கடந்த ஆண்டுத் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால் சென்னையில் ஏராளமான மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன. சென்னை நகரின் பசுமை பறிபோய்விட்ட சூழ்நிலையில், தன்னார்வலர்கள், தொண்டு நிறவனங்களைச் சேர்ந்தவர்கள், சூழல் ஆர்வலர்கள் போன்றோர் சென்னை நகருக்குள் மீண்டும் மரங்களை நட்டுப் பசுமையை மீட்டெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். மாநகரில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் முறைப்படுத்தவும் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது, சென்னை பெருமாநகராட்சி.

சென்னையில் ஏறத்தாழ 60 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால், 15 லட்சம் மரங்களாவது இருக்க வேண்டும். இங்கு, ஏற்கெனவே மூன்றரை லட்சம் மரங்கள்தான் இருந்தன.

அவற்றிலும் வர்தா புயலால் ஒரு லட்சம் மரங்கள் வீழ்ந்துவிட்டன. இந்நிலையில், வனத்துறையின் உதவியுடன் மாநகராட்சியும், தன்னார்வலர்களும் சேர்ந்து மரங்களை நட்டால்தான் சென்னை மாநகர், பசுமையாகும். இதற்கான முயற்சியில்தான் மரம் நட நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளில் சில குறைபாடுகள் இருந்தாலும் வரவேற்க கூடியதுதான். மரக்கன்று நடவு செய்ய அனுமதி பெற மண்டல அலுவலகங்களுக்க நேரில் செல்லாமல் இணையதளம் மூலமே விண்ணப்பித்து அனுமதி வாங்கலாம் என அறிவித்தால் சிறப்பாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

இவ்விவகாரம் குறித்துப் பேசிய மரம் வளர்ப்பு ஆர்வலர் முல்லைவனம், “மண்ணுக் கேற்ற மரங்களை தகுந்த முறையில் நடவு செய்தால்தான் காலத்துக்கும் பயன்தரும்.

மரம் வளர்க்கும் ஆசையில், இந்த சூழ்நிலைக்கு உதவாத மரங்களை சிலர் நடவு செய்துவிடுகின்றனர். இதன்மூலம் நன்மை ஏற்படுவதைக் காட்டிலும் பாதிப்புகள்தான் வரும். மாநகராட்சியின் இந்த அறிவிப்பு, சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், இதுபோன்ற நிபந்தனைகள் காலத்தின் கட்டாயம்” என்றார் முல்லைவனம்.

மாநகராட்சியின் வழிமுறைகள்

மரக்கன்றுகள் நடுவதற்கு இரண்டரை அடி சதுரத்தில் மூன்றடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.

இயந்திரத்தின் மூலம் குழி எடுக்கக் கூடாது.

குழியில் மணல், எரு, செம்மண் மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி நடவு செய்ய வேண்டும்.

மரக்கன்றுக்கு 1.2 மீட்டர் உயரம், 0.45 மீட்டர் விட்டத்தில் பாதுகாப்புக் கூண்டு அமைக்க வேண்டும்.

மரக்கன்றுகளுக்கான இடைவெளி குறைந்தபட்சம் 5 மீட்டர் இருக்க வேண்டும்.

மரக்கன்றை ஓர் ஆண்டுக்கு சொந்தப் பொறுப்பில் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும்.

மரக்கன்று வைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

நடவுப்பணியை முடித்தவுடன் அதுகுறித்துப் பூங்காத்துறை தலைமையிடத்துக்குத் தகவல் சொல்ல வேண்டும்.

பராமரிப்புக் காலத்தில் மரக்கன்று பட்டுவிட்டால் உடனே மாற்றி நடவு செய்ய வேண்டும்.

பாதுகாப்புக் கூண்டின் மேல் சிறிய அளவில் பராமரிப்பவரின் பெயரை எழுதிக் கொள்ளலாம்.

எங்கு... எந்த வகை மரம்!

சாலைகளில் அதன் அகலத்துக்கேற்ப நட வேண்டிய மரங்களைப் பரிந்துரைத்திருக்கிறது மாநகராட்சி. அதுகுறித்த விவரங்கள் இங்கே...

ஏழு மீட்டர் அகலத்துக்குள் உள்ள சாலைகளில்... புத்திரசீவி, இருவாச்சி, மந்தாரை போன்ற மர வகைகளை நடலாம்.

ஏழு மீட்டர் முதல் பன்னிரண்டு மீட்டர் வரையுள்ள சாலைகளில்... மந்தாரை, மாவலிங்கம், பூ மருது, அசோக மரம், பூவரசு, புங்கன், புன்னை, கடம்பு, செங்கொன்றை, நாட்டுப் பாதாம் ஆகிய மரங்களை நடலாம்.

பன்னிரண்டு மீட்டர் அகலத்துக்கு மேல் உள்ள சாலைகளில்... வெள்ளை மருது, நீர் மருது, மகிழ மரம், காட்டுப்பச்சிலை மரம், வாகை, கருவாகை, அத்தி, கருங்காலி, வெள்ளை நுணா, நோனி, தான்றி, நீர்க்கடம்பு, செங்கடம்பு ஆகிய மரங்களை நடலாம்.

பூங்காக்களில்... பனை, வாதநாராயணன் ஆகிய மரங்களை நடலாம்.