Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்
 
தேனீ வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 24-ம் தேதி, ‘சிப்பி மற்றும் பால்காளான் தொழில்நுட்பங்கள்’, 25-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

கறவை மாடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 17-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 18-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

நாட்டுக்கோழி வளர்ப்பு


சேலம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

தண்டோரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடு வளர்ப்பு

புதுக்கோட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் மே 15-ம் தேதி முதல் 25ம் தேதி வரை ‘ஆடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 15-ம் தேதியாகும்.

தொடர்புக்கு, செல்போன்: 70109 57772.

பஞ்சகவ்யா தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், மே 16-ம் தேதி ‘பஞ்சகவ்யா தாயாரிப்பு’, 18-ம் தேதி ‘பூச்சிவிரட்டி தயாரித்தல்’, 24-ம் தேதி ‘மருந்தில்லா மருத்துவம்’, 25-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

ஜப்பானிய காடை வளர்ப்பு


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

அலங்கார மீன் வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மே 16-ம் தேதி ‘கரும்பில் பூச்சி நோய் மேலாண்மை’, 23-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கட்டணப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் மே 22-ம் தேதி, ‘வேலி தாண்டா வெள்ளாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். பயிற்சிக் கட்டணம்: ரூ100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 96292 46586.

அங்கக உரம் தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 27-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, ஜூன் 3-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

நிலத்தடி நீர் மேலாண்மை

திருநெல்வேலி மாவட்டம், மாறாந்தையிலுள்ள வேதாத்திரி வனத்தில், திருநெல் வாழ்வியல் மையம் மற்றும் வேதாத்திரி வனம் ஆகியவை இணைந்து மே 16-ம் தேதி, ‘நிலத்தடியில் நீர்ப் பெருக்கும் நீர் மேலாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ150.

தொடர்புக்கு, செல்போன்: 95517 26956, 90801 44423

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism