Published:Updated:

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்!

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி  உடலுக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: தி.குமரகுருபரன்

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி  உடலுக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்!
மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி  உடலுக்கு ஆரோக்கியம்!

டல் நலம் மற்றும் நஞ்சில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால் நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மாடித்தோட்ட காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுபத்ரா, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.

ஒரு காலை வேளையில், செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த சுபத்ராவைச் சந்தித்தோம். “எனக்குச் சொந்த ஊரு சேலம். திருமணத்துக்கு அப்புறமா கணவரோட இங்க வந்துட்டோம். ஊர்ல அப்பா காடு, தோட்டம் வெச்சிருந்தார். அதனால், சின்ன வயதில் இருந்தே எனக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். நாலு வருஷத்துக்கு முன்னாடி 4 தொட்டிகள்ல செம்பருத்தி செடி வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம், தக்காளி, கத்திரினு வளர்க்க ஆரம்பிச்சேன். அடுத்து மத்த காய்கறிகள், பூக்கள், மூலிகைனு கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு இப்போ நூறு தொட்டிகளுக்கு மேல இருக்கு. திராட்சைக்கொடிகூட இங்க இருக்கு” என்ற சுபத்ரா செடிகளை ஒவ்வொன்றாகக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி  உடலுக்கு ஆரோக்கியம்!

“போன வருஷம் வர்தா புயல்ல நிறைய சேதம் ஆகிடுச்சு. இப்போ திரும்பவும் எல்லாச் செடிகளையும் தேத்தி வெச்சிருக்கேன். காலையில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பினதும், மாடித் தோட்டத்துக்கு வந்துடுவேன். நோய்த்தாக்குதல், பூச்சித்தாக்குதல் எதாவது இருக்குதானு பார்த்து அதுக்கான இயற்கை இடுபொருளைத் தயார் செஞ்சு தெளிப்பேன்.

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி  உடலுக்கு ஆரோக்கியம்!

செடிகளைக் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கேன். தினமும் இங்க வேலை செய்றதே உடற்பயிற்சி மாதிரி ஆகிடுது. செடிகளோட ஊட்டத்துக்கு எருதான் பயன்படுத்துறேன். அதோட, வீணாகும் காய்கறிக் கழிவுகளையும் உரமாப் பயன்படுத்துறேன்” என்ற சுபத்ரா நிறைவாக, “இந்தத் தோட்டம் போட்டதில் இருந்து மூலிகைகள், காய்கறிகள், பூக்கள் எதையும் அதிகமாக வெளியில் வாங்குறதில்லை. பூஜைக்குப் பூ, சமையலுக்குக் காய் எல்லாம் இங்கயே கிடைச்சுடுது. அதோட செடிகளோட உறவாடுறது மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்றார்.

தேவையான செடிகளை மட்டும் வளருங்கள்!

மாடித்தோட்டம் அமைப்பது குறித்துப் பேசிய சுபத்ரா, “மாடித்தோட்டம் அமைக்கும் முன், செடிவகைகள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக இருந்தால் பசுமைக்குடில் அமைக்கலாம். வீட்டுக்கு உபயோகமாக இருக்கும் காய்கறிகளைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வாளிகள், மண்தொட்டிகள் என எதில் வேண்டுமானாலும் செடிகளை வளர்க்கலாம்.

 தொட்டிகளில் மண்புழு உரம், மாட்டு எரு ஆகியவற்றை மண்ணோடு சேர்த்து இட வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் கொடுக்கலாம். காய்கறிச் செடிக்கு சூரியஒளி மிக அவசியம். பெருங்காயத்தை நீருடன் சேர்த்துத் தெளித்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். வெள்ளைப் பூண்டை அரைத்து அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism