Published:Updated:

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!
பிரீமியம் ஸ்டோரி
பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

சூழல்திரை மீளன்

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

சூழல்திரை மீளன்

Published:Updated:
பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!
பிரீமியம் ஸ்டோரி
பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

விவசாயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எலிகளைப் பல்லுயிர்ச்சூழல் முறையில் வெகுவாகக் கட்டுப்படுத்தும் உயிரினம் பாம்பு. இதனால்தான், பாம்பை விவசாயிகளின் நண்பன் என்று கூறுவார்கள். பாம்புகளை வீட்டுப்புறங்களில் கண்டால், அதை அடித்துக் கொல்லாமல் பாதுகாப்பாக இன்னொரு இடத்தில் விடுவதுதான் உயிரினங்கள் மேல் கரிசனம் கொண்டவர்கள் செய்யும் செயல். அதுதான் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

இந்நிலையில் பாம்புகளை கொல்லாமல் அதை பயமின்றி பிடித்து பிறிதொரு இடத்தில் விடுபவர்கள் அரிதிலும் அரிது. இப்படி பாம்புகளை லாகவமாகப் பிடித்து பலருக்கு உதவியர்தான் பூனம் சந்த். பாம்புகளின் மீது இவர் கொண்டிருந்த ஈடுபாடே, பாம்புகளை அவர் காப்பாற்றி வந்ததற்கு காரணம். பாம்புகள் மட்டுமல்லாமல் ஆமைகள், மாடுகள், இயற்கைச் சீற்றங்களின்போது சரியும் மரங்களில் வாழ்ந்த பறவைகள்... என அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றியுள்ளார் கடலூர், மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்த இந்த பூனம் சந்த்.

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர் 40 வயதைக் கடந்த நடுத்தர வயது இளைஞர். புதுச்சேரி-தமிழ்நாடு எல்லை அருகே பாவூர் என்ற ஊருக்கு, துணி வர்த்தகம் செய்ய வந்த அவர் பெற்றோரோடு இவரது வாழ்க்கையும் அந்தப் பகுதியிலேயே தொடங்கியது.

மனைவி, குழந்தைகள் எனக் குடும்பத்தோடு வாழ்ந்தாலும்கூட விலங்கினங்களின் மீதான இவரது அக்கறை... நாய்கள் வளர்ப்பது, அவற்றில் இனப்பெருக்கம் செய்து விற்பது என்பதையே பகுதிநேரத் தொழிலாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு மாற்றிவிட்டது. அதை வருவாய்க்கான தொழிலாக வைத்துக் கொண்ட பூனம் சந்த், குடியிருப்புப் பகுதிகளில் உலவும் பாம்புகளைப் பிடித்துக் காடுகளில் விடும் பணியையும் சேவையாகச் செய்துவந்தார்.

கடலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்களுக்குள் பாம்புகள் நுழைந்துவிட்டால், பூனம் சந்த்தைத்தான் முதலில் அழைப்பார்கள். உடனடியாகச் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து பாம்பை லாகவமாகப் பிடித்து, துணிப்பையில் போட்டுக் கட்டி வைத்துவிடுவார்.

பிறகு, வாகன வசதி கிடைக்கும்போது அந்தப் பாம்பைக் கொண்டு போய்க் காடுகளில் விட்டுவிடுவார். சில அரசு உயர் அதிகாரிகளும் பூனம் சந்த்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். பாம்பு பிடிப்பதை இலவச சேவையாகத்தான் தொடர்ந்து வந்தார், பூனம் சந்த். இவர் கட்டுவிரியன், நாகம் போன்றவற்றால் சிலமுறை கடிபட்டிருக்கிறார். ஆனால், பாதிப்பு ஏற்படவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

இத்தகைய சூழலில், கடந்த மார்ச் 15-ம் தேதி, வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பூனம் சந்த், மயங்கி விழுந்து அப்படியே உயிரை விட்டுவிட்டார். இவரது மரணத்துக்குக் காரணம் திடீர் மாரடைப்பு என்று கூறப்படுகிறது. சைவ உணவை மட்டுமே உண்டு வந்த பூனம் சந்த், மரணமடைந்தது அப்பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஆனால், பூனம் சந்த்தின் நண்பர்களோ, “பூனம் சந்த் சரியான பாதுகாப்பின்றிப் பாம்புகளைக் கையாண்டு வந்ததால் அவை அவரைக் கடித்திருக்கக்கூடும். அவர் உடலில் தங்கியிருந்த விஷத்தால்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்திருக்க்க்கூடும்” என்கிறார்கள்.

இயற்கையையும் உயிரினங்களையும் நேசித்த பூனம் சந்த்தை, இயற்கையும் அதிகமாக நேசித்ததால் அவரை வெகு சீக்கிரமே தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டது போலும்!

பாம்புக்குத் தெரியுமா? 

பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்!

குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் வருவதற்கான காரணம் குறித்து, நுண் உயிரியல் துறைப் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயிலிடம் பேசினோம். “உயிர்ச் சங்கிலியில் பிரிக்கக்கூடாத அங்கமான பாம்புகள் வயல் வெளிகளை நம்பியே வாழ்கின்றன. ஆனால், வயல்வெளிகள் ரியல் எஸ்டேட்களாக உருமாறிவிட்டன. வயல்களை நோக்கி இரைத்தேடி வரும் பாம்புகள், அங்கே வயல்கள் இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் வர வேண்டியதாகிவிடுகிறது. பாம்புக்குத் தெரியுமா அவை குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன என்று? அங்குள்ள எலிகள், கோழிக்குஞ்சுகள் உள்ளிட்டவற்றை அவை இரைக்காகக் கொல்கின்றன.

நமக்குச் சிறுவயதில் இருந்தே பாம்பு என்றால் பயம். அப்படி ஓர் அச்சத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகத்தான் பாம்புகளைக் கண்டதுமே அடித்துக் கொன்று விடுகிறோம். எலிகளைப் பாம்புகளும், பாம்புகளை மயில்களும் கட்டுப்படுத்துவதுதான் உயிர்ச்சங்கிலி” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism