பசுமை விகடன்-அவள் விகடன் இணைந்து வீட்டுக்குள் விவசாயம் என்ற கருத்தரங்கைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றன. இதன் பலன் இப்போது கண்கூடாக தெரிய ஆரம்பித்துவிட்டன. திரைப்படங்கள் தொலைகாட்சியிலும் கூட இதுகுறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. இதன் தாக்கத்தால் பலரும் வீட்டுத்தோட்டம் போட்டு, அதில் விளையும் காய்கறிகளைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

‘அஞ்சு வயசு குழந்தை கூட பார்வை குறைபாட்டால் கண்ணாடி போடுது. 10 வயசு குழந்தைக்குக் கூட சர்க்கரை வியாதி வருது....’ போன்ற வசனங்கள் மூலம் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் வீட்டுத் தோட்டத்தின் மகிமையையும் புரிய வைத்த திரைப்படம் ‘36 வயதினிலே’. நிஜத்திலும் வீட்டுத்தோட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி உணவகம் நடத்தி வருகிறார்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள்.

சிறுதானியங்கள், வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவுப் பொருள்களைக் கொண்டு உணவகத்தைத் தொடங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுய உதவிக்குழு கூட்டமைப்பு சார்பாக பெண்கள் நடத்தும் உணவகம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், வண்ணாரப்பேட்டை கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள். தங்கள் பகுதியில் வசிப்பவர்களின் வீட்டுத்தோட்டங்களில் இயற்கை முறையில் விளையும் காய்கறிகளைத்தான் உணவகத்தில் பயன்படுத்துகிறார்கள், இந்தப்பெண்கள். தேவைக்கேற்ப அன்றன்றே பறித்த காய்கறிகளில் சமைத்து அசத்துகிறார்கள், இவர்கள். அதனால், சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவைப் படைக்கிறார்கள். முருங்கைக்கீரை, வாழைப்பூ, கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் சமைக்கப்பட்ட உணவுகளைப் பரிமாறுவதால், இந்த உணவகத்துக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

உணவகத்தின் நிர்வாகியும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டமைப்பின் செயலாளருமான உமாவிடம் பேசினோம். “வீட்டுத்தோட்டத்துல கிடைக்கிற காய்கறிகள், முருங்கைக்கீரை, வாழைப்பூ, வாழை இலை, வாழைத்தண்டு மாதிரியான பயிர்களைச் சந்தையில விற்பனை செஞ்சு லாபமெல்லாம் பார்க்கிறது கஷ்டம். ஆனா, நாங்க அதையெல்லாம் எங்க ஊர் மக்கள்கிட்ட இருந்து நேரடியாக சந்தை விலைக்கே வாங்குறோம். இதனால அவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்குது. கூடவே உணவகத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்னு எல்லோருக்குமே விஷமில்லா உணவைச் சாப்பிட்டதுக்கான பலன் கிடைக்குது.

மத்த உணவகங்கள்ல கிடைக்காத முருங்கைக்கீரை துவையல், முருங்கைக்கீரை வடை, வாழைப்பூ பொரியல், வாழைத்தண்டு் பொரியல், கம்பு கொழுக்கட்டை, கேழ்வரகு கொழுக்கட்டை, கம்பங்கூழ், கொண்டைக்கடலை சுண்டல்னு பல சத்தான உணவுகளை இங்க விற்பனை செய்றோம். அதையெல்லாம் வாடிக்கையாளர்கள் ஆர்வத்தோடு விரும்பிக் கேட்டு வாங்கிச் சாப்பிடுறாங்க.

மாசத்துக்குக் கிட்டத்தட்ட 250 கிலோ அளவுல காய்கறிகளையும் 300 தேங்காய்களையும் வாங்குறோம். வீட்டுத்தோட்டத்துல கிடைக்காதபட்சத்துல தேவைப்படுகிற காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள்கிட்டயே வாங்கிக்குவோம். மாசம் 700 லிட்டர் பசும்பாலையும் எங்க ஊர்லயேதான் வாங்கிக்கிறோம். இதனால எங்க கிராமத்தோட பொருளாதாரம் உயருது. இங்கே பசும்பால் டீ, பசும்பால் காபி, பசும்பால்ல இருந்து உருவாக்குன தயிர், மோர்னு கொடுக்கிறதுல நல்ல வரவேற்பு இருக்கு. உணவு தயாரிப்புல எந்த ரசாயன சுவையூட்டியையும் பயன்படுத்துறதில்லை. இப்போதைக்கு இயற்கை காய்கறிகள் மட்டும்தான் பயன்படுத்துறோம். அடுத்து அரிசி, பருப்பு, எண்ணெய்னு எல்லாத்தையும் இயற்கைப் பொருள்களாவே வாங்கிப் பயன்படுத்தலாம்னு இருக்கோம்” என்றார்.

இக்கூட்டமைப்பின் பொருளாளர் கீதா, “எங்க ஊரைச் சேர்ந்த ஆறு பெண்கள் ஒண்ணா சேர்ந்து, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டுல இந்த உணவகத்தை ஆரம்பிச்சோம். முதல்ல ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்தது. புதுப்புது யுக்திகளைப் புகுத்தி கடுமையா உழைச்சதுல படிப்படியா வளர்ந்து, எங்க உணவகம் இன்னிக்கு லாபகரமா இயங்குது. தினமும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல விற்பனை நடக்குது. நாங்க ஆறு பேரும் தினமும் 150 ரூபாய் சம்பளம் எடுத்துக்குறோம். அதுபோகக் கிடைக்கிற லாபத்தைத் தனியா சேமிச்சு வெச்சிடுவோம். அந்தப்பணத்தை எங்களுக்குள்ளயே வட்டிக்குக் கொடுத்து வாங்கிக்குவோம். எங்களுக்கு இப்போ, அரசு அலுவலகங்கள்ல நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. எங்க உணவை சாப்பிட்டுட்டு மனதார வாழ்த்தும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். அந்தப் பெண்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.