Published:Updated:

நன்செய்... மாணவர்களின் நல் முயற்சி!

நன்செய்... மாணவர்களின்  நல் முயற்சி!
பிரீமியம் ஸ்டோரி
நன்செய்... மாணவர்களின் நல் முயற்சி!

நாட்டு நடப்பு ஜெ.சாய்ராம்

நன்செய்... மாணவர்களின் நல் முயற்சி!

நாட்டு நடப்பு ஜெ.சாய்ராம்

Published:Updated:
நன்செய்... மாணவர்களின்  நல் முயற்சி!
பிரீமியம் ஸ்டோரி
நன்செய்... மாணவர்களின் நல் முயற்சி!

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில், இதழியல் துறை இரண்டாமாண்டு மாணவர்கள் சார்பாக ‘நன்செய்’ எனும் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியிருந்தது. மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற இவ்விழாவில், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், அரசு அளிக்கும் மானியங்கள் மற்றும் இயற்கை விவசாய விழிப்பு உணர்வு ஆகியவை குறித்த விளக்கவுரைகள், பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

நன்செய்... மாணவர்களின்  நல் முயற்சி!

நிகழ்ச்சியைத் துவக்கிவைத்துப் பேசிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், “பல துறைகளில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், நீர் மேலாண்மையில் பின்தங்கிதான் இருக்கிறது. என்னுடைய கல்லூரி காலத்தில் கூவம் நதியில் குளித்துள்ளேன். ஆனால், தற்போது கூவம் சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது. இப்படித்தான் நீர் ஆதாரங்களைப் பாழ்படுத்தி வருகிறோம். அரசாங்கமும் விவசாயத்தை முன்னேற்றுவதில் கவனம் கொள்வதில்லை” என்று வருத்தப்பட்டார்.
 
நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நடேசன், விவசாயத்தில் உழவிலிருந்து விற்பனை வரை விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தாந்தோணி, ரசாயனங்களால் மண் மலடாகும் விதம் மற்றும் மண்ணை மீட்டெடுக்கும் ஜீவாமிர்தம் ஆகியவை குறித்து பேசினார்

இரண்டாம் நாள் நிகழ்வாக, விவசாயத் துறை சார்ந்த நிபுணர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோருடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில், “மனிதனும் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும்தான் உயிர்கள் எனக் கருதுகிறோம். ஆனால், இவையனைத்துக்கும் மேலானவை நீர், மண், காற்று போன்ற உயிரற்ற பொருள்கள். இவையில்லாவிட்டால் எந்த உயிரினமும் வாழ முடியாது. அதனால், அவற்றைக் காக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்றார்.

மூன்றாம் நாள் நிகழ்வில், முன்னோடி இயற்கை விவசாயி பாமயன், ‘நல்லக்கீரை’ ஜெகன் ஆகியோர் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

அன்றைய தினம் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஆரி, திரைப்பட துணை இயக்குநர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற குறும்படம், புகைப்பட மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism