கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மீத்தேன் திட்டம் குறித்த பயமும் குழப்பங்களும் காவிரி டெல்டா மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாகக் கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி, மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். இதனால், காவிரி டெல்டா மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, காவிரி டெல்டாவில் நிலக்கரி-மீத்தேன் எடுக்க, ‘தி கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதால், காவிரி டெல்டா மக்கள் மீண்டும் பதற்றத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன், “புதுச்சேரி அருகேயுள்ள பர்கூர் தொடங்கி நெய்வேலி, ஜெயங்கொண்டம், வீராணம், திருவிடைமருதூர், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வரை இன்னும் பல பகுதிகளில் 1,66,210 ஏக்கர் நிலத்தில் 98 ஆயிரம் கோடி கனஅடி மீத்தேனும் 29,389 மில்லியன் டன் நிலக்கரியும் எடுக்க தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு 2010-ம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி வழங்கியது.

2011-ம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பச்சைக்கொடி காட்டினார், அப்போதைய தமிழகத் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒரு குண்டூசி தயாரிப்பில் ஈடுபட்டாலே அதை மிகப்பெரிய வளர்ச்சித் திட்டமாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள், மீத்தேன் திட்டம் குறித்த அறிவிப்பை அடக்கியே வாசித்தார்கள். இத்திட்டத்தால் நிகழப்போகும் பேராபத்துகள் குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபயக்குரல் எழுப்பிய பிறகுதான், மக்களுக்கு இதுபற்றி தெரியவந்தது.

மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் போராட்ட களத்திலேயே இயற்கையுடன் கலந்தார். தொடர்ந்து மக்கள் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில்... போராட்டங்களை மழுங்கடிக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விதமாக 2015-ம் ஆண்டுத் தொடக்கத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு உள்ளவாறு குறித்த காலத்துக்குள் மீத்தேன் எடுக்கும் பணிகளைத் தொடங்காததால், தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இறங்கவிருப்பதாக, நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதையடுத்து காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், உரிமம் ரத்து செய்யப்பட்டதா, இல்லையா என்ற எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவே இல்லை. இதனால், அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டத்துக்கு, நிரந்தரத் தடை விதித்தது, தமிழக அரசு. ஆனாலும், மீத்தேன் திட்டம் குறித்த பயம் மக்கள் மனதிலிருந்து நீங்கவேயில்லை.

இந்நிலையில்தான் கடந்தாண்டு, நவம்பர் மாதம் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். காவிரி டெல்டா மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அதன்பிறகும், மத்திய அரசின் திருவிளையாடல் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய இக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், “ரத்து செய்யப்பட்ட திட்டத்துக்கு எந்த அடிப்படையில் அனுமதி கேட்டு அந்தத் தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது என்று தெரியவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகம் அதைப் பரிசீலித்து எப்படி அனுமதி கொடுத்துள்ளது என்பதும் தெரியவில்லை. இதன் மூலம், இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் சொன்னது பொய் என நிரூபணமாகிவிட்டது. இது, மக்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக நடத்தப்பட்ட நயவஞ்சக நாடகம்” என்றார்.