Published:Updated:

இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்லும் சங்ககால பாடம்!அறிவிப்புஆறுச்சாமி

இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்லும் சங்ககால பாடம்!அறிவிப்புஆறுச்சாமி

Published:Updated:
இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்த, 2017-18-ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்குரிய மாநில அளவிலான கடனுதவி அறிக்கை வெளியிட்டு விழா மற்றும் கடனுதவிக் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

அண்மையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ‘‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக பெருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இலக்கை அடைய சரியான திட்டமிடல் வேண்டும். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், சங்க காலத்திலேயே ஐந்து வகை நிலங்களாகப் பிரித்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்துக்கு தக்கப்படி வாழ்ந்துள்ளனர். மலைப் பகுதிக்கு ஏற்ற பயிர்கள், கடற்கரை பகுதிக்கு ஏற்றப் பயிர்கள் என... நுணுக்கமாக விவசாயம் செய்து வந்தார்கள். இந்த அற்புதமான முறையை மீண்டும் பின்பற்றினால்தான், விவசாயிகளின் வருமானம் பெருகும்.

இன்றைய சூழ்நிலையில் விவசாயப் பணிகளில் பெண்கள்தான் அதிகளவு ஈடுபடுகிறார்கள். ஆனால், நிலத்தின் பட்டா, ஆண் பெயரில் மட்டுமே உள்ளது. இதனால், விவசாயி மரணமடையும்போது, சொத்துரிமை இல்லாமல், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். வரும்காலங்களில் நிலத்தின் பட்டாவில், கணவன்-மனைவி இருவரின் பெயரும் இடம்பெறச் செய்ய வேண்டும். கிசான் கார்டுகளும் பெண் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இளைஞர்கள் கையில்தான் எதிர்காலம் உள்ளது. எனவே, விவசாயத்தில் இளைஞர்கள் கால்பதித்துச் சாதனை செய்ய முன்வர வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, ‘‘தமிழ்நாடு, விவசாயத்தில் முன்னோடியாக உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு பெருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஏத்தப்பூர் அருகில் உள்ள அபிநவம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயியும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பரமசிவமும் ஒருங்கிணைந்தப் பண்ணை முறையில் இரண்டு மடங்கு அல்ல; பல மடங்கு வருமானத்தை எடுத்து வருகிறார்கள். இவர்களைப்போல விவசாயத்தில் சாதனை செய்துவரும் விவசாயிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் நபார்டு வங்கி உறுதுணையாக இருக்கும்’’ என நம்பிக்கையூட்டினார்.
 
‘‘தமிழ்நாடு அரசு, வேளாண்மைத் துறையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உற்ற துணையாக நபார்டு வங்கி உள்ளது. நம் மாநிலத்தில் ஏராளமான வேளாண் துறைச் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது,  புதிய நுட்பங்கள், பண்ணைக்கருவிகள், நலத்திட்டங்கள்... உள்ளிட்ட தகவல்களைப் பற்றி விவசாயிகளிடம், கொண்டு சொல்ல வேண்டிய பொறுப்பு, வேளாண்துறை விவரிவாக்கப் பணியாளர்களுக்கு உள்ளது. முதலில் விரிவாக்கப் பணியாளர்கள், விவசாயிகள் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்போதுதான், விவசாயிகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் பணியாற்ற முடியும்’’ என தனது உரையின் மூலம் ஆலோசனை வழங்கினார் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், நிதித்துறை செயலருமான கே. சண்முகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு மடங்கு வருமானமும் ஐந்து வகை நிலங்களும்!

நபார்டு தயாரித்துள்ள கடனுதவி அறிக்கையில் 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.1.90 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விவசாயத்துறையின் பங்கு ரூ.1.20 லட்சம் கோடியாகவும் மத்திய, சிறு மற்றும் குறு தொழில் வர்த்தக நிறுவனங்களின் பங்கு ரூ.35,836 கோடியாகவும் வீட்டு வசதி ரூ.10,529 கோடியாகவும் இதர முன்னுரிமை பிரிவின் பங்கு ரூ. 8,899 கோடியாகவும் இருக்கும். இது கடந்த ஆண்டைவிட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக சிறந்த விவசாயிகளுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. சுய உதவிக் குழுக்கள், வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், மிகச்சிறந்த முறையில் பங்களித்த வங்கிகள் மற்றும் அமைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளிலுமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கி, திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை பரிசுகளைப் பெற்றன. நிகழ்வில் வேளாண் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்களும், கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.