சித்திரை மாதம் என்பது நம் முன்னோரின் வாழ்வில் முக்கியமான காலமாக இருந்து வந்திருக்கிறது. தங்களின் கூர்மையான அறிவாற்ற லாலும் நீண்ட நெடிய அனுபவத்தாலும் சித்திரை மாதத்தில் சில வழக்கங் களையும் விழாக்களையும் கடைப்பிடித்து வந்துள்ளனர், நம் முன்னோர்.

பொதுவாக, ஆண்டின் முதல் மாதமானது, அந்த ஆண்டுக்கான திட்டமிடல் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான காலமாக அமையும். அந்தவகையில் சித்திரை மாதத்தைதான் முதல்மாதமாகக் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள், நம் முன்னோர். விவசாயிகள் கோடை உழவு ஓட்டி, நிலத்தைத் தயார் செய்து வைப்பது சித்திரை மாதத்தில்தான். இம்மாதத்தில் கிடைக்கும் கோடை மழையை வைத்து நிலத்தைத் தயார் செய்வார்கள். இப்பழக்கங்கள் குறித்துக் கல்வெட்டுகள், பழங்கால இலக்கியநூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளில் பல விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பரம்பரை பரம்பரையாகச் செவிவழியாகவும் இவ்விஷயங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

சித்திரையின் சிறப்புகள் குறித்து தஞ்சாவூர், சரஸ்வதி மகால் நூலகத்தின் ஓலைச்சுவடிகள் பிரிவு தமிழ் பண்டிதர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் மணிமாறனிடம் பேசினோம்.

“கிராமங்களில் சித்திரை முதல் நாள் அன்று ஊர்க்கூட்டம் நடைபெறும். அந்தக்கூட்டத்தில் பஞ்சாங்கம் பார்ப்பதில் அனுபவம் பெற்ற ஒருவர், அந்த ஆண்டு மழை நிலவரம், மழை பெய்யக்கூடிய நாள்கள், சாகுபடி செய்யத்தகுந்த பயிர்கள், கால்நடைகள் குறித்த விஷயங்கள், புயல், வெள்ளம், வறட்சி போன்ற தகவல்களை விவரிப்பார். அதன் அடிப்படையில் விவசாயிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். சித்திரை முதல் நாள் நடைபெறும் அக்கூட்டத்திலேயே நல்லேர் பூட்டுதலுக்கான நாள், விதை முகூர்த்தத் துக்கான நாள் ஆகியவை தீர்மானிக்கப்படும்.

இப்பழக்கம், பல நூறு ஆண்டுகளாகத் தமிழகக் கிராமங்களில் வழக்கத்தில் இருந்தது. எனக்குத் தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, என் சொந்த கிராமமான களிமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைமுறையில் இருந்தது.

சித்திரை மாத வெயிலின் மகத்துவத்தை உணர்ந்து ஊர் முழுக்க உழவுப் பணிகள் நடைபெறும். ஊர் மக்கள் ஒன்றுகூடி, நீர்நிலைகளைச் சீரமைப்பார்கள். வீட்டுக்கு ஒருவர் இப்பணிக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், அவர்கள் செய்யவேண்டிய வேலைக்கான கூலியைத் தர வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை மூலம் இதனை உணர முடியும். நீர்நிலைகளைப் பாதுகாப்பது எந்தளவுக்கு முக்கியமானது என்பதையும் இது வலியுறுத்துகிறது.

நம் முன்னோர், இயற்கையோடு எப்படியெல்லாம் இயைந்து வாழ்ந்தார்கள் என்பதற்குச் சித்திரைத் திருவிழாக்கள்தான் மிகச்சிறந்த சான்றுகள். எல்லா ஊர்களிலுமே சித்திரை மாதம் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப தனித்துவமான விழாக்கள் நடைபெறும். கோடையின் வெம்மையைத் தவிர்க்கவும் கோடைக்கால நோய்கள் வராமல் தடுப்பதற்கு முன்னேற்பாடாகவுமே சித்திரை விழாக்கள் திகழ்ந்தன. சித்திரை விழாக்களில், உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடிய பாசிப்பருப்பு கலந்த கஞ்சி படைப்பார்கள். அதோடு நீர் மோர், பானகம் போன்ற உடலச்சூட்டைத் தணிக்கக்கூடிய பானங்களையும் கொடுப்பார்கள். சித்திரை மாத விழாக்களில், கால்நடைகளுக்கு மூலிகை கொடுக்கும் பழக்கமும் முன்பு வழக்கத்தில் இருந்துள்ளது.

700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ‘சரசோதி மாலை’ என்ற நூலில் சித்திரைப் புத்தாண்டு குறித்தும், மருந்து நீர் காய்ச்சி நீராடுவது மற்றும் தனித்துவமான உணவுகள் உண்பது குறித்தும் சொல்லப்பட்டுள்ளன. அன்றைய காலகட்டத்தில் சித்திரை மாதத்து முதல்நாளே புது ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாட்டப்பட்டுள்ளது.

சித்திரை முதல் நாள்... தாழம்பூ, பீர்க்கன், அறுகு, கோரோசனை, கோமயம், கோஜலம், பூமாதுளை, மா, வில்வம், பால், தாமரை, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற மூலிகைப் பொருள்களை நீரில் கலந்து காய்ச்சி, அதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் நோய்கள் நீங்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அரண்மனை வைத்தியர்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு மூலிகைகள் வழங்கப்பட்டுள்ளன. மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டியுள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

மருந்து நீர் காய்ச்சி நீராடியப் பிறகு, புத்தாடை அணிந்து அறுசுவையுடன்கூடிய உணவருந்த வேண்டும். குறிப்பாக, எந்தக் கிழமையில் சித்திரை பிறக்கிறதோ, அதைப் பொறுத்து விசேஷ பதார்த்தம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சரசோதி
மாலை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்றால் சம்பாநெல் அரிசிப்பொங்கல், திரிகடுகம்; திங்கள்கிழமை, தயிர்ச்சோறு; செவ்வாய்க்கிழமை, கைப்புச்சுவை உடைய பொரியல்; புதன்கிழமை, மாதுளை, அப்பம்; வியாழக்கிழமை, பால்சோறு, தேன்; வெள்ளிக்கிழமை, கடுகு, புளி, எள், சர்க்கரை; சனிக்கிழமை, கசப்புச் சுவையுடைய பிட்டு இந்தத் தகவல்கள், பாடல் வடிவில் சொல்லப்பட்டுள்ளன.

கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி, சோழநாட்டில் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பி நிலங்களை வழங்கியுள்ளார். இவர், சித்திரை மாதம் பிறந்தவர் என்பதால் நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன் மாதேவி எனும் ஊரில் சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் சித்திரை மாத சதய நாளில் சோழநாட்டின் பல்வேறு பகுதிகளில் விழாக்கள் நடைபெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் ஆண்டு முழுவதும் குறிப்பாக சித்திரை மாதக் கோடையிலும் ஆறுகளில் காவிரி நீர் கிடைத்துள்ளது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோயில்களில் சித்திரை முதல் நாளன்று காவிரி நீரைக் கொண்டு இறைவனுக்கு 108 அல்லது 1008 கலசங்களில் நீராட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தில் வாழும் வேளாண் குடிமக்கள், தங்களின் கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சித்திரை முழுநிலவு நாளில் மிகச்சிறப்பாக இந்திரவிழா கொண்டாடியதை சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. விவசாயிகளுக்கும் சித்திரை மாதத்துக்குமான உறவு மிகவும் இணக்கமானது. நீண்ட நெடியது” என்ற, மாறன் நிறைவாக,

“மழையைக் கணிப்பதில் நம் முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கியிருக்கிறார்கள். ‘வெள்ளி என்ற கோள் தென் திசையில் தோன்றினால் மழை இருக்காது. பஞ்சம் வரும்’ எனப் புறநானூறு, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப்பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளி கோள் தொடர்பான நாட்டுப்புற பாடல்களும் உள்ளன.

‘வெள்ளி தெந்திசையில்
வெண்மேகம் வடதிசையில்
வெள்ளாமை நம்பியிருக்கும்
வெள்ளாளன் எத்திசையில்’
என்ற பாடல் உள்ளது.
‘வடக்கே வெள்ளி வர,
வயல் எல்லாம் நீர் சொரிய,
அந்தவரம் கேட்டு
வந்திறங்கு வருண தேவா’
என்ற பாடல் உள்ளது.
‘அடுத்த வரைக்கு
அடுத்த வரை
மஞ்சு கூட்டம் வந்துடுச்சு
மழை வரப்போகுது’

என்ற சொல்லாட்சி கிராமங்களில் உள்ளது.

ஏரியில் உள்ள நாட்டுக் கருவேல மரங்களின் கீழ்ப்பகுதியில் பறவைகள் கூடு கட்டினால் மழை இருக்காது. உச்சியில் கூடு கட்டினால் ஏரி நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும் எனக் கோடைக்காலத்திலேயே முன்கூட்டி கணித்துவிடுவார்கள்” என்றார்.

சித்திரை நடுப் பத்து!

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சித்திரை முதல் நாள் அல்லது சித்திரை 15-ம் தேதிக்குள் ‘நல்லேர் பூட்டுதல்’ நடைபெறுவது வழக்கத்தில் இருந்தது. இதைச் ‘சித்திரை நடுப் பத்துக்குள் நல்லேர்’ என்பார்கள்.

சித்திரை முதல் நாளன்று ஊரில் ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் சித்திரை 15-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு விசேஷ நாளில் நல்லேர் பூட்டுதலுக்கான தேதி தீர்மானிக்கப்பட்டுத் தண்டோரா போடப்படும். விவசாயிகள் தங்களது வீட்டு வாசலில் மாடு, ஏர்கலப்பை, ஒரு கூடையில் எரு, மண்வெட்டி, எள்ளும் வெல்லமும் கலந்த பச்சரிசி வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்வார்கள். நுகத்தடியில் மாடுகளை இணைப்பதற்குப் புதிதாகத் தயார் செய்யப்பட்ட பூட்டாந்தலை கயிறு, நுகத்தடியை ஏர்க்கலப்பையின் தலைப்பகுதியுடன் இணைக்கக்கூடிய எதிவடம், ஏரில் கலப்பையை இணைக்கக்கூடிய தொடைக்கயிறும் புதிதாக இடம்பெறும்.

பூஜை முடிந்தவுடன் இவற்றோடு வயலுக்குச் சென்று நல்லேர் பூட்டுதல் நடைபெறும். முதலில் கிழக்குமேற்காகவும், அதன்பிறகு, வடக்குதெற்காகவும் ஏர் ஓட்டுவார்கள். நிலத்தின் வரப்பில் சனி மூலையில் மண் வெட்டியால் வெட்டுவார்கள். எருவை நிலத்தில் தூவுவார்கள். அதன்பிறகு, அக்கம்பக்கத்து விவசாயிகளுடன் சேர்ந்து எள் கலந்த பச்சரிசி சாப்பிட்டு நல்லேர் பூட்டுதல் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள்.