
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
- ஆசிரியர்
இலவசப் பயிற்சிகள்
சிறுதானியங்கள் சாகுபடி
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 5-ம் தேதி ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 6-ம் தேதி ‘சிறுதானியங்கள் சாகுபடி’, 7-ம் தேதி ‘லாபகரமான நன்னீர் மீன் வளர்ப்பு’, 10-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பயிர் மற்றும் மண் மேலாண்மை முறைகள்’, 13-ம் தேதி ‘கோடைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.
நாட்டுக்கோழி வளர்ப்பு
கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 28-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, ஏப்ரல் 4-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 11-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: தொலைபேசி: 04142 290249.
உளுந்து சாகுபடி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 28-ம் தேதி ‘மீன்களிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரித்தல்’, ஏப்ரல் 10-ம் தேதி ‘உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி நுட்பங்கள்’, 12-ம் தேதி ‘தோட்டக்கலைப் பயிர்களில் நாற்றாங்கால் மேலாண்மை’, 17-ம் தேதி ‘கால்நடைகளில் கோடைக்காலப் பராமரிப்பு’, 18-ம் தேதி ‘மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’, 24-ம் தேதி ‘கூட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.
கறவைமாடு வளர்ப்பு
புதுக்கோட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், ஏப்ரல் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ‘கறவைமாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 1-ம் தேதியாகும்.
தொடர்புக்கு, செல்போன்: 70109 57772.
கால்நடை வைத்தியம்
தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மையத்தில், ஏப்ரல் 14-16-ம் தேதி வரை ‘பாரம்பர்ய தமிழ்நாட்டு வைத்தியர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. மூலிகை மருத்துவம், கால்நடை வைத்தியம், இயற்கை விவசாயம்... குறித்து வல்லுநர்கள் உரையாற்றவுள்ளனர். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 98424 70586.
சுருள்பாசி வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 28-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது.
தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.
கட்டணப் பயிற்சி
மாடித்தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஏப்ரல் 8-ம் தேதி, ‘மாடித்தோட்ட பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.
அறிவிப்பு
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.