Published:Updated:

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!
பிரீமியம் ஸ்டோரி
இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

நீர்நிலைஎம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: க.தனசேகரன், நியாஸ்அகமது

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

நீர்நிலைஎம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: க.தனசேகரன், நியாஸ்அகமது

Published:Updated:
இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!
பிரீமியம் ஸ்டோரி
இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!
இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

டுமையான வறட்சி நிலவி கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஏரி, குளங்கள், வரத்துக் கால்வாய்கள் போன்றவற்றை இப்போதே தயார் செய்தால்தான், எதிர்வரும் காலங்களைச் சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காகத் தமிழகம் முழுவதுமே, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக் கொடுத்து வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், ‘அரசாங்கத்தை நம்பினால், வேலையாகாது’ என்று முடிவெடுத்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், தங்கள் சொந்த முயற்சியில் ஒரே மாதத்தில் ஆறு ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறார்கள்.

“நாங்க பேப்பர்ல திட்டம் தீட்டுறதுல்ல. நேரடியா செயல் மட்டும்தான். எப்படி இது சாத்தியமாச்சுனு எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. வேலை செய்யணும்னு முடிவு பண்ணினதும் எங்க பணத்தைப் போட்டே வேலைகளை ஆரம்பிச்சிட்டோம். ஃபேஸ்புக் மூலமா பல நண்பர்கள் உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதனாலதான் மளமளனு வேலை நடந்துகிட்டு இருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள், தருமபுரி மாவட்டம், பி.துரிஞ்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செழியன், ரவிக்குமார், கிருஷ்ணன் மற்றும் ஜங்காளப்பட்டியைச் சேர்ந்த அருண், அகிலன் ஆகிய ஐந்துபேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்களைச் சந்திக்க நாம் சென்றிருந்தது, உச்சி வெயில் நேரம். பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநருக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார், அருண். அனைவருக்கும் பழச்சாறு பரிமாறிக் கொண்டிருந்தார், கலைச்செழியன். நில அளவைப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர், ரவிக்குமாரும் அகிலனும். பொக்லைன் இயந்திரத்துக்கு டீசல் வாங்கி வந்துகொண்டிருந்தார், கிருஷ்ணன். இப்படிச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பரபரவென இயங்கிக்கொண்டிருந்தனர், அவர்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, இந்த அரிய பணிக்கு அடித்தளம்போட்ட கலைச்செழியனிடம் பேசினோம்.

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

“போன வருஷம் துரிஞ்சிப்பட்டியில இருக்கிற கிருஷ்ணசெட்டி ஏரியைத் தமிழ்வாணன்ங்கிறவர் தனி ஆளா முயற்சி செஞ்சு, சொந்தப் பணத்தைச் செலவழிச்சு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தூர்வாரினார். அதனால, பலருடைய நிலங்களுக்குத் தண்ணி கிடைச்சது. அவரைப் பார்த்துதான் நாங்க இந்த வேலையை ஆரம்பிச்சோம். சும்மா ‘வறட்சி, வறட்சி’னு சொல்லிக்கிட்டே இருக்கிறதுல ஒண்ணும் ஆகப்போறதில்லை. வறட்சிக்கான காரணம், மழை நீரைச் சேமித்து வைக்காதது, மரங்களை வளர்க்காதது இந்த ரெண்டும்தான். அதைச் செய்றதை விட்டுட்டு மத்தவங்களைக் குறை சொல்றதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால, மக்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும்னு நாங்க ஆரம்பிச்சிட்டோம்.

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!ஏற்காடு, சேர்வராயன் மலையிலேருந்து வடிஞ்சு வர்ற மழைத் தண்ணீர், ஜொள்ளாகவுண்டன் ஏரி, சின்னாகவுண்டன் ஏரி, ரெட்டிக்குட்டை ஏரி,  கருத்தான்குட்டை ஏரி, கிருஷ்ணசெட்டி ஏரினு  வந்து சேரும். அந்தக் காலத்தில் இந்த ஏரிகளெல்லாம் நிறைஞ்சு இருந்ததால விவசாயம் செழிப்பா இருந்துச்சு. ஆனா, இப்போ தண்ணி வர்ற வரத்துக்கால்வாய்கள் எல்லாம் ஆக்கிரமிப்புல இருக்கு. ஏரிகளையும் பல காலமா தூர்வாரல. அதனால, மழைத்தண்ணி சேகரமாகாம நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு. அப்புறம் விவசாயத்துக்கும் வழியில்லாமப் போயிடுச்சு. இவ்ளோ முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிகள்ல இருந்து வழிஞ்சு போற தண்ணிதான் வேப்பாடி ஆத்துக்குப் போய், அங்கேயிருந்து தொப்பையாறு போகும். அதிலிருந்து காவிரி ஆத்துல கலக்கும்.

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

இதைப்பத்தி நானும் ரவிக்குமாரும், கிருஷ்ணனும் அடிக்கடிப் பேசிப்போம். அப்புறம்தான், ஏரிகளைத் தூர்வாருறதுனு முடிவு பண்ணினோம். ஆனா, எப்படி வேலையை ஆரம்பிக்கணும்னு தெரியலை. அதனால, ஜங்காளபட்டியைச் சேர்ந்த அருண்கிட்ட போய் விஷயத்தைச் சொன்னோம். அவர், நம்மாழ்வார்கிட்ட நிறைய பயிற்சி எடுத்தவர். அவர்கிட்ட இதபத்திச் சொன்னதும், ரொம்பச் சந்தோஷப்பட்டு நிறைய யோசனைகளைச் சொல்லி எங்களுக்கு ஆதரவு கொடுத்தார். அருண் ஊரைச் சேர்ந்த அகிலனும் எங்களோட இணைஞ்சிகிட்டார். எங்களை அருண்தான் வழி நடத்துறார். அவரோட நட்பு வட்டங்கள் மூலமா நிதியையும் திரட்டினார். நாங்க அஞ்சு பேருமே, எங்களால முடிஞ்சளவு கைக்காசையும் செலவு பண்ணிட்டு இருக்கோம். இணைஞ்சு வேலை செஞ்சதுல ஒரே மாசத்துல அத்தனை வேலைகளும் முடிஞ்சிருச்சு” என்றார்.
 
தொடர்ந்து பேசிய ரவிக்குமார், “இந்த சீரமைப்புப் பணிகள்ல ஒட்டுப்பள்ளம் ஓடையை மீட்டது சாதாரண விஷயமில்ல. தினமும் ஒரு பஞ்சாயத்த சமாளிக்க வேண்டியிருந்துச்சு. பஞ்சாயத்து போர்டுல ஆரம்பிச்சு, கலெக்டர் வரைக்கும் அனுமதி வாங்குறதுக்குள்ளவே நாக்குத் தள்ளிருச்சு. ஆக்கிரமிப்புகளை எல்லாம் அளந்து எடுக்கப்போறப்போ, ஆக்கிரமிச்சிருந்தவங்க பிரச்னை பண்ண ஆரம்பிச்சாங்க. எல்லாம் சொந்தக்காரங்க வேற. இதுல யாரும் வேணும்னு ஆக்கிரமிக்கல. சரியான அளவீடு இல்லாததால, அவங்களுக்கே தெரியாம ஓடைப்பகுதியில வரப்பு போட்டு ஆக்கிரமிச்சிருந்தாங்க. அவங்ககிட்ட எல்லாம் பேசிப் புரிய வெச்சு, சமாதானப்படுத்தி ஒரு வழியா வேலைகளை முடிச்சோம். ஓடையை ஒட்டியிருந்த கலைச்செழியனோட நிலம் கொஞ்சம் ஓடைப்பகுதிக்குள்ள இருந்துச்சு. வருஷக்கணக்குல அவங்கதான் அதை உழுதுட்டு இருக்கிறாங்க. முதல் வேலையா கலைச்செல்வனோட நிலத்தை அளந்து, ஆக்கிரமிப்புல இருந்த நிலத்தை மீட்டோம். உடனே, மத்தவங்க கொஞ்சம் அமைதியானாங்க. ரொம்பக் குறுகலா இருந்த ஓடை, இப்போ ஆறு மாதிரி ஆகிடுச்சு” என்று சொல்லி ஓடையைக் காட்டி மகிழ்ந்தார்.

இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

“தூர்வாருறது மட்டுமில்லாம, சின்னாகவுண்டன்பட்டி ஏரியில் நடைபாதை, செயற்கைத் தீவுகளையும் அமைச்சிருக்கோம். ஏரிகள்ல வரத்துக்கால்வாய்களை இணைக்கிற பணி முக்கால்வாசி முடிஞ்சிடுச்சு. இதுல என்னா ஒண்ணுனா, எனக்கும் அருணுக்கும் இந்த ஓடை தண்ணீரால் நேரடியாக எந்தப் பயனும் கிடையாது.ஆகாயமும் பூமியும் எல்லாருக்கும்தான சொந்தம்னு வேலைகள்ல இறங்கிட்டோம். இந்த வேலையைச் செஞ்சது, மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு” என்று நெகிழ்கிறார், அகிலன்.

நிறைவாகப் பேசிய அருண், “நாங்க செஞ்சிருக்கிற இந்த வேலைகளால பள்ளிப்பட்டி, துரிஞ்சிப்பட்டி ரெண்டு பஞ்சாயத்துக்குமே முழுமையான பாசன வசதி கிடைக்கும். நாங்க இந்த வேலையை ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்ட பாப்பி ரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ, பழனியப்பன் நிறைய உதவிகள் பண்ணினார். அரசாங்க அனுமதியெல்லாம் அவரால்தான் சுலபமாக் கிடைச்சது. தொகுதி முழுக்க இதுபோலச் செய்யணும்னு ஆசையா இருக்கார். எங்களோட மொத்த பட்ஜெட் வெறும் பத்து லட்ச ரூபாய்தான். நிறைய பேர் உதவிகள் செஞ்சுகிட்டே இருக்காங்க. அரசாங்கம் எதையும் செய்யாது. நமக்குத் தண்ணி தேவைன்னா நாமளே களத்துல குதிச்சாதான் உண்டு” என்றார்.

தமிழகம் முழுவதும் இதுபோல மக்களே களமிறங்கி வேலைகளைச் செய்துவிட்டால், முல்லைப் பெரியாறு காவிரித் தண்ணீருக்கா கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism