Published:Updated:

தண்டோரா

Vikatan Correspondent

பசுமைக் குழு

தண்டோரா
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 15-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

இயற்கை விவசாயம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் பிப்ரவரி 16-ம் தேதி ‘மருந்தில்லா மருத்துவம்’, 18-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 21-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘நாட்டு மாடுகள் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716


கெண்டை மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ‘கால்நடைகளுக்குச் சமச்சீர் உணவு வழங்குதல்’, 21-ம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

முயல் வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 15-ம் தேதி ‘தக்காளியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்’, 16-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘மண் மேலாண்மை முறைகள்’, 23-ம் தேதி ‘மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.


மர மேலாண்மை பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிப்ரவரி 22-ம் தேதி ‘உயர்ரக மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி’ நடைபெற உள்ளது. வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு, ஈட்டி போன்ற நீண்ட நாள்கள் பலன் கொடுக்கும் மரங்கள் குறித்துப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முன்பதிவு அவசியம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு, செல்போன்: 94421 43520, 94433 84746.

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 21-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249

காளான் உற்பத்தி!

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூர் கிராமியப் பயிற்சி மையத்தில் பிப்ரவரி மாதம் ‘நவீன முறையில் காளான் உற்பத்தி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 94438 44651.

கட்டணப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 27-ம் தேதி ‘காளான் வளர்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ150 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

வளர்ச்சி ஊக்கிகள்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், பிப்ரவரி 25-ம் தேதி, ‘இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.
 
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

அறிவிப்பு

தண்டோராப் பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.