Published:Updated:

மண்ணை வளமாக்கிய எறும்புகள்!

மண்ணை வளமாக்கிய எறும்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணை வளமாக்கிய எறும்புகள்!

கருத்தரங்குகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: தே.தீக்‌ஷித்

பிப்ரவரி 22-ம் தேதி அன்று, திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் ‘புவி இழந்திடேல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ‘தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்’ சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இக்கருத்தரங்கில்... பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே மணல்திட்டில் 1,360 ஏக்கர் பரப்பில் காடுகளை உருவாக்கி சாதனை படைத்தவரும் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ஜாதவ் மாதேங், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

மண்ணை வளமாக்கிய எறும்புகள்!

கருத்தரங்கில் பேசிய மாதேங், “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வடிந்த பிறகு, ஆற்று மணல்திட்டில் பல பாம்புகள் செத்துக் கிடந்தன. மரங்கள் இருந்திருந்தால் அந்தப் பாம்புகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது. ஆனால் அந்த மண், மரங்கள் வளர்வதற்கு உகந்ததாக இல்லை. ஆரம்பத்தில் மூங்கில் கன்றுகளை நடவு செய்தேன். அது ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனால், காடுகளை உருவாக்க அது மட்டும் போதாது. ஊரிலிருந்து தினமும் எறும்புகளைப் பிடித்துச் சென்று மணல்திட்டில் விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மண் வளமானது. அதன்பிறகு பலவகை மரங்களை நட ஆரம்பித்தேன். தற்போது அந்த மணல் திட்டு பெரும் காடாக மாறியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மண்ணை வளமாக்கிய எறும்புகள்!

காடுகளை உருவாக்காவிட்டாலும்கூட பரவாயில்லை. உங்கள் பிறந்த நாள், தாய் தந்தையரின் பிறந்த நாள்களில் மரம் நடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டாலே போதுமானது. மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். இந்தப் பூமியில் நாம் வாழ்வதற்கு வாடகையாகப் பூமியில் மரங்களை நடவு செய்யுங்கள்” என்று அழகாக வார்த்தைகளை விதைத்தார்.

தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன், “புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால்தான் அதிகளவில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை ஆட்சியாளர்களும் மக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். நகரங்களை விரிவுபடுத்தும்போது நீராதாரங்கள் பாதிக்கப்படாமல் திட்டமிட வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

கருத்தரங்கில், இயற்கை விவசாயம்-சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ‘அறச்சலூர்’ செல்வம், ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் முகமது சாலிகு, கல்லூரியின் செயலாளர் காஜா நஜிமுதீன், தண்ணீர் அமைப்பின் தலைவர் சேகரன், ரமேஷ் கருப்பையா, நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.