Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

தீவன வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 8-ம் தேதி ‘கரும்பில் பூச்சி நிர்வாகம்’, 13-ம் தேதி ‘சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல்’, 15-ம் தேதி ‘மஞ்சளில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 21-ம் தேதி ‘மண்வள மேம்பாட்டில் இயற்கை எருக்களின் பங்கு’, 24-ம் தேதி ‘கறவை மாடுகளுக்கான தீவன வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மீன்களிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 3-ம் தேதி ‘நெல்லில் ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை முறைகள்’, 10-ம் தேதி, ‘ஒருங்கிணைந்தப் பயிர் மற்றும் மேலாண்மை முறைகள்’, 16-ம் தேதி ‘கோடைக்கால கால்நடைப் பராமரிப்பு’, 17-ம் தேதி, ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

நாட்டுக்கோழி வளர்ப்பு

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 7-8 தேதிகளில் ‘கால்நடைகளில் நோய்த்தாக்குதல் பராமரிப்பு’, 14-15 தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 21-22 தேதிகளில் ‘கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04175 206577


முயல் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 2-ம் தேதி ‘காடை வளர்ப்பு’, 3-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 7-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, மார்ச் 14-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
 
தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கட்டணப் பயிற்சிகள்

பாரம்பர்ய விதைக் கண்காட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்.எஸ்.ஏ.சி.டெக் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அஸ்வத் ஈகோ ஆர்கானிக்ஸ் இணைந்து மார்ச் 4-ம் தேதி பாரம்பர்ய விதை, அரிசி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்த உள்ளன. முன்னோடி விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘பூச்சி’ செல்வம், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில்... போன்றவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நுழைவுக் கட்டணம்... பொதுமக்களுக்கு ரூ50, மாணவர்களுக்கு ரூ20. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 98416 11045, 98841 66772.


அலங்கார மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 3-ம் தேதி ‘உளுந்து சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’, 13-ம் தேதி ‘ஒருங்கிணைந்தப் பயிர் மற்றும் மண் மேலாண்மை முறைகள்’, 24-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள்’,31-ம் தேதி ‘சைவ மற்றும் அசைவ உணவுக்கான மசாலாப்பொடிகள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.


இயற்கை வேளாண்மைப் பயிற்சி


கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 4-ம் தேதி ‘இயற்கை வேளாண்மைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோராப் பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.