கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து சர்ச்சை சலசலக்கிறது. பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மறுத்துள்ளது, டெல்லியைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவரும், தேசிய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு (Indian Council of Agricultural Research-ICAR). இதனால், பல்கலைக்கழகத்தில் விவசாயம் குறித்து நடை பெற்றுவரும் ஆராய்ச்சிகள் பாதிக்கப் பட்டிருப்பதோடு, மாணவர்களுக்குத் தரமான கல்வியும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று சிலர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள்.

அதேசமயம், ‘எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் சரியாகிவிட்டது’ என்று மறுக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் மற்றும் பயனீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் நடேசன். “மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பலவித ஆராய்ச்சிகளுக்காக நிதியுதவியும் செய்து வருகிறது. தொழில்நுட்பம், புதிய பயிர் ரகங்கள் கண்டுபிடிப்பு, மற்ற வேளாண்மை பல்கலைக்கழகங்களுடனான ஒருங்கிணைப்பு போன்றவற்றுக்கு இக்குழுவின் அங்கீகாரம் தேவை.

2009-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை, 2014-ம் ஆண்டில் புதுப்பித்திருக்க வேண்டும். அதற்கான பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டபோதும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஐ.சி.ஏ.ஆர் மறுத்துவிட்டது. ‘ஐ.சி.ஏ.ஆர் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் பணிபுரிந்த பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இக்குழுவின் அனுமதி இல்லாமலேயே, பல புதிய துறைகளுக்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த விஞ்ஞானிகள், வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளில் போதிய கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்று அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மறுத்ததற்குக் காரணம் சொல்லப் பட்டிருக்கிறது. இதனால், மாணவர்களுக்குத் தரமான ஆராய்ச்சிக்கல்வி கிடைக்கும் வாய்ப்பு நழுவிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் பேராசிரியர்கள் சிலரிடம் இவ்விவகாரம் குறித்து கேட்டபோது, “இங்கு படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் வேளாண்மைப் பல்கலைக் கழகங்களுக்கு உயர் ஆராய்ச்சிக் கல்விக்காகச் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல பிறமாநில மாணவர்கள் பலரும் இங்கு வந்து உயர்கல்வி பயில்கிறார்கள்.

இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அது தடைபடும். இதனால், எதிர்காலத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறமையான விஞ்ஞானிகள், நமக்குக் கிடைக்காமல் போவார்கள். அவர்களின் வேலைவாய்ப்பு முன்னுரிமை பறிபோகும். நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைக் கொடுத்து வரும் தனியார் அமைப்புகள், தங்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும். அங்கீகாரத்தை மீண்டும் பெற்று, உலக அளவில் சிறந்த வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும், இதன் பெருமையை மீட்க வேண்டும்” என்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, “பல்கலைக்கழகம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஆசிரியர் நியமனம் மற்றும் புதிய துறைகள் தொடங்கப்பட்டதில் எந்தவொரு விதிமீறலும் இல்லை. முறைகேடும் கிடையாது. மாணவர்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி நிர்வாகம் இயங்கி வருகிறது,

பல்கலைக்கழக பணிகள் தொடர்பாக ஐ.சி.ஏ.ஆர் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அவற்றுக்கெல்லாம் சரியான, நியாயமான விளக்கத்தைக் கடிதம் மூலம் நாங்கள் அனுப்பி வைத்தோம். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். வழக்கம்போல் நிதியும் வழங்கியுள்ளார்கள்.

ஓரிரு வாரங்களில் அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டுவிடும். இந்தப் பிரச்னையால் மாணவர்களுக்கோ ஆராய்ச்சிப் பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம்போல் புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கான தொடர் ஆராய்ச்சிகள் தொய்வில்லாமல் நடந்து வருகின்றன. புதிய பயிர் ரகங்களின் கண்டுபிடிப்புகளும் சுணக்கம் இல்லாமல் நடந்துவருகின்றன” என்றார்.