Published:Updated:

விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!

Vikatan Correspondent

அறிவிப்புதுரை.நாகராஜன்

விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!
விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!
விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!

டந்த பிப்ரவரி 1-ம் தேதி, 2017-18-ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில், வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையையும் பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை, ‘விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட நிதிநிலை அறிக்கை’ என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!

இந்த நிதிநிலை அறிக்கை அலங்காரமான வார்த்தை ஜாலம்தானா, இல்லை உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடியதா என்று விவசாயிகளின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சில விவசாயப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் கு.நல்லசாமி: “விவசாயிகளுடைய அறியாமையைப் பயன்படுத்தி இப்படி பட்ஜெட் வெளியிடுகிறார்கள். பிரதமர் புகழும் அளவுக்கெல்லாம் இது விவசாயிகளுக்கு உதவக்கூடியதாக இல்லை. ஏழாவது சம்பள கமிஷன் கொண்டுவந்த மோடியால் விவசாய கமிஷன் அமைக்க முடியவில்லை. ரூபாய் நோட்டை செல்லாது எனத் தடாலடியாக அறிவித்தவர், விவசாயிகளுக்காகப் பயன்படக்கூடிய திட்டங்களை அறிவிக்கவில்லை.

விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசாங்கத்திடம் இருந்தபோதே நிறைய இன்னல்களை அனுபவித்தோம். இந்த லட்சணத்தில் தனியாரிடம் சென்றால் அதோகதிதான்.”

விவசாயிகளுக்குப் பயன் தருமா? நிதிநிலை அறிக்கை!

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர், சி.வையாபுரி:    “பட்ஜெட் ஆரம்பிக்கும்போது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் பட்ஜெட் அறிவித்த பிறகு, அவை தூள் தூளாகிவிட்டன. விவசாயிகள் இறப்பைத் தடுப்பது குறித்து நடவடிக்கை இல்லை. தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்க திட்டங்கள் இல்லை.

நமக்கு முக்கியமான விஷயம், காவிரி தண்ணீர்தான். அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணாமல், விவசாயத்துக்கு என்ன பட்ஜெட் போட்டாலும் அது வீண்தான்.”