Published:Updated:

“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

நாட்டு நடப்புஜெ.சாய்ராம்

“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

நாட்டு நடப்புஜெ.சாய்ராம்

Published:Updated:
“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

 இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, நபார்டு வங்கி ஆகியவை இணைந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாட்டை நடத்தின. இம்மாநாட்டில் சிறுதானிய விவசாயிகள், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர், “உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப்பழக்கம் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில்... ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய இளைஞர்களிடம், சிறுதானியங்கள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். தொழில் செய்வோரின் கருத்தைப் பிரதிபலிப்பதில் சங்கங்கள் முக்கியப் பங்கை வகிப்பதால், சிறுதானிய விவசாயிகளின் குரலை அனைவரும் அறியும் வகையில் சங்கம் ஒன்றை அமைக்கலாம்” என்றார்.

நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, “தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிறுதானிய உணவு பொருள்களுக்கான சந்தையைப் பலப்படுத்துவதன் மூலம் சிறுதானியத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சித்த மருத்துவர் கு.சிவராமன், “சிறுதானியங்கள் குறித்த ஆய்வுகள் கடந்த 45 ஆண்டுகளில் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. அனைத்து வயதினருக்கும் ஏற்றவை. சிறுதானியம் போன்ற பாரம்பர்ய உணவு வகைகளைத் தரப்படுத்துவதன் அவசியமும், அதன் மூலம் நுகர்வோரைக் கவர்ந்து சிறுதானியங்களுக்கான சந்தையை நிலைநாட்டுவதும் தற்போதைய சூழலில் தேவையாக உள்ளது” என்றார்.

தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, “தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையின் காரணமாக, தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு ஆகிய பயிர்களைத் தவிர்த்து... நீர் குறைவாகத் தேவைப்படும் சிறுதானியம் மற்றும் பயறு வகைகளைப் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. குறிப்பாக 802.9 கோடி ரூபாயில் மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

சுமார் 200 பேர் பங்கேற்ற இம்மாநாட்டில் சிறுதானியங்களின் நன்மைகள், பயன்பாடு, தற்போதைய தொழில்நுட்பங்கள் குறித்து பேசப்பட்டன. சிறுதானிய விவசாயத்திலும், உணவுப்பொருள் தயாரிப்பிலும் வெற்றிபெற்ற விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்ற கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism