தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பயறு வகைகள், சிறுதானிய வகைகள் ஆகியவற்றை மானாவாரி முறையில்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பொதுவாக, தென்மேற்குப் பருவ மழையை நம்பி ஆடிப்பட்டத்தில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் புரட்டாசிப்பட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை நம்பியும் மானாவாரி சாகுபடி நடந்துவருகிறது. இப்பட்டத்தில் பனியில் விளையக்கூடிய மொச்சை, கொண்டைக்கடலை ஆகியவற்றைப் பெரும்பாலானோர் சாகுபடி செய்வார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள பணிக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி காவேரியம்மாள், பட்டம் தவறாமல் மொச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு மாலை நேரத்தில் மொச்சையைப் பறித்துக்கொண்டிருந்த காவேரியம்மாளைச் சந்தித்த போது மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார். “எங்களுக்கு மொத்தம் 6 ஏக்கர் நெலம் இருக்கு. கிணத்துப் பாசனத்துல 4 ஏக்கர் நஞ்சைப் பூமியும், மானாவாரியா 2 ஏக்கர் மேட்டுக்காடும் இருக்கு. ரெண்டுமே பங்கமில்லாத வெளைச்சல் கொடுக்கிற வளமான செம்மண் பூமி. மானாவாரி சாகுபடி நிலத்துல மாசி, பங்குனி மாசங்கள்ல கிடைபோட்டு வெச்சிடுவோம். சித்திரை மாசத்துல புழுதி உழவு ஓட்டி வெச்சிடுவோம்.

எங்க பகுதியில் ஆடிப்பட்டத்துல மானாவாரியா ராகி, சோளம், கம்புனு தானிய வெள்ளாமைதான் செய்வோம். அதுல அறுவடை முடிஞ்சதும் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி ஆழமா ரெண்டு தடவை உழுது வைப்போம். அப்புறமா புரட்டாசிப்பட்டத்துல நாட்டு மொச்சை (இப்பகுதியில் ‘காட்டவரை’ என்று அழைக்கிறார்கள்) விதைப்போம். மானாவாரி வெள்ளாமைங்கிறதால பாத்தி, வரப்புன்னு அமைக்கிற வழக்கம் இல்லை. மழை கிடைச்சவுடனே அரை அடிக்கு ஒரு விதைன்னு உழவு சால்ல மொச்சையை விதைச்சு விட்டுடுவோம். ஏக்கருக்கு 4 கிலோ அளவு விதை விதைப்போம். அந்த மாசத்துல கிடைக்கிற மழையிலேயே பயிர் பிடிச்சு வளந்திடும். களை வந்தா பிடுங்குறதோட சரி. வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. கிடைக்கிற மழை, பனியிலேயே மொச்சை நல்லா வளந்து வந்துடும். தை மாசம் அறுவடை பண்ணிடுவோம்” என்று தனது மானாவாரி சாகுபடி அனுபவங்கள் குறித்துப் பேசிய காவேரியம்மாள் தொடர்ந்தார்.

“காட்டவரை பருப்பை பச்சையாவும் சமைச்சும் சப்பிடலாம். காய வெச்சு இருப்பு வெச்சும் பயன்படுத்தலாம். இதுல தோலை நாம சாப்பிட முடியாது. முத்தின காய்களைக் களத்துல கொட்டி வெயில்ல நல்லா காய வெச்சு, தடியால அடிச்சா, காய்ஞ்ச விதைகள் கிடைக்கும். இது பாரம்பர்ய ரகங்கிறதால பக்குவம் பண்ணி, விதைக்கும் எடுத்து வெச்சுக்கலாம். புத்து மண் மாதிரி பொல பொலப்பான செம்மண்ணுல தண்ணிவிட்டு பிசைஞ்சு, அதுல பச்சை விதைகளைக் கொட்டி புரட்டணும். அதை அப்படியே வெயில்ல காயவெச்சு எடுத்துப் புடைச்சா மண் எல்லாம் போயிடும். இதை மூட்டைப் பிடிச்சு விதைக்குப் பத்திரப்படுத்தி வெச்சுக்கணும். இப்படிப் பக்குவம் பண்ணிட்டா மூணு வருஷம் வரை வெச்சிருந்து விதைக்கலாம். நல்ல வீரியம் இருக்கும்” என்ற காவேரியம்மாள் நிறைவாக,

“பருவமழை பங்கமில்லாம கிடைச்சா ஏக்கருக்கு 600 கிலோ வரைகூட மகசூல் கிடைக்கும். இன்றைய தேதிக்கு ஒரு கிலோ 65 ரூபாய்னு விக்குது. நல்லபடியா விளைஞ்சு வந்தா, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அறுவடை பண்ணினதுக்கப்பறம் செடிகளைக் காய வெச்சு ஆடு மாடுகளுக்குத் தீவனமா போட்டுடுவோம். இதுல புரதச்சத்து அதிகம் இருக்கிறதால கறவை மாடுகளுக்குச் சாப்பிட கொடுத்தா பால் தரமா கிடைக்கும். இந்தப் பயிர்ல இன்னொரு விசேஷம் என்னான்னா மழை இல்லாட்டியும் பனியிலேயேகூட ஓரளவுக்கு விளைஞ்சு வந்துடும். எங்களை மாதிரி மானாவாரி விவசாயிகளுக்கு இந்த மாதிரியான பயிர்கள்தான் ஓரளவுக்கு வருமானம் கொடுத்துட்டு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

வருமுன் காக்க வேண்டும்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பெரியண்ணனிடம் மொச்சை சாகுபடி குறித்துப் பேசினோம். “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மொச்சை சாகுபடி இருக்கு. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல இது முக்கியமான மானாவாரி பயிர்.

எங்க பகுதிகள்ல திடீர்னு விருந்தாளிகள் வந்துட்டா, உடனடியா ‘அரிசி பருப்புச் சாதம்’தான் சமைச்சு பரிமாறுவோம். அரிசி, மொச்சைப் பருப்பு கலந்து செய்ற கூட்டாஞ்சோறு இது. அதுக்காக எப்பவும் வீட்டுல காய்ஞ்ச மொச்சையை வெச்சிருப்போம். நிறைய பேர் இதை மானாவாரியில் தனிப்பயிரா சாகுபடி செய்றாங்க. மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் ஊடுபயிராவும் இதை விதைப்பாங்க. புரதம் அதிகம் இருக்கிறதால சத்தான உணவு இது. நிறைய வீரிய ரக மொச்சையெல்லாம் வந்தாலும், எங்க பகுதியில் இந்த நாட்டு மொச்சை ரகத்தைத்தான் சாகுபடி செய்வோம். அதனாலதான் இன்னும் இந்த ரகம் அழியாம இருக்கு.

இதுல, பெரும்பாலும் நோய்த்தாக்குதல் இருக்காது. காய்கள் முத்தும்போது சில சமயங்கள்ல காய்ப்புழுத் தாக்குதல் இருக்கும். அதனால, முன்னெச்சரிக்கையா பூச்சிவிரட்டியைத் தெளிச்சு விட்டுடணும். ஒரு லிட்டர் புங்கன் எண்ணெய், 2 லிட்டர் வேப்பெண்ணெய், 50 கிராம் காதிசோப் கரைசல் மூணையும் ஒண்ணா கலந்து... அதுல 100 மில்லியை 10 லிட்டர் குளிர்ந்த தண்ணீரில் கலந்து காய்கள் நனையும்படி தெளிச்சா காய்ப்புழுக் கட்டுப்படும். அதோட அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சிகளும் கட்டுப்படும்’’ என்றார்.

தொடர்புக்கு, பெரியண்ணன், செல்போன்: 99444 80255