அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அள்ள அள்ளக் குறையாத மீன்வளத்தை மட்டுமல்ல; இன்னும் எண்ணற்ற இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது கடல். சொல்லப்போனால், இந்தப் பூமி உயிர்ப்போடு இருப்பதற்கான முக்கியமான ஆதாரங்களில் முதன்மையானது கடல். ஆனால், அந்தக் கடலுக்கு நாம் கொடுக்கும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல.

ராக்கெட் சோதனை, ஏவுகணை சோதனை, கப்பல் கழிவுகள், நகர்ப்புறக் கழிவுகள், இன்னபிற கழிவுகள் என எல்லாவற்றையும் நடத்துவதும் கொட்டுவதும் கடலில்தான். இவையெல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தவரை சரி. ஆனால், தற்போதைய நுகர்வு கலாசாரக் காலத்தில்... கட்டவிழ்த்துவிட்டது போல கடற்பரப்பை தாறுமாறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

‘இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் மீன்கள்கூட அற்றுப்போகும் நிலை ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறார்கள் அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும்! ஆனால், அதையெல்லாம் இந்த மனித இனம் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை. இதற்குச் சமீபத்திய உதாரணம்தான்... சென்னை, எண்ணூர் துறைமுகக் கப்பல்கள் மோதல், அதைத் தொடர்ந்து கடற்பரப்பை நாசம் செய்து கொண்டிருக்கும் எண்ணெய்ப் படலம்!

இந்தக் கொடுமை நடந்த பிறகு, அதை நம்மவர்கள் கையாளும் கூத்து... காலக் கொடுமை. எண்ணெய்ப் படலத்தை வாளியில் அள்ளுவதன் மூலமாக, தொழில்நுட்பங்களில் நாம் எந்த அளவுக்குப் பின் தங்கியிருக்கிறோம் என்பதை உலகுக்கே டமாரம் அடித்துள்ளோம். ‘டிஜிட்டல் இந்தியா...’ என்றெல்லாம் நவீன தொழில்நுட்பங்கள் பற்றிப் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற ஆபத்துகளைக் கையாள்வதற்கான குறைந்தபட்ச தொழில்நுட்பங்கள்கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையே!

கண்களை விற்றுச் சித்திரம் வாங்கத் துணிய வேண்டாம். இயற்கை வளங்கள் நிறைந்திருந்தால்தான், ‘டிஜிட்டல் இந்தியா’வுக்கும் மரியாதை!

- ஆசிரியர்