Published:Updated:

விபரீதம் வேண்டாமே!

விபரீதம் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
News
விபரீதம் வேண்டாமே!

விபரீதம் வேண்டாமே!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘பொன்விளையும் எங்கள் பூமியை, ஹைட்ரோ கார்பனுக்காகப் பலி கொடுக்கத் தயாராக இல்லை’ என்று உறுதியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களின் மக்கள். இதிலிருக்கும் நியாயத்தைப் புறக்கணித்துவிட்டு, ‘அறிவியல் வளர்ச்சியைப் புறக்கணிக்க முடியாது’ என்கிற வாதம் ஒன்றையே தொடர்ந்து முன்வைக்கிறது மத்திய அரசு.

பொதுவாக... அறிவியல் என்கிற பெயரில் எதையும் விற்பனை செய்துவிடலாம் என்பதை இங்கேயொரு பாணியாகவே முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதே அறிவியலைப் பயன்படுத்தி, இவர்கள் சொல்லும் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை, வீட்டுக்கு வீடுகூட எடுக்க முடியும் என்பதை வசதியாக மறைக்கிறார்கள்... மறக்கிறார்கள். ‘சாண எரிவாயு’ என்கிற பெயரில் இதைத்தானே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள் நம் விவசாயிகள்.

பூமியைப் பாழ்படுத்தாமல், மாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும், பூமியும் வளமாகும்... இவர்கள் எதிர்பார்க்கும் மீத்தேன் வாயுவுடன் பயிர்களுக்கான அற்புதமான இயற்கை உரமும் கிடைத்துவிடும். ஆக, கால்நடைகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண் வளம், கிராமப் பொருளாதாரம் என ஒரே கல்லில் ஏராளமான மாங்காய்களை அடிக்க முடியும்.

அறிவியலை அறிவியலாகப் பார்த்தால் அனைத்தும் சாத்தியமே. அதையும் வியாபார நோக்கில் பார்த்தால், விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்!

- ஆசிரியர்