Published:Updated:

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

கால்நடைப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள்... துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி, தே.அசோக்குமார்

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

சென்னை, மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய தொழில் நுட்பங்களான... 21 நாள்களில் 180 கிராம் எடை வளரும் நாமக்கல் இறைச்சிக் காடை; மாடுகளின் சினைப் பருவ கருத்தரிப்புச் சாதனம்; மாடுகளிடம் காணப்படும் தோல் அரிப்பு நோயை நீக்கும் களிம்பு; கறவை மாடுகளின் காம்புகளைக் காக்கும் மாஸ்டிகார்டு கலன் மற்றும் புதிய வகை மாட்டுக் கிட்டி; மாடுகளைத் தாங்கி நிறுத்தும் கருவி; கறவை மாடுகளுக்கான புதிய இனப்பெருக்கச் சிகிச்சை மருந்து; கால்நடை மற்றும் கோழிப் பண்ணையாளர்களுக்கான ஊடக தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமான ‘கைபேசி செயலி’ (Mobile App) ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

இதுகுறித்து  பேசிய துணைவேந்தர் திலகர், “எளிய தொழில்நுட்பங்களை மிகக்குறைந்த செலவில் உழவர் பெருமக்களுக்கு வழங்கும் நோக்கத்தில், ஆண்டுக்கு ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் பணிகள் உழவர்களைச் சென்றடைய வேண்டும். இதற்காக கால்நடை பராமரிப்பில் தேவைப்படும் நுட்பங்கள், கருவிகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளோம். இவற்றை உழவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். இதுகுறித்து வழங்கிய தகவல்கள் கீழே இடம்பெறுகின்றன.

நானோ ஹீல்

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

து நானோ கால்சியம் துகள்களால் ஆன புண்களை ஆற்றும் களிம்பு. இக்களிம்பு கால்நடைகளின் செல் வளர்ச்சியை ஊக்குவித்து புண்களைக் குணமடையச் செய்கிறது. இக்களிம்பில் உள்ள ஜெலட்டின், புண்களின் மேல் பாதுகாப்புத் திரையை ஏற்படுத்துகிறது. இதோடு இக்களிம்பு ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. நுண்ணுயிரி தாக்குதலுக்கு எதிராகவும் செயல்படுகிறது.

நானோ டெர்மல் கிரீம்

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

சிறிய வடிவிலான ஆங்கில மருந்துகள்கொண்ட களிம்பு இது. கால்நடைகளில் மாலினீசிய எனும் பூஞ்சைக் காளான் தாக்கத்தை இது கட்டுப்படுத்துகிறது. இக்களிம்பு எளிதில் பரவும் தன்மை உடையதாக இருப்பதால், களிம்பின் மூலப்பொருள்கள் விரைவாகச் செயல்படும் சூழல் உருவாகிறது. இது நானோ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட களிம்பு. 

சர்ஜிக்கல் ஸ்கரப் கலன் 

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

ங்கில மருந்து கரைசல்களைக்கொண்ட இக்கலன் கிருமிநாசினியாகப் பயன்படுகிறது. இக்கலனின் கரைசல்களைப் பரிந்துரைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தும்போது கால்நடைகளில் நூறு சதவிகிதக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

டீட் ப்ரொடெக்ட் 

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

றவை மாடுகளின் பால் காம்புகளைக் கிருமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஜெல் இது. பால் கறந்த பிறகு, இதைத் தடவும்போது காம்புகளின் மீது ஒரு படிவமாக மாறி, நோய் தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கிறது. இந்த டீட் ப்ரொடெக்ட் எந்த ரசாயனங்களும் இன்றி முழுவதும் இயற்கை மூலப்பொருள்களால் உருவாக்கப்பட்டது. இத்துடன் சோமட்டிக் அணு கணக்கீட்டுக் கலனை உபயோகிப்பதன் மூலம் மடி அழற்சி நோய் தாக்கப்பட்டுள்ளதையும் அறிய முடியும்.

மாடுகளைத் தூக்கும் கருவி

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

காய்ச்சலால் எழ முடியாமல் இருக்கும் மாடுகளைத் தூக்கும் கருவி இது. இடுப்பு எலும்பின் இரு பகுதிகளில் இக்கருவியைப் பொருத்தி, இழுவை செயின் கொண்டு தூக்கலாம். நடுவில் சுருள் கம்பியின் மூலம் இணைக்கப்பட்ட ‘ப’ வடிவ கம்பிகளைக் கொண்டது. இக்கம்பிகள் நைலான் மற்றும் பஞ்சு உறைகளால் பின்னப்பட்டுள்ளன. இதனால், இக்கம்பிகள் மாடுகளின் இடுப்பு எலும்பில் இறுக்கப்படும்போது காயங்கள் ஏற்படாது. சிறிய, நடுத்தர மற்றும் அதிகளவு உடல் எடை கொண்ட அனைத்து ரக மாடுகளையும் தூக்க முடியும். மூன்றரை கிலோ எடைகொண்ட இதன் மூலம், 700 கிலோ வரையிலான எடைகொண்ட மாடுகளைத் தூக்க முடியும். இதன் விலை 13 ஆயிரத்து 400 ரூபாய்.

கறவை மாடுகளைக் கட்டுப்படுத்தும் மாட்டுக் கிட்டி 

கண்டுபிடிப்பு - மாடுகளைத் தூக்கும் கருவி... புண்களுக்குக் களிம்பு...

ந்த மாட்டுக் கிட்டி அலுமினிய பைப்பால் ஆனது. ஆறு அடி நீளம், மூன்று அடி அகலத்தில் உள்ள இதன் முன்பகுதி உயரம் ஏழரை அடி. பின் பகுதி உயரம் நான்கரை அடி. சிறப்பான வடிவில் அமைக்கப்பட்ட முன்பகுதி, இந்தக் கிட்டியின் தனித்துவம். தலைப்பகுதியின் அசைவைக் கட்டுப்படுத்தும் மூன்று குறுக்குக் கம்பிகள் இந்தக் கிட்டியின் முன்பகுதியில் உள்ளன. பின்பகுதியில் மாடுகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கம்பிகளை மாட்டின் உயரத்துக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பிரத்யேக அமைப்பு மற்றும் கை கழுவும் தொட்டியும் மாட்டு கிட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இரைப்பை அறுவை சிகிச்சை செய்வதற்கான இடவசதியும் உண்டு.

சிரை வழி மருந்துகளைச் செலுத்துவதற்கு வசதியாக மருந்து குப்பிகளை மாட்டுவதற்கான தாங்கியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிட்டியைப் பயன்படுத்தும்போது, சினை ஊசி போடுதல், சினை சோதனை செய்தல் ஆகியன மிகவும் எளிதாக இருக்கும். இந்த மாட்டுக் கிட்டியை இடம் மாற்றுவதும் எளிது. இதன் விலை 18 ஆயிரம் ரூபாய்.

மாடுகளின் தீவனத்தைக் கணக்கிட மொபைல் ஆப்ஸ்

னுவாஸ் ஃபீட் கால்குலேட்டர் (Tanuvas Feed Calculator) மற்றும் டனுவாஸ் காலண்டர் (Tanuvas Calender) என இரண்டு வகையான அலைபேசி செயலிகளை (ஆப்ஸ்கள்), தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக விரிவாக்க மையம் வெளியிட்டுள்ளன. இதில் டனுவாஸ் ஃபீட் கால்குலேட்டர் செயலி, மாடுகளுக்குக் கொடுக்கப்படும் உணவைக் கணக்கிட உதவுகிறது. டனுவாஸ் காலண்டர் செயலி, மாவட்டந்தோறும் செயல்படும் கால்நடைப் பயிற்சி மையங்கள் அளிக்கும் பயிற்சிகள் குறித்தான விவரங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. இவற்றைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ள முடியும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 25551586/87