Published:Updated:

தடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

தடுக்க முயன்ற அரசு...  தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!
பிரீமியம் ஸ்டோரி
தடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

போராட்டம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார், தீக்‌ஷித், ம.அரவிந்த்

தடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

போராட்டம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார், தீக்‌ஷித், ம.அரவிந்த்

Published:Updated:
தடுக்க முயன்ற அரசு...  தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!
பிரீமியம் ஸ்டோரி
தடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

மிழக விவசாயிகளுக்கு இது இருண்டகாலம்போல. பல்வேறு இன்னல்களுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வரும் விவசாயிகள், போராட்டக் களங்களிலேயே நிற்க வேண்டியிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் நடந்துவரும் போராட்டம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாள்கள் டெல்லியில் நடந்து வந்த போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் 19 நாள்கள் நடந்த காத்திருப்புப் போராட்டம் எனத் தமிழக விவசாயிகளின் போராட்டங்கள், உலகத்தின் பார்வையையே தமிழகத்தை நோக்கி குவிய வைத்திருக்கின்றன.

தடுக்க முயன்ற அரசு...  தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவுக்கரங்களை நீட்டினர். சமூக வலை தளங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான பரப்புரைகள் வெகு வேகமாகப் பரவிவந்தன.

ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் இறங்கி வராத நிலையில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் போன்ற அரசியல் கட்சிகளோடு வணிகர் சங்கங்கள், பல்வேறு விவசாயச் சங்கங்கள் ஆகியவை இணைந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடுக்க முயன்ற அரசு...  தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!இந்த வேலை நிறுத்தம், கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என ஆளும்கட்சி பெரும் முயற்சி எடுத்தும், பொதுமக்கள் கொடுத்த ஏகோபித்த ஆதரவால், எழுச்சியுடன் நடந்தது இந்தப் போராட்டம். தமிழகம் முழுவதும் 85 சதவிகிதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஆட்டோ, லாரி, பேருந்துகள் ஆகியவையும் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்துக்கு வழி இல்லாததால், அரசு அலுவலகங்களே வெறிச்சோடிக் கிடந்தன.

போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகைப் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்டாலின், திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் எழுபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

தடுக்க முயன்ற அரசு...  தவிடுபொடியாக்கிய ஒற்றுமை!

இப்போராட்டம் விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும் சூழ்நிலையில், நம்மிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, “அனைத்துத் தரப்பு மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுப் போராடியதை மனதார வரவேற்கிறோம். இது எங்கள் பிரச்னை மட்டுமல்ல. உணவு உற்பத்தி கைவிடப்பட்டால் நம் மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். காவிரித் தண்ணீரை மத்திய அரசு பெற்றுத் தரவில்லை. நிலத்தடி நீர் வற்றி விட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு விளைவிக்கப்படும் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

இதனால், விவசாயிகள் பெரும் கடன் சுமையில் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய 6,139 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியா முழுவதுமுள்ள மொத்த விவசாயக் கடனே 72 ஆயிரம் கோடி ரூபாய்தான். மத்திய அரசுக்கு இது, மிகச் சாதாரண தொகைதான். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் பட்டியலில் வைத்துத் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறார்கள்” என்ற அய்யாக்கண்ணு, “கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற மே 25-ம் தேதி மீண்டும் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism