Published:Updated:

மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!
பிரீமியம் ஸ்டோரி
மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

திட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், கா.முரளி

மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

திட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், கா.முரளி

Published:Updated:
மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!
பிரீமியம் ஸ்டோரி
மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

சிறுதானியங்களைப் பற்றிய விழிப்பு உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதன் தேவை அதிகரித்து வருகிறது. அதனால், உற்பத்தியையும் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் வேளாண்மைத் துறை சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது மானாவாரி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நீடித்த, நிலையான மானாவாரி வேளாண்மைக்கான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் மற்றும் பருத்தி ஆகியவை இத்திட்டத்தில் இடம் பிடிக்கின்றன.

இத்திட்டங்கள் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே...

மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

“பொதுவாகவே தமிழகம் மிதமான மழை பெய்யும் பகுதி. சென்ற ஆண்டிலும் சரி, இந்த ஆண்டிலும் சரி... போதுமான மழை இன்னும் பெய்யவில்லை. அதனால், தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களைச் சாகுபடி செய்ய விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்து வருகிறோம். அந்தவகையில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழகத்தில் சிறுதானியச் சாகுபடியின் மொத்தச் சாகுபடிப் பரப்பு 11 சதவிகிதம். இதில் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், தினை, சாமை, குதிரைவாலி, வரகு ஆகிய பயிர்கள் அடங்கும்.

2011-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிறுதானிய உற்பத்தி 15,5 லட்சம் டன் அளவில் இருந்தது. 2014-15-ம் ஆண்டில் 40 லட்சம் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் சிறுதானிய விளைச்சல் தேசிய சராசரியைவிட ஒரு ஹெக்டேருக்கு 1,700 கிலோ அதிகமாக உள்ளது. இதிலிருந்தே தமிழகம் சிறுதானிய சாகுபடிக்கேற்ற பூமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாகவே சிறுதானியங்களின் உற்பத்தி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக, மத்திய அரசு தமிழக வேளாண்துறைக்கு ‘கிருஷி கர்மாண் விருது’ வழங்கி கௌரவித்திருக்கிறது.

2016-17-ம் ஆண்டில் ‘நீடித்த நிலையான மானாவாரிச் சாகுபடித் திட்டம்’ நான்கு ஆண்டுகளுக்குச் செயல்படுத்தபட இருக்கிறது. இதற்காக 802.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்புக்கு 2,500 ஏக்கர் என்ற கணக்கில் 1,000 தொகுப்புகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் சிறுதானியச் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும். இத்திட்டத்தில் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இணைந்து பயன் பெறலாம். இது முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் முன்னெடுக்கப்படும் திட்டம். உயிர் உரங்கள் மட்டுமே திட்டத்தின் கீழ் இடுபொருள்களாக வழங்கப்படும். சிறுதானியங்களோடு பருத்தி, பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களையும் இத்திட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தமிழ்நாட்டில் கரீப் பருவம் (சித்திரை, வைகாசி, ஆடி மாதங்கள்), அதிகளவில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படும் காலம். இந்த ஆண்டில்(2017-18) 200 தொகுப்புகளும், 400 தொகுப்புகளுக்கு முதற்கட்ட பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக, ‘மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டுக் குழு’ ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் உருவாக்கப்படும். இந்தக் குழுவில் இணைவதன் மூலம் நீராதாரங்கள், பண்ணைக்குட்டை, கசிவுநீர்க் குட்டைகள் ஆகியவை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக உருவாக்கித் தரப்படும். வேளாண் துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்ட ‘தொகுப்பு மேம்பாட்டுக் குழு’ (Cluster Development Team) இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

இந்தத் தொகுப்புத் திட்டத்தில் இணைந்து மானாவாரியாகப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உழவு ஓட்டுவதற்கு, ஏக்கருக்கு 500 ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்படும். இதேபோன்று தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்கலவை ஆகியவற்றை வாங்குவதற்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும். உழவு, அறுவடை, மதிப்புக்கூட்டுதல் என அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

இத்திட்டத்தின் மூலம், விதை விதைக்கும் கருவியை (Seed Drilling Machine) பயன்படுத்தி விதைக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். இதன்மூலம் விதைக்கும்போது வரிசையாகவும், சீரான இடைவெளியிலும் விதைகள் விதைக்கப்படும். இதனால், களை எடுக்கும்போது சிரமம் இருக்காது. பயிர்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். இக்கருவி, வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகைக்குக் கிடைக்கிறது. மானிய விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஏற்கெனவே, வேளாண் விற்பனைத்துறை மூலம் விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் விற்பனைக்கான ஆலோசனை வழங்கப்படும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வைத்து விற்பனை செய்வதற்கும் வழிகாட்டப்படும்.
இதோடு அறுவடையான சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை மதிப்புக்கூட்டுவதற்குப் பருப்பு உடைக்கும் கருவி, சிறுதானியங்கள் தோல் நீக்கும் கருவி, எண்ணெய் அரைக்கும் இயந்திரம் ஆகியவை இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். தொகுப்பில் உள்ள விவசாயிகள் கூட்டாக இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இறவையில் சிறுதானியச் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சாகுபடியை மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் உயிர் உரங்கள், விதைகள் ஆகியவற்றைப் பெறலாம்” என்ற தட்சிணாமூர்த்தி நிறைவாக, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மீதியுள்ள 25 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணப்பயிர்களைச் சாகுபடி செய்து... தண்ணீர்ப் பற்றாக்குறையால் காய விடுவதைவிட, சிறுதானியங்கள், பயறு வகைகளைச் சாகுபடி செய்தால் நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். சிறுதானியங்கள் வருமானத்துக்கு உத்தரவாதமுள்ள பயிர் என்பதால், தயக்கமில்லாமல் சாகுபடி செய்யலாம். விற்பனைக்கும் பிரச்னை இருக்காது.
இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் உதவி அலுவலர் அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குநர், வட்டார அலுவலர்களை அணுகினால் வழிகாட்டுவார்கள்” என்றார்.

தொடர்புக்கு,
இயக்குநர், வேளாண்மைத் துறை,
சேப்பாக்கம், சென்னை-5
தொலைபேசி: 044 28583323

நுண்ணீர்ப் பாசனம்

“2017-18-ம் ஆண்டில் 394.86 கோடி ரூபாயில் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தபட இருக்கிறது. கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 85,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை மானியம் கிடைக்கும். தென்னை போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 23,500 ரூபாய் மானியம் கிடைக்கும்.

மற்ற பயிர்களுக்குச் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் கிடைக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தவிர்க்க மழைத்தூவான் (ரெயின்கன்) மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகளைப் பயன்படுத்தி நீர்ப் பாசனம் செய்யவும் மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கருவிகளை நிலத்தில் ஒரே இடத்தில் வைத்து, நீர் பாய்ச்ச வேண்டியதில்லை. ஆங்காங்கே இடம் மாற்றி வைத்தும் நீர்ப் பாசனம் செய்யலாம்” என்கிறார், தட்சிணாமூர்த்தி.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள்!

* உழவு ஏக்கருக்கு ரூ. 500 மானியம்.

* விதைகள், இடுபொருள்கள் வாங்க 50 சதவிகித மானியம்.

* நுழைவுநிலை செயல்பாடுகளுக்கு தொகுப்பு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* நிலத்தில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த, தொகுப்பு ஒன்றுக்கு 7.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

* மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.4 லட்சம்/தொடங்க வேளாண்மை/கூட்டுறவு சங்கம் வழியாக தொகுப்பு ஒன்றுக்கு ரூ.10 லட்சம்

* கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு நவீன வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் அமைக்கப்படும். இதில் தொகுப்பு ஒன்றுக்கு ரூ.10 லட்சம் (80% மானியம்) வழங்க வழிவகை செய்யப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism