Published:Updated:

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?
பிரீமியம் ஸ்டோரி
மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

கொதித்தெழுந்த மக்கள்... பணிந்த அறநிலையத்துறைபிரச்னைதுரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

கொதித்தெழுந்த மக்கள்... பணிந்த அறநிலையத்துறைபிரச்னைதுரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

Published:Updated:
மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?
பிரீமியம் ஸ்டோரி
மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

‘மரம் நடுவோம்... மழை பெறுவோம்’, ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’... என்றெல்லாம் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன, மத்திய மாநில அரசுகள். இது ஒருபுறமிருக்க, சாலை அமைக்க, கட்டடங்கள் கட்ட, நகர விரிவாக்கம் செய்ய... எனப் பல வகைகளில் கோடிக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி அழித்து வருவதும் இதே அரசுகள்தான். ஏற்கெனவே தங்க நாற்கர சாலை, நான்கு வழிச்சாலை என இந்தியாவில் கோடிக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கத்துக்காக அழிக்கப்பட்டுவிட்டன.

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

இந்நிலையில், இதேபோல ஓர் அறமற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறது, தமிழக அறநிலையத்துறை. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக ‘யாத்ரி நிவாஸ்’ எனும் பெயரில் மடங்கள் கட்டத் திட்டமிட்டது, அறநிலையத் துறை.

இதற்காக கிரிவலப்பாதைக்கு அருகிலுள்ள ஆணைப்பிறந்தான் கிராமத்தில் உள்ள ‘சோண நதி தோப்பு’ எனும் வனப்பகுதியில் இடத்தைத் தேர்வு செய்தது. அந்த இடத்தில் மடம் கட்டவும், வாகனங்கள் நிறுத்துவதற்கான ‘பார்க்கிங்’ வசதி செய்யவும் 545 மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து அரசாணை வெளியிடப்பட்டது. ‘இந்த மரங்கள் பொதுப்பணித்துறை மூலம் வெட்டப்படும். கோயிலுக்குத் தேவையான மரங்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மீதி மரங்கள் பொது ஏலம் விடப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோண நதிதோப்பில் அறநிலையத்துறை சார்பில் பூமி பூஜையும் போடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?

ஏற்கெனவே, திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கத்துக்காகச் சாலை ஓரங்களிலிருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்ட ஆரம்பித்த சமயத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ‘கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது’ என உத்தரவிட்டது. அதனால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது வேறு பணிகளுக்காக மீண்டும் மரங்கள் வெட்டப்படப் போவதை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொதித்தெழுந்தனர். தொடர்ந்து இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, மரங்கள் வெட்டுவதை எதிர்த்து, வாகனப் பேரணி, கையெழுத்து இயக்கம் என அறப்போராட்டத்தைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் ஹரிப்ரியா, ‘வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளார்.

மரங்களை அழித்து தங்கும் விடுதியா..?இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, “விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு  வரும் மக்கள் நடந்தே கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். பக்தர்கள் இவ்வளவு தூரம் நடந்து செல்லக் காரணம் அந்த மலையில் உள்ள அரியவகை மூலிகைகள்தான். மடம் கட்டத் தேர்வு செய்யப்பட்ட இடம், கோயிலிலிருந்து அதிக தூரத்தில் இருப்பதால் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் அதிகமாக இங்கே தங்க மாட்டார்கள். அந்த இடத்தில் மடம்கட்டுவதே உயரதிகாரிகள், வி.ஐ.பிக்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் வந்து தங்குவதற்காகத்தான்.

கோயில் அருகிலேயே காலி இடம் உள்ளது. முன்பு கட்டப்பட்ட இரண்டு மண்டபங்கள் காலியாகத்தான் இருக்கின்றன. அந்த இரண்டு மடங்களும் கோயிலுக்கு அருகில் இருப்பதால் பக்தர்கள் தங்கிச்செல்ல வசதியாக இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு 545 மரங்களை வெட்டி மண்டபம் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாமே இங்கு லாபநோக்கோடுதான் செய்யப்படுகின்றன. இந்தக் கருத்துகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தினோம். திருவண்ணாமலையில் இனி மரங்கள் வெட்டக்கூடாது என தமிழக அரசு உத்தரவு போட்டால்தான் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்றார்.

மலைச் சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த எழுத்தாளர் கருணா, “கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ் கட்டுவது தேவைதான். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கோயிலிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டுப்பகுதியில் கட்ட வேண்டிய அவசியமில்லை. திருவண்ணாமலை நகரில் கோயிலுக்குச் சொந்தமாக உள்ள இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட யாத்ரி நிவாஸ்கள் கட்டலாம். இவர்கள் வெட்டவிருந்த
545 மரங்களில் 80% மரங்கள், பழைமையான அரியவகை மரங்கள். இவற்றை அழித்தால் உயிர்ச்சூழலும் சீர்குலையும். அதனால், யாத்ரி நிவாஸுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்” என்றார். 

புதிய மரக்கன்றுகளை நடுவதற்குப் பிரசாரம் செய்தால் மட்டும் போதாது பசுமை கட்டி வளர்ந்து நிற்கும் மரங்களைக் காக்க வேண்டியதும் அரசாங்கம்தான் என்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது புரியுமோ தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism