Published:Updated:

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

ந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உட்பட கோடிக்கணக்கான உயிர்களின் உறைவிடம். நாங்கள்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம், என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் தான். உயிர் பன்மயத்தைச் சமன் படுத்துவதில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகம். இறந்த உடல்கள் முதல் பூமியில் விழும் இலைதழைகள் வரை அனைத்தையும் மட்கச் செய்வது நுண்ணுயிர்கள்தாம். இந்த நுண்ணுயிர்களால் விதவிதமான நோய்களுக்கு ஆளாகி, கொத்துகொத்தாக மனிதன் செத்து வீழ்ந்த வரலாறும் உண்டு.

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், மறுவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நன்மை செய்யும் நுண்ணுயிர்களைக் கண்டறிந்து அவற்றை மனிதகுல வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள், உலகெங்கும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியோர் ஆராய்ச்சியில், நன்மை செய்யும் சில நுண்ணுயிர்களைப் பிரித்தெடுத்து, அவற்றை ஒன்றாக்கி, திரவ வடிவிலான நுண்ணுயிர் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. திறன்மிகு நுண்ணுயிர்கள் எனப் பெயரிடப்பட்ட அந்தத் திரவத்தை ஆங்கிலத்தில் ‘எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கனிசம்’ (Effective Micro Organism) என்கிறார்கள். அதுதான் சுருக்கமாக இ.எம் என்றழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

இது கண்டுபிடிக்கப்பட்டது, ஜப்பான் நாட்டில். டாக்டர் டெரோ ஹிக்கா (Dr.Teruo Higa) என்ற தோட்டக்கலைத்துறை பேராசிரியர்தான் இதன் தந்தை. இவர், ஜப்பானில் உள்ள ரைகாஸ் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1980-ம் ஆண்டில்தான், இ.எம் நுண்ணுயிரியைக் கண்டுபிடித்தார், டெரோ. 80 வகையான பாக்டீரியாக்களைச் சோதனை செய்து, அவற்றிலிருந்து அனைத்துப் பொருட்களையும் வேகமாக மட்க வைக்கும் ஒரு நுண்ணுயிரியைக் கண்டுபிடித்தார். அதுதான் இந்த திறன்மிகு நுண்ணுயிரி.

குடிநீர் மற்றும் நீராதாரங்களில் சேரும் சில கிருமிகளால், மனிதர்கள் மற்றும் விலங்குகளை காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. தண்ணீரில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழிப்பதற்காக ‘ஹைப்போ குளோரைடு’ எனும் ரசாயனத்தைத்தான் அதிகளவில் பயன்படுத்துகிறோம். இதன் திரவநிலைதான் குளோரின். இதன் திட(பொடி) வடிவம் பிளீச்சிங் பவுடர். சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் இடங்களில் பிளீச்சிங் பவுடரின் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இவற்றின் அதிகப்படியான பயன்பாட்டினால் சுவாசக்கோளாறு, தோல் நோய்கள், செரிமானக் கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதோடு மட்டுமில்லாமல் இவற்றைப் பயன்படுத்தும்போது, நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் இறந்துவிடுகின்றன. இதற்கு மாற்றாக இ.எம் பயன்படுத்தலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

துர்நாற்றம் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் என்பதால் உலகின் பல நாடுகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் பயன்பாட்டுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.

2006-ம் ஆண்டு மலேசியா நாட்டில், மாசடைந்த பல பெரிய ஏரிகளைச் சுத்தம் செய்ய இ.எம் திரவத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நெல் தவிட்டில் இ.எம் திரவத்தைக் கலந்து உலர வைத்து, அதில் களிமண் சேர்த்து உருண்டைகளாக்கி, ஏரிகளில் வீசி எறிந்து தூய்மைப்படுத்தினார்கள்.

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

1980-ம் ஆண்டில் டெரோ இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும், 90-களில்தான் இந்தியாவுக்குள் நுழைந்தது இ.எம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் இதைக்கொடுத்து இந்தியாவில் சந்தைப்படுத்த சொன்னார், டெரோ. ஆனால், அவர் அதை முறையாகச் சந்தைப்படுத்த தவறவிட்டதால், இந்திய சந்தையில் இ.எம் பயன்பாடு பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படவில்லை. சமீபகாலமாகத்தான் நம் விவசாயிகளிடையே இது பிரபலமாகி வருகிறது.

2000-ம் ஆண்டில் அவுரங்காபாத் நகரில் நடந்த, ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அங்கு, ‘சின் ஜி டெக்காரா’ என்ற ஜப்பான் விஞ்ஞானியைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கருத்தரங்கில் பேசிய சின் ஜி, ‘எங்கள் நாட்டில் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறோம். அந்த ஒரே பொருள் சுற்றுச்சூழல் மாசுகளைத் தடுக்கிறது. மனிதர்களுக்கு உடல்ரீதியான பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. கால்நடைகளுக்கான சிகிச்சைக்கும் பயன்படுகிறது. அனைத்துக்கும் மேலாக விவசாயத்தில், குறிப்பாக இயற்கை விவசாயத்துக்குப் பெரிதும் துணைபுரிகிறது’ என்று இ.எம் குறித்துப் பேசினார். அதுபற்றி அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சர்யம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அடுத்தச் சில தினங்கள் வரை இ.எம் பற்றிய சிந்தனை என் மனதை விட்டு அகலவேயில்லை.

சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமுள்ள நம்நாட்டுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்குமே என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, 20 லிட்டர் இ.எம் வாங்கி, பலவகைகளில் அதைப் பரிசோதித்துப் பார்த்தேன். அதன் செயல்பாடு பிரமிக்க வைப்பதாக இருந்தது. அடுத்ததாக, அதை விவசாயத்தில் பயன்படுத்துவதற்காக சில விவசாயிகளிடம் கொடுத்தேன். அவர்களும் இதன் செயல்பாடு பற்றி சிலாகித்துப் பேசினார்கள். அதன்பிறகே இது பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது.

எங்கள் வேளாண் அறிவியல் மையம் மூலமாக விவசாயிகளுக்கு இ.எம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதோடு பல்வேறு பயிற்சிகளையும் கொடுத்திருக்கிறோம். அதன் பலனாக இன்றைக்கு விவசாயிகளே, இ.எம் தாய் திரவத்திலிருந்து விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள்.

பல்வேறு பயன்பாட்டு அடிப்படையிலான இ.எம் தொழில்நுட்பம், மக்கள் தொழில்நுட்பமாக மாற வேண்டும். திரவத்திலிருந்து விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், இ.எம் பயன்படுத்தும் விவசாயிகளின் அனுபவங்கள்  என்று பலவற்றையும் தொடர்ந்து பேசுவோம்.

- பரவும்

இவரைப் பற்றி...

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.

இ.எம். பயன்பாடுகள்

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமையலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம்.

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு இ.எம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்துகொண்ட பல நாடுகள், மாசடைந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இ.எம் திரவத்தைப் பயன்படுத்துகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism