Published:Updated:

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!
பிரீமியம் ஸ்டோரி
நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

அலட்சிய ஆட்சியாளர்கள்... புலம்பும் விவசாயிகள்! பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

அலட்சிய ஆட்சியாளர்கள்... புலம்பும் விவசாயிகள்! பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

Published:Updated:
நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!
பிரீமியம் ஸ்டோரி
நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

றட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணமாக 1,700 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதோடு தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் எப்படியாவது ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்துவிடும் என்று நிம்மதியாக இருந்தனர். தற்போது நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பல விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகைக்கூட கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள், விவசாயிகள்.

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், “நான் நாலரை ஏக்கர்ல நெல் நடவு செஞ்சிருந்தேன். வறட்சியால் எல்லாமே கருகிப்போச்சு. மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செஞ்சேன். அக்கம்பக்கத்து வயல்காரங்ககிட்ட பத்து நாளுக்கு ஒரு தடவை காசு கொடுத்து தண்ணி வாங்கிப் பாசனம் செஞ்சேன். ஆனாலும், பயிர் பொழைக்கல. நாலரை ஏக்கருக்கும் சேர்த்து நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருந்தேன். எல்லாமே வீணாகிடுச்சு. நெல்லுல ஏக்கருக்கு 5,465 ரூபாய் வறட்சி நிவாரணமா தமிழக அரசு அறிவிச்சிருந்துச்சு. ஆனா, இதுவரை எனக்கு நிவாரணம் கிடைக்கவே இல்லை. கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கலெக்டர்னு எல்லார்கிட்டயும் பலமுறை மனு கொடுத்திட்டேன். ஆனாலும், எந்தப் பலனும் இல்லை” என்று புலம்பினார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த நமச்சிவாயம், “நாலு ஏக்கர்ல நேரடி நெல் விதைப்பு செஞ்சேன். அதுக்கு ஆதாரமா புகைப்படங்கள் கொடுத்து, உழவு மானியம், களைக்கொல்லி மானியம் எல்லாம் வாங்கியிருக்கேன். எங்க ஊர்ல எல்லாரோட பயிருமே கருகிப் போச்சு. வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் எல்லாருக்குமே இது தெரியும். ஏன்னா, எங்க ஊர்ல பெரும்பாலானவங்க நேரடி விதைப்பு செஞ்சு மானியம் வாங்கியிருக்காங்க. நிறைய பேருக்கு நிவாரணத் தொகை கொடுக்கல. இன்னமும் அலைஞ்சுக்கிட்டே இருக்கோம்” என்று ஆதங்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

இப்பிரச்னை குறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், “தமிழக அரசு செயலற்ற நிலையில இருக்கு. இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் மேல கொஞ்சம்கூட அக்கறை இல்லை. கர்நாடக அரசு 45 தாலுக்காக்களை மட்டும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிச்சு... மத்திய அரசுகிட்ட இருந்து 2,500 கோடி ரூபாயை வறட்சி நிவாரணமா வாங்கியிருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதுமே கடுமையான வறட்சி. ஆனாலும், மத்திய அரசு 1,700 கோடி ரூபாயைத்தான் நிவாரணமா கொடுத்திருக்கு. அதைத் தட்டிக்கேட்காம, ஊமையா இருக்கார், முதலமைச்சர்.

இந்தத் தொகையையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒழுங்கா பிரிச்சு கொடுக்காம முறைகேடு செய்றாங்க அதிகாரிகள். அதையும் யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்களுக்கு மட்டும்தான் ஒழுங்கா நிவாரணம் போய்ச் சேர்ந்திருக்கு. அதில்லாம ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவங்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்காங்க. உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காம ஏமாத்திட்டாங்க.

நிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்!

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வெளியிட்டது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் வாங்கின விவசாயிகளோட பட்டியலை வெளியிட்டு, ஊராட்சி அலுவலகங்கள்ல மக்கள் பார்வைக்கு வைக்கணும். அப்போதுதான், இவங்களோட ஊழல் வெளிவரும்.

அதேமாதிரி, பயிர்க் காப்பீட்டுக்காக விவசாயிகள்கிட்ட போன வருஷம் நவம்பர் மாசமே காப்பீட்டுத்தொகையை வசூல் பண்ணிட்டாங்க. அந்தத் தொகையை டிசம்பர் மாசத்துக்குள்ள காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு செலுத்தியிருக்கணும். ஆனா, இந்த வருஷம் மார்ச் மாசம்தான் செலுத்தியிருக்காங்க. அதனால, பயிர்க் காப்பீடு கிடைக்க இன்னமும் தாமதமாகும்” என்றார், காட்டமாக.

இதுகுறித்து தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். “நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் முறையாகக் கணக்கெடுத்துதான் இதை வழங்கியுள்ளோம். இதில், நிவாரணம் பெற தகுதியுள்ள விவசாயிகள் விடுபட்டிருந்தால், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கலாம். கண்டிப்பாக அவர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கப்படும்” என்றார். தஞ்சை மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, முழுமையாக வழங்கப்படாதது குறித்து கேடடபோது “விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மீதியுள்ள பணம் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism