Published:Updated:

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம்.

நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிப் புரிய வைப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

தற்போது, மண்ணில் அங்ககப் பொருள்களின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. இதை அதிகரிக்க வேண்டியது, நமக்கான முக்கியப் பணி. இந்தப் பணியைச் செய்வதற்கு உதவியாக இருக்கக்கூடியவை உயிர் உரங்கள். நிலத்தடி நீரைச் செறிவூட்டம் செய்வதுபோல் நிலத்தின் மண் வளத்தையும் அவ்வப்போது செறிவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இயற்கையாகவே மண்ணில்நன்மை பல செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. தாவரங்களின் வேர் அருகில் வளரும் இந்த நுண்ணுயிர்கள்... மண்ணில் இயற்கையாகவே உள்ள சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றித் தருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7


இதுபோன்ற நுண்ணுயிர்களைப் பிரித்தெடுத்து, ஆய்வகங்களில் வளர்த்து ‘உயிர் உரங்கள்’ என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்த உயிர் உரங்கள், காற்றிலுள்ள தழைச்சத்தை (நைட்ரஜன்) கிரகித்து மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இன்னும் சில நுண்ணுயிர்கள், மண்ணில் நாம் கொடுக்கும் பொட்டாஷ் சத்துகளைப் பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் சிதைத்துத் தருகின்றன. இந்த நுண்ணுயிர்கள், வேர்களில் உள்ள சில பொருள்களை உண்டு உயிர் வாழ்கின்றன. அப்படிப்பட்ட சில நுண்ணுயிர்கள் குறித்துப் பார்ப்போம்.

ரைசோபியம்: இது, பயறு வகைப் பயிர்களின் வேர்முடிச்சுப் பகுதியில் வாழும் ஒரு வகை நுண்ணுயிரி. அவரைச்செடி குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்ப்பகுதியில் முடிச்சுகளை உண்டாக்குகிறது. காற்றிலிருந்து தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்திவிட்டு, தனக்குத் தேவையான உணவைப் பயிரின் வேர்ப் பகுதியிலிருந்து எடுத்துக்கொள்ளும். இதை விதைநேர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம். 10 கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்ய 200 கிராம் ரைசோபியம் போதுமானது. 200 மில்லி ஆறிய வடிகஞ்சிக்கு 200 கிராம் ரைசோபியம் எனக் கலந்து, அதில் விதைகளை இட்டு, விதைகளோடு கலவை ஒட்டுமாறு கலக்கி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி, விதைக்கலாம். பயிரின் ரகம், பயிரிடும் இடத்துக்கு உகந்த ரைசோபிய வகைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இது பொடியாகவும், திரவ வடிவிலும் கிடைக்கிறது.

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7

அசோஸ்பைரில்லம்: ஒரு விதை இலைத் தாவரம் மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களின் வேர்ப்பகுதியில் வாழக்கூடியது. நெல், கம்பு, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களின் வேர்ப்பகுதியில் வளரும் ஒரு வகைப் பாக்டீரியா. ஆனால், ரைசோபியம் போல் முடிச்சுகளை ஏற்படுத்தாது. இது காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும். ஐம்பது கிலோ எருவுக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் எனக் கலந்து, ஒரு ஏக்கர் நிலத்தில் இடும்போது 20 கிலோ வரை தழைச்சத்து மண்ணில் சேமிக்கப்படும். இது கிட்டத்தட்ட 30 கிலோ யூரியாவுக்குச் சமம். அதோடு, ஜிப்ராலிக் அமிலம் மற்றும் இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மண்ணில் உற்பத்தியாகும். அதனால், மண் வளமாகி பயிர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் உபயோகிக்கலாம்.

இதை விதைநேர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதில் விதைநேர்த்தி செய்யும்போது, முளைப்புத்திறன் அதிகரிப்பதுடன் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகரிக்கும். 250 கிராம் ஆறிய வடிகஞ்சிக்கு 200 கிராம் அசோஸ்பைரில்லம் எனக் கலந்து, அதில் ஒரு கிலோ விதையை ஊற வைத்து நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம். இருபது லிட்டர் தண்ணீருக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் எனக் கலந்து, அக்கலவையில் நாற்றுகள் அல்லது விதைக்கிழங்குகளை விதைநேர்த்தி செய்யலாம்.

பாஸ்போ பாக்டீரியா: இது, மண்ணிலுள்ள மணிச்சத்தைப் பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் இளக்கிக் கொடுக்கும் பணியைச் செய்கிறது. இந்த வகைப் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் சில அமிலங்கள், மண்ணில் கரையாத பாஸ்பேட்டைக் கரைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் 20 சதவிகித ரசாயன மணிச்சத்து உரத்தைக் குறைக்கலாம். வேர்கள், திசுக்களின் வளர்ச்சியிலும் இந்த நுண்ணுயிரி முக்கியப் பங்காற்றுகிறது.

இந்த உயிர் உரங்கள், தற்போது அனைத்து வேளாண் அலுவலகங்கள், உரக்கடைகள் ஆகியவற்றில் பொடி மற்றும் திரவ வடிவில் கிடைக்கின்றன. இதன் ஆயுள்காலம், ஆறு மாதங்கள்தான். அதனால், கடைகளில் வாங்கும்போதே தயாரிப்பு, காலாவதித் தேதிகளைப் பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான உரங்களைக் குப்பையில் போடாமல், எருக்குழியில் போட்டு வைத்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.

சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ், பேசிலோமைசின் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கி நுண்ணுயிர்கள் பற்றி அடுத்த இதழில்...

- பரவும்

நோயை விரட்டும் அசோஸ்பைரில்லம்!

ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7



விதைகளை, உயிர் உரங்கள் மூலம் விதைநேர்த்தி செய்து விதைத்துப் பலன் பெற்று வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆரோக்கியம்.

“நான் வழக்கமா நிலக்கடலைச் சாகுபடி செய்வேன். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை தேவைப்படும். அசோஸ்பைரில்லத்துல விதைநேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். இப்படி விதைக்கிறதால, என்னோட பயிர்ல கழுத்து அழுகல், வேர் அழுகல் நோய்கள் வர்றதில்லை. இந்தக் கடுமையான வறட்சியிலும் என்னோட கடலைச் செடிகள் தாக்குப்பிடிச்சுட்டு இருக்கிறதுக்குக் காரணம் நுண்ணுயிர்கள்தாம். ஒரு செடியில் 25 காய்கள் வரை இருக்கு. போதுமான தண்ணி இருந்திருந்தா இன்னும் அதிகமா காய்கள் பிடிச்சிருக்கும். அசோஸ்பைரில்லத்துல விதைநேர்த்தி செய்றதாலதான் நோய்த் தாக்குதலைத் தொடர்ந்து சமாளிச்சு பயிர்கள் வளருது” என நம்பிக்கையுடன் சொல்கிறார், ஆரோக்கியம்.