாரி, சிரோகி, பீட்டில் ரகங்கள்ல 150 ஆடுகள் வெச்சுருக்கேன். ஜெர்சி, கிர், சாஹிவால் ரகங்கள்ல 12 மாடுகள் வெச்சுருக்கேன். ஆடு மாடுகளுக்குக் கோ-4, சூபாபுல், அகத்தி, வேலிமசால், கிளரிசீடியா, பலா இலை, கொய்யா இலை, வாகை இலைகள்னுதான் பசுந்தீவனமாகக் கொடுக்கிறேன். ஊறுகாய்ப் புல் தயாரிச்சு வறட்சிக் காலங்கள்ல பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். அதோட அசோலாவும் இருக்கிறதால பிரச்னையே இல்லை. கோழிகள் அசோலாவை ரொம்பவே விரும்பிச் சாப்பிடுது” என்றார்.

தொடர்புக்கு, முகம்மது ஃபாரூக், செல்போன்: 94435 80329