Published:Updated:

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

ந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உட்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாங்கள்தான், உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறித்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான், இ.எம் என அழைக்கப்படும் திரவ வடிவிலான நுண்ணுயிர் தொகுப்பு. இதைத் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்குகிறது, இத்தொடர்.

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

சுகாதாரம், நீர்நிலை பாதுகாப்பு, விவசாயம், ஆரோக்கியம்... எனப் பல பயன்களைக் கொடுக்கிறது, இ.எம். சுகாதார மேம்பாட்டுப் பணிகளில் குளோரினுக்கு மாற்றாக இது பயன்படுகிறது. விவசாயத்தில் இ.எம் பயன்பாடு காரணமாகப் பூக்காத மரம் பூக்கிறது. பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது, மண்வளம் கூடுகிறது. இதனால்தான், வெளிநாடுகளில் இதைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதில் உள்ள அறிவியலையும், மனித வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இது செய்யும் நன்மைகளையும் தெரிந்து கொண்டால் நீங்களும் இதைக் கொண்டாட ஆரம்பித்து விடுவீர்கள்.
 
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களின் திரவ வடிவமான திறன்மிகு நுண்ணுயிர்களின் அடிப்படைப் பணி, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை முடக்கிவைப்பதுதான். இதனால், துர்நாற்றம் தடுக்கப்படுகிறது. அதேபோல், பாசன நீரில் இ.எம் பயன்படுத்துவதால் மண்ணில் இருக்கும் பொருள்கள் மட்கும். இதேபோல மண்ணில் உள்ள சில சத்துக்களை இ.எம் நுண்ணுயிரிகள் சிதைத்துவிடுவதால், பயிர்கள் அவற்றைச் சுலபமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. இந்த நுண்ணுயிர்கள், உயிர் வாழும் வரை தீமை செய்யும் நுண்ணுயிர்களைச் செயல்பட விடாமல் தடுப்பதுடன், இறந்த பிறகும் இதன் உடலில் உள்ள சத்துக்கள் மண்ணுக்கு உரமாகின்றன. இறந்த பிறகும் அடுத்த உயிருக்கு உதவும் இந்தச் சிறிய உயிரியிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

கோழிப்பண்ணைகளில் அதிகளவு அமோனியா வாயு உற்பத்தியாகும். இந்தப் பண்ணைகளில் இ.எம் தெளிப்பதால், அமோனியா வாயுவை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இதனால், பண்ணைகளில் அமோனியா வாயு உற்பத்தி குறைவதுடன், துர்நாற்றமும் குறைகிறது. விற்பனைக்குக் கிடைக்கும் தாய் திரவத்தை வாங்கி, அதிலிருந்து செறிவூட்டப்பட்ட இ.எம் திரவத்தைத் தயாரித்து பயன்படுத்த முடியும்.

இ.எம் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ளும் முன்பு, தாய் திரவத்திலிருந்து   செறிவூட்டப்பட்ட (Activated E.M) இ.எம் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தாய் திரவத்தில் 20 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் என்று இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஒரு லிட்டர் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்க முடியும். இதனால், அதன் வீரியம் குறைவதில்லை. விவசாயிகளுக்கும் அதிகளவில் தாய் திரவம் வாங்கும் செலவும் குறையும். செறிவூட்டப்பட்ட இ.எம் திரவத்தைக் கழிவறை மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிப்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாக, எத்தனை லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்க இருக்கிறோமோ அந்த அளவில் பிளாஸ்டிக் டிரம்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். டிரம்முக்குள் அதிகமான காலி இடம் இருக்கக்கூடாது. இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும். இது இ.எம் கரைசலின் வீரியத்தைப் பாதிக்கும்.

டிரம்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். டீசல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்திய டிரம்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல செறிவூட்டப்பட்டஇ.எம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். குளோரின் கலந்த கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில், அந்தத் தண்ணீரை நான்கு நாள்கள் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.

100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், 94 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். 5 கிலோ வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லத்துக்கு பதிலாக 5 கிலோ மொலாசஸ் அல்லது கழிவு சர்க்கரையை கரைத்து ஊற்றலாம். இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ, கிடைப்பது அரிதாக இருக்கும்பட்சத்தில் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இந்த டிரம் மீது நேரடியாக வெயில் படக்கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து உடனே மூடி விட வேண்டும். கலக்க தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை, சில அறிகுறிகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட்டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல மணம் வரும். அப்படி வந்தால் அது பயன்பாட்டுக்கு ஏற்றது. மாறாக, துர்நாற்றம் வீசினால் அதைப் பயன்படுத்தக்கூடாது. சுத்தமில்லாத டிரம், குளோரின் கலந்த தண்ணீர் போன்ற காரணங்களால் கெட்டுப் போக வாய்ப்பு உண்டு.

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2

தயாரிக்கப்பட்ட கரைசலின் கார அமில நிலை 2.5 முதல் 3.5 வரை இருக்க வேண்டும். கரைசலின் மேல்பகுதியில் வெண்மை நிறத்தில் ஆடைபோல ஈஸ்ட் படர்ந்திருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அந்தக் கரைசல் பயன்படுத்த ஏற்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசலைப் பயன்படுத்தும் முறை, அவற்றின் அளவு போன்றவை, அடுத்த இதழில்...

- பரவும் 

நோய்த்தொற்றில் இருந்து காக்கும் இ.எம்

க்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஏற்படும் சுகாதாரக் கேட்டைச் சரி செய்ய இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் இ.எம் கரைசல் பயன்படுத்தப் பட்டு நோய்த்தொற்று தடுக்கப்பட்டது. தொற்றுப் பரவாமல் இருக்கப் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தும் இடங்களில் இதைப் பயன்படுத்துவதன் மூலமாக, துர்நாற்றம் ஏற்படும் கிருமிகளின் செயல்பாடுகள் முடங்குவதுடன், மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும்

ஒரு லிட்டர் 10 ரூபாய்!

நூறு லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்க அதிகபட்சமாக 1,000 ரூபாய்் செலவாகும். ஆக, ஒரு லிட்டர் இ.எம் 10 ரூபாயில் நமக்குக் கிடைத்துவிடும். கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காக நாம் வாங்கும் ரசாயன திரவங்களின் விலையுடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவான விலையே. அதோடு, அளவில்லாத ஆரோக்கியம் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சில இடுபொருள்களைவிட இதைத் தயாரிக்கும் செலவு மிகவும் குறைவு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism