கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ‘வானவராயர் ஃபவுண்டேஷன்’ எனும் அமைப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ‘கொங்கு நாட்டுக் கால்நடைத் திருவிழா’ என்ற விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவில் நாட்டு இன கால்நடைகளின் கண்காட்சி மற்றும் மாடுகளுக்கான அங்க லட்சணப் போட்டியும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கால்நடைத் திருவிழா, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பொள்ளாச்சியை அடுத்துள்ள சமத்தூர், ஜமீன் தென்னந்தோப்பில் நடைபெற்றது.

விழாவில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 700 நாட்டு மாடுகள் பங்கேற்றன. காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, செம்மறை, புலிகுளம் வகையைச் சேர்ந்த நாட்டு மாடுகளும் பூச்சிக்காளைகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. ‘பழைய கோட்டை பட்டக்காரர்’ ராஜ்குமார் மன்றாடியார் வளர்த்து வரும் கம்பீரமான இரண்டு பூச்சிக்காளைகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தன. கண்காட்சியின் நிறைவு நாளில் குதிரை, ஆடு, சேவல், நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்துப் பேசிய, வானவராயர் ஃபவுண்டேஷன் அமைப்பின் செயல் அறங்காவலர் சங்கர் வானவராயர், “பாரம்பர்ய கால்நடைகள் குறித்தான விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்தத் திருவிழாவை நடத்தி வருகிறோம். இது மூன்றாவது ஆண்டுத் திருவிழா. தற்போது நாட்டு மாடுகள் அருகிவிட்டதால், அவற்றின் விலை உயர்ந்துவிட்டது. அதனால், நடுத்தர வர்க்க விவசாயிகள், நாட்டு மாடுகளை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் அனைவரும் அவற்றை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தவிர, நாட்டு மாடுகள் மூலம் நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் வழிமுறைகளையும் நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். பால், தயிர், மோர், நெய், பஞ்சகவ்யா, அர்க், சோப்பு, விபூதி, அமிர்தசஞ்சீவி, குளியல் எண்ணெய்... என்று நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர், பால் ஆகியவற்றை மதிப்புக்கூட்டி நல்ல வருமானம் பார்க்க முடியும். அதற்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறோம். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பாரம்பர்ய மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஆர்வம் பெருகிவருகிறது. இந்தக் கால்நடைக் கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து சென்றுள்ளனர். இதுவொரு நல்ல மாற்றம்” என்றார்.

இந்தக் கால்நடைத் திருவிழாவில் 25 அரங்குகள் கொண்ட விவசாயக் கண்காட்சியும் நடைபெற்றது.

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள்

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கக்கூடிய துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை... போன்ற முப்பது வகையான மூலிகை நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, ஒவ்வொரு மூலிகையின் மருத்துவப் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04298 243773